Skip to main content

Posts

Showing posts from April, 2024

மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் சார்பில் நடைபெற்ற 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழி காட்டும் நிகழ்ச்சி..!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள  தத்தனூர்   மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள், கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரி சார்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு  மாணவர்களுக்கான உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் வழக்கறிஞர். M.R. இரகுநாதன்,மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின்  இயக்குநர்கள் இரா.இராஜமாணிக்கம், முனைவர் வை.தியாகராஜன் ,  கீழப்பழுவூர் மீரா மகளிர் கல்லூரி தாளாளர் M.R  கமல்பாபு மற்றும் அன்னை தெரசா பாரா மெடிக்கல் கல்லூரியின் தாளாளர், முத்துகுமரன், மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  முதல்வர்  முனைவர் சங்கீதா, முனைவர் மதியழகன், சிவசங்கர், முனைவர் சம்பத், முனைவர் மாலதி, முனைவர் அன்பழகன், முனைவர் திருமுருகன்  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.   10,12 ம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் எந்தெ...

கோவை மாவட்டத்தில் உயர்ரக போதை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது..!

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன்,  முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று  மதுக்கரை  பகுதியில்  உயர்ரக போதை பொருளான மெத்தமெட்டமைனை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுக்கரை காவல் நிலைய காவல்துறையினர் மதுக்கரை அடுத்த  மச்சகவுண்டன் பாளையம் அருகே  விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு  உயர்ரக போதை பொருளான மெத்தமெட்டமைன் வைத்திருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராசு என்பவரது  மகன் திவாகர் (22)* என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5.750 கிராம் எடையுள்ள உயர்ரக போதை பொருளான மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்து, திவாகரனை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் பட்டுராஜ் 

கள்ளக்காதல் கொலை குற்றவாளி இருவருக்கு ஆயுள் தண்டனை..!

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வசித்தவர் அமுதா (36). இவருக்கும்  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான  சங்கர் ஆகியோர் இருவரும் கள்ளகாதல் ஏற்பட்டது  இவர்களது கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த அமுதாவின் கணவர் நாகராஜ்(35) என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு  இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். இந்த குற்றத்திற்காக  மதுக்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரையும் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்டம் 1-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இவ்வழக்கின் விசாரணை இன்று முடிவு பெற்று கொலை குற்றவாளிகளான அமுதா (36) மற்றும் சங்கர் (32) ஆகியோர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.6000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார் இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமைக் காவலர்  ஆனந்தகுமாரை  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் பட்டுராஜ் 

மாப்பிள்ளையூரணி முத்துமாாியம்மன் கோவில் கொடை விழா..!

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட டேவிஸ்புரம் முத்துமாாியம்மன்கோவில் உச்சிமகாளியம்மன், காளியம்மன் பேச்சியம்மன், கருப்பசாமி, முனியசாமி, இசக்கியம்மன், பைரவர், ஆகிய பாிவார மூா்த்திகளுக்கு கொடை விழாவையொட்டி கடந்த 23ம் தேதி கால்நட்டு விழா நடைபெற்று தினசரி பூஜைகளுடன் 8ம் நாள் மதிய கொடை நடைபெற்று பொதுமக்கள் கலந்து கொண்ட சமபந்தி அன்னதான விருந்தை தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார் தொடங்கி வைத்து உணவருந்தினார். விழாவில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, தொழிலதிபர் யோகராஜ், கோவில் தர்மகர்த்தா மாாியப்பன், செயலாளர் முக்கான்டி, பொருளாளர் முனியசாமி, துணைத்தலைவர் கருப்பசாமி, துணைச்செயலாளர் பாலமுருகன், கோவில் பூசாாி சாஸ்தா, திமுக இளைஞர் அணி கௌதம், உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர் ஜேம்ஸ் ரவி 

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம்..!

 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள்பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீசௌந்தர்யவல்லி தாயார் சமேத கரி  கிருஷ்ண பெருமாள் திருக்கோயிலில்  சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 23ஆம் தேதி  துவங்கியது முக்கிய விழாவாக.இன்றுதிருத்தேரோட்டம்  வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில்  பொன்னேரி செங்குன்றம் கும்முடிப்பூண்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகளில் இழுத்து வந்து பெருமாளை தரிசனம் செய்தனர். முன்னதாக பொன்னேரி சின்னக்காவனம் பெரிய காவனம்  ஆலாடு உள்ளிட்ட ஐந்து கிராம மக்கள் சார்பில் காய்கறி பழ வகைகள் இனிப்பு வகைகள் கொண்ட சீர் சுமந்து பெருமாளுக்கு படைத்து வழிபாடு நடத்தினர். தேர் ஓடிய முக்கிய வீதிகளில் பக்தர்கள் திரளாக வந்து தீபாராதனை செய்து பெருமாளுக்கு நெய்வேதியம் அளித்து வழிபாடு செய்தனர் இதில் இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர்கள் பிரகாஷ் ராஜசேகர் பிரபாகரன் ஆய்வாளர் கார்த்திகேயன் விக்கி சுப்பிரமணி பொன்னேரி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் கும்மிடிப்பூண்...

செங்குன்றம் அருகே யுவ கலை விளையாட்டு கலைக்கூடம் சார்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது..!

 யுவ கலை விளையாட்டு கலைக்கூடம், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் இணைந்து 5 வயது முதல் 25 வயது வரை தனித் தனி பிரிவுகளாக மாநில அளவிலான சிலம்பப் போட்டியை யுவ கலை விளையாட்டு கலைக் கூடம் நிறுவனரும் செயலாளருமான ரதி ராஜா தலைமையில் செங்குன்றம் அடுத்த வடகரை ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.லயன்ஸ் கிளப் 324 ஜெ மாவட்ட ஆளுநர் வி.பஜேந்திரபாபு, மாவட்ட ஆளுநர்  ஏ.டி. ரவிச்சந்திரன், முதல் நிலை ஆளுநர்  பி.மணிசேகர், இரண்டாம் நிலை ஆளுநர்  நரசிம்மன், மாவட்டச் செயலாளர்  எழில்வளவன்  ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வழங்கி கௌரவித்தனர்.பாடியநல்லூர் லயன்ஸ் சங்க நிர்வாகி கா.ஷண்முக சுந்தரம் அனைவரையும் வரவேற்றார். அஷ்டேடு அகாடா தமிழ்நாடு மாநிலத் தலைவர் பி.செந்தில் நாதன், பொதுச் செயலாளர் எஸ்.புவனேஸ்வரி, ஓய்வு பெற்ற ஜெயிலர் எஸ்.ஜெயராமன், சுப்பிரமணிய ஆசான் சிலம்பக் கலைக் கூட நிறுவனர் வி.ஹரிதாஸ், டாக்டர் டேவிட் மார்ச்சல் ஆர்ட்ஸ் அகாடமி சிலம்பம் நிறுவனர் கே.பார்த்திபன், லயன்ஸ் சங்க வட்டாரத...

உடையார்பாளையத்தில் இல டி.என்.பி.எஸ்.சி அகாடமி மற்றும் முழு நேர கிளை நூலகம் இணைந்து குரூப் 4 க்கான இலவச மாதிரி தேர்வு நடத்தியது..!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் முழு நேர கிளை நூலகம் மற்றும் இல டி.என்.பி.எஸ்.சி அகாடமி இணைந்து குரூப் 4 க்கான இலவச மாதிரி தேர்வு உடையார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.இதில் 250 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.தேர்வினை அரியலூர் மாவட்ட நூலக அலுவலர் இரா.ஆண்டால் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.உடையார்பாளையம் முழு நேர கிளை நூலக அலுவலர் இரா. முருகானந்தம் வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் மலர் மண்ணன், உடையார்பாளையம் விஏஓ எஸ்.ராஜா, முன்னாள் ராணுவ வீரர் சி.ரமேஷ் குமார்,எம்பளாய்மெண்ட் அலுவலக ஊழியர் கெ.சந்தியா, ரமேஷ், ஆனந்தன், மற்றும் பாரூக் முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். முன்னதாக தேர்வு காலை 10.10 க்கு தொடங்கி மதியம் 1.10 க்கு முடிந்தது.உடனே தேர்வு பேப்பரை திருத்தி மதிப்பெண் அளிக்கப்பட்டது.இதில் முதல் ணமதிப்பெண் பெற்ற மாணவர் பெரியசாமிக்கு ரூபாய் 10 ஆயிரமும்,2 ஆம் இடம் பிடித்த மாணவி சிவசங்கரிக்கு ரூபாய் 7 ஆயிரமும், 3 ஆம் இடம் பிடித்த மாணவி வானதிக்கு ரூபாய் 5 ஆயிரமும், 4 இடம் பிடித்த மாணவி பவித்ராவுக்கு...

குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை, அப்புறப்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் மனு.

கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் பாம்பே நகர் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான, காட்டன் ரீலிங் தொழிற்சாலையால் சுற்றுப்புறச் சூழல், காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படுவதால், தொழிற்சாலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு அளித்துள்ளனர். இது குறித்து மனுதாரர்கள் ஜீவானந்தம் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோர் கூறும் போது. நரசிம்மநாயக்கன்பாளையம் அருகில் உள்ள குருடம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கதவு எண் 31, பாம்பே நகர் என்ற இடத்தில், ஸ்ரீ குமரன் டெக்ஸ் என்ற பெயரில் காட்டன் ரீலிங் தொழிற்சாலை கடந்த 9 மாத காலமாக இயங்கி வருகிறது. இந்த இடம் பாம்பே நகர், பாரதி நகர், கல்யாணசுந்தரம் நகர் ஆகிய பகுதிகள் அடங்கிய  பகுதியாகும். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஸ்ரீ குமரன் டெக்ஸ்ட் என்ற தொழிற்சாலை அந்த பகுதியில் துவங்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து காட்டன் தூசு அதிக அளவில் வெளியேறுகிறது. அதேபோல ...

புழல் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு விழா

சென்னை புழல் கேம்ப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை அருகில் புழல் பகுதி பொறுப்பாளர் புழல் வழக்கறிஞர் எம்.தேவேந்திரன் தலைமையில் புழல் வட்டார காங்கிரஸ் கமிட்டில் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு பொது மக்களின் தேவைக்காக தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. திருவள்ளூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.எம். தாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து தர்பூசணி, முலாம் பழம், ஜுஸ் வகைகளை பொதுமக்களுக்கு  வழங்கினார். இந்நிகழ்வில் வழக்கறிஞர் புழல் எம்.ஜெயசீலன், திருவள்ளூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஜி.அச்சுதன், மாநில பொதுக் குழு உறுப்பினர் புழல்  ஜி.குபேந்திரன் ஆகியோர் சிறப்பு டி.பலராமன், மாவட்ட பொதுச் செயலாளர் காங்கை குமார், பி.கிரி, வட்டாரத் தலைவர்கள் நித்தியானந்தம், ஆத்தூர் வேல்முருகன், பாடியநல்லூர் ரஜினி, கிருஷ்ணமூர்த்தி, சோழவரம் கே.எம். மணிகண்டன், லயன் ஜி.பாலாஜி, வி.விஜய், எஸ்.பிரதீப், ஜி.ராகுல்காந்தி, ஆர்.நாகராஜ், எம்.ரவிச்சந்திரன், சைன்ஷா, பிரபு, சாம்ராஜ், கதிர்வேடு எஸ்.குமார், மாவட்டச் செயலாளர் எம்.ஏ. தண்டபாணி, புழல் சுற்றுவட்டார வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்லத...

பண்ருட்டி அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது..!

 கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மேல்பட்டாம்பாக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தணிகைச் செல்வன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில்,டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் வழியில் கொள்கை மாறாமல் சமுதாயப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சேப்பாக்கம் ஜெ.பிரகாஷ்  உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளை அழைத்து  பொன்னாடை போற்றி யானைச் சின்னம் பொறித்த கேடயம் வழங்கி பாராட்டினார்.அப்போது, மக்கள் தொண்டன் சு .திருமாறன் உட்பட பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். செய்தியாளர் விஜய் 

அதிமுக சார்பில் திருவள்ளூர் மாவட்ட கழக செயலாளர் பலராமன் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்..!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட. மேலூர் மற்றும் பழவேற்காட்டில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைகிணங்க  தண்ணீர் பந்தலை மாவட்ட கழகச் செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் திறந்து வைத்தார். பொது மக்களுக்கு இளநீர் தர்பூசணி மோர் குளிர்பானம் வெள்ளரிக்காய் நுங்கு உள்ளிட்டவைகளை  வழங்கினார். இதில் இதில் ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார் அமிர்தலிங்கம் திராவிட செல்வன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மீஞ்சூர் ஒன்றிய கழக  செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் சுமத்ரா குமார் செவ்வழகி எர்ணாவூரான் சம்பத் கந்தசாமி தாஸ் கலைமணி பாஸ்கர் சூரி  உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  செய்தியாளர் ராதாகிருஷ்ணன் 

ரெட்டம்பேடு அருள்மிகு வெண்ணியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா..!

 திருவள்ளூர் மாவட்டம் ரெட்டம்பேடு  கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெண்ணிஅம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது யாக கலச பூஜைகளுடன் புண்ணிய நதிகளின் நீர் கொண்டு கோபுர கலசங்களுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது பின்னர் பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது இதில் பொன்னேரி கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை  தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில்  கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், ஒன்றிய கவுன்சிலர் மெய்யழகன், முன்னாள் ஊராட்சி தலைவர் முரளி, ஊராட்சிமன்ற  தலைவர் எல்லம்மாள் சங்கர்,  செந்தில், ஆத்துப்பாக்கம் ஊராட்சி செயலர் குருமூர்த்தி,  ஜெயகோபி,  முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோபி, அதிமுக மணி, ஆகியோர் கலந்து கொண்டனர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கி கோவில் நிர்வாகத்தினர் கிராம மக்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். செய்தியாளர் ராதாகிருஷ்ணன் 

தேனி மாவட்டம் மூர்த்தி நாயக்கன் பட்டியில் அம்மன் சிலை மீது சூரிய ஒளிபடும்அபூர்வ நிகழ்வு..!

 தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மூர்த்தி நாயக்கன்பட்டியில் நகரிகுல பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சூடம்மாள் அம்மன் ஆலயம் உள்ளது. இங்கே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 27, 28 , 29 தேதிகளில் காலை சுமார் 6.45 மணி முதல் 6.52 வரை சூரிய ஒளிக் கதிர்கள் கோயில் கருவறையில் அமைந்துள்ள அம்மன் சிலை மீதுபடும் அபூர்வ நிகழ்வு நடந்து வருகிறது .        வழக்கமாக நடந்த அந்த அரியநிகழ்வில் இன்றும் அதே நேரப்படி நடந்தது சூரிய பகவான் அம்மனை வழிபடுவதாக பக்தர்கள் பரவசத்தோடு பங்கேற்றனர்.200 ஆண்டுகளுக்கு முன்னதாக முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் பெட்டகத்தில் இருந்த பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந் நீலையில் ஏராளமான பக்த்தர்கள் அம்மனனவழிபாடுபசெய்து சாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர் விஜயலிங்க ராஜா 

ஸ்ரீரங்கத்தில் சாலையில் ஏற்ப்பட்ட திடீர் மெகா பள்ளம் சீரமைப்பு பணிகள் 2-வது நாளாக தீவிரம்..!

 ஸ்ரீரங்கத்தில் சாலையில்,மீண்டும் ஏற்பட்ட திடீர் மெகா பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் இரண்டாம் நாளாக தொடர்கிறது.திருச்சி திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி ரோடு சாலை ரயில்வே மேம்பாலத்திற்கு முன்பாக நேற்று காலை திடீர் மெகா பள்ளம் ஏற்பட்டது..சாலையின் கீழ் சுமார் 7 அடியில் ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை சிமெண்ட்குழாய் உடைந்து சாலையில் மிகப்பெரிய ஓட்டை விழுந்தது.அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் அவ் வழியே செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.மெகா பள்ளம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் அனைத்து வாகனங்களும் திருப்பிவிடப்படுகிறது. உடைந்த குழாயை மாற்றி பள்ளத்தை சீர் செய்யும் பணிகள் இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது.உடைந்த இந்த குழாய் கடந்த 1977 ம் ஆண்டு பதிக்கப்பட்டது.இது நாள் வரை குழாய்கள் தாக்கு பிடித்ததே அதிசயமாக பார்க்கப்படுகிறது.ஏறத்தாழ 47 ஆண்டுகள் பழமையான இந்த குழாய்கள் ஸ்ரீரங்கத்தை சுற்றி சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு பதிக்கப்பட்டுள்ளது.எனவே இவை அனைத்தையும் அகற்றிவிட்டு இரும்பு குழ...

வேப்பூர் அருகே தனியார் நாளிதழ் செய்தியாளர் மீது சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்கள் தாக்குதல்..!

 கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் கடந்த மகாவீர் ஜெயந்தி அன்று சிலர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற தனியார் நாளிதழ் (மக்கள் மலர்)  செய்தியாளர் வேலன் என்பவர் அதனை வீடியோ  எடுத்துள்ளார் இதனைப் பார்த்த சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டவர்கள் செய்தியாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை  அடுத்து அங்கிருந்து வந்த செய்தியாளர் காவல் நிலையத்திற்கு சட்டவிரோத மது விற்பனை குறித்து தகவல் அளித்துள்ளார்.  இந்த நிலையில் இன்று தனியார் நாளிதழ் செய்தியாளர் வேலன் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவருடன் கழுதூர்  அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளனர் அவர்கள் அந்த வழியாக வரும் தகவலை அறிந்த சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் செய்தியாளர் வேலனை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர் இதில் காயமடைந்த  வேலனை வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் இதுகுறித்து வேப்பூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர் மேலும் சட்டவிரோத மது பாட்டில் விற்பனையை த...

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா..!

 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு கரி கிருஷ்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்   கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது ஐந்தாம் நாள் உற்சவமாக  நாச்சியார்இன்று  ஊஞ்சல் ஊர்வலமும் இரவு கருட வாகனத்தில் பெருமாள் வலம் வந்து அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு நிகழ்வு இன்று இரவு நடைபெறுகிறது தொடர்ந்து பிரம்மோற்சவ உற்சவம் 12 நாட்கள் தொடர்ந்து  நடைபெறுகிறது.  முக்கிய விழாவாக வருகிற  29ஆம் தேதி திருத்தேராட்டம் 3ஆம்  தேதி தெப்ப உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. சித்திரை பிரம்மோற்சவ சந்திப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் ராதா கிருஷ்ணன் 

செங்குன்றம் அருமந்தை ஜி.எப்.சி குளோபல் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா..!

 செங்குன்றம் அருகே சோழவரம் ஊராட்சி ஒன்றியம் அருமந்தை அடுத்த மாபுஸ்கான் பேட்டை ஊராட்சியில் உள்ள புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஜி.எப்.சி. குளோபல் பப்ளிக் பள்ளியில் 2023- 2024 கல்வி ஆண்டிற்கான விளையாட்டு தின நிகழ்ச்சி பள்ளித் தாளாளர் கே.என்.ரங்கநாதன் தலைமையில் பள்ளி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் பள்ளி முதல்வர் இந்துமதி வரவேற்புரை ஆற்றினார். பள்ளி குழும தலைவர் மீராபாய், பள்ளி இயக்குனர்கள் கார்த்திகேயன், சந்தோஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் சிலம்பம், தீப்பந்தம், கம்பு சுற்றுதல், போன்ற சாகசங்கள் செய்து காண்பித்தது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனத்தையும் ஈர்த்தன. இதில் திரைப்பட நடிகரும், மாணவர் பயிற்சியாளருமான நடிகர் தாமு கலந்துகொண்டு மாணவர்களிடம், கல்வியின் எதிர்காலம் குறித்தும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை எவ்வாறு மதித்து நடக்க வேண்டும் என்பது குறித்தும், மாணவர்களின் வளர்ச்சிக்காக அவர்கள் படும...

சத்தியமங்கலத்தில் திட்டம் தீட்டப்பட்ட கோவை கார் குண்டு வெடிப்பு..! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட என்ஐஏ..!

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 14வது நபர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கார் குண்டு வெடிப்புக்கான பின்னணியை வெளியிட்டுள்ளது.கோவை கார் குண்டு வெடிப்பு கோவை, உக்கடம் அருகேயுள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே, 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தற்போது வரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடைசியாக கைது செய்யப்பட்ட, போத்தனூர் திருமலை நகர், மதீனா அவென்யூ பகுதியை சேர்ந்த தாஹா நசீர் என்பவர் மீது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று 3வது கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் அசாருதீன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாகவே கோயம்புத்தூரில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 2022 அக்டோபர் 23 அன்று நடந்த கார் குண்டுவெடிப்பில் ஜமேஷா முபீன் உயிரிழந்ததாகவும், ஐஎஸ் ஆதரவாளரான ...

கண்டப்பன்குறிச்சி ஸ்ரீ பவானி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை விழா.!

 கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள கண்டப்பன்குறிச்சி ஸ்ரீ பவானி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கும் விழா கல்லூரியின் தாளாளர் ஜெ. நாராயணன் தலைமையில் நடந்தது. ஸ்ரீ பவானி கல்வி குழுமத்தின் செயலாளர் மகாலட்சுமி நாராயணன் ‌ குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார்.ஸ்ரீ பவானி கல்வி குழுமத்தின் நிர்வாக அலுவலர் பொன். சடையமுத்து வரவேற்புரையாற்றினார். ஸ்ரீ பவானி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் க. பாலமுருகன், ஸ்ரீ பவானி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.தொடர்ந்து, கல்லூரி மாணவர்களின் பிரிவு உபசார விழா நடந்தது, விழாவில் கல்லூரி மாணவ மாணவிகள் தங்களது நடன திறமைகளை வெளிப்படுத்தினர். அப்பொழுது பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டி மாணவர்களை வழி அனுப்பி வைத்தனர். செய்தியாளர் விஜய் 

புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் 1.11 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்..!

 புழல் ஊராட்சி ஒன்றியத்தில் தீர்த்தக்கரையம்பட்டு, புள்ளிலைன், அழிஞ்சிவாக்கம், வடகரை, கிரான்ட்லைன், விளாங்காடு பாக்கம், சென்றம்ம்பாக்கம் ஆகிய 7 ஊராட்சிகள் உள்ளது.இந்த ஊராட்சிகளில் உள்ள பல்வேறு பணிகளுக்கு ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் சென்றது.இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் புழல் பிடிஓ அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்ற சோதனையில் கேட்பாரற்று கிடந்த 1.11 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  பிடிஓ அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை  லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையானது நள்ளிரவு சுமார் 12மணி வரை என சுமார் 9மணி நேரம் நீடித்தது.சோதனையை முடித்து கொண்டு புறப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்  என தெரிவித்தனர்.பிடிஓ அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனையால் நேற்று புழல் ஒன்றிய அல...

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா..!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள வட காஞ்சி என அழைக்கப்படும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி நாயகி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில்  கும்பாபிஷேக விழாவானது சுமார் ஒரு கோடி மதிப்பில்  புனரமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.யாக கலச பூஜைகளுடன் கலசநீர் மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கலச நீர் கொண்டு ராஜகோபுரம் விமான கலசங்களுக்கும் ஸ்ரீ பெருந்தேவிக்கும் வரதராஜ பெருமாளுக்கும்  ஆண்டாள் ராமானுஜர்  உள்ளிட்ட தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது இதில் பொன்னேரி மீஞ்சூர் செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வரதராஜ பெருமாளை தரிசனம் செய்தனர்.  கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் கார்த்திகேயன் மாதவன் ராஜசேகர் ஆய்வாளர் கார்த்திகேயன் ரோசய்யா மு.க.தமிழரசு பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை ...

நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை நிகழ்ச்சி..!

சென்னை புழல் கதிர்வேடு பகுதியில் இயங்கி வரும் நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 9 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சமுதாயத்தில் நலிவடைந்த மாணவ மாணவிகள் அனைவருக்கும் பல்வேறு இலவச தொழிற் திறன் மேம்பாட்டு பயிற்சியை அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது.இந்த நிலையில்  இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தரபாண்டியன் தலைமையில் 4வது முறை சாதனையாக ஏசியா புக் ஆப் ரெகார்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்வு நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்றது.இங்கு தொழிற்பயிற்சி பெற்ற 20 இளைஞர்களை தேர்ந்தெடுத்து 10 இருசக்கர வாகனங்களை 10 நிமிடத்தில் தனித்தனியே  பிரித்து மற்றும் முழுவதுமாக ஒன்றிணைத்து இயங்க வைக்கும் நிகழ்வு ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில்  பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் மூத்த தொழில்நுட்ப வல்லுனர் கிருஷ்ணகுமார், வருமானவரித்துறை ஆணையர் நந்தகுமார், புழல் சரக காவல் உதவி ஆணையர் சகாதேவன், பெருநகர சென்னை மாநகராட்சி புழல் கதிர்வேடு 31 வது வார்டு...

உடையார்பாளையம் அதிமுக நகர சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா..!

 கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி   ஆணைக்கிணங்க தமிழக முழுவதும்  அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்று வருகிறது.அதன்படி அரியலூர் மாவட்டம்  உடையார்பாளையம்  அதிமுக நகர செயலாளர் அழகேசன்  ஏற்பாட்டில் உடையார்பாளையம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கோடைகால நீர் மோர் பந்தலை அரியலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.இராஜேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, வெள்ளரி பிஞ்சு உள்ளிட்டவைகளை வழங்கினர்.  இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் ராமஜெயலிங்கம்,மாவட்ட  துணை செயலாளர் தங்க பிச்சமுத்து, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ஜெயராமன்,நகர அவைத் தலைவர் சைத்மகதூம், நகர பொருளாளர் புருஷோத்தமன் அரசு ஓய்வு பெற்ற நடத்துநர் எஸ்.ராமச்சந்திரன், புரட்சி வீரன் பெரியசாமி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,நகர கழக பொறுப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் முணியத்தரியான்பட்டி அதிமுக உறுப்பினர் அ...

போதை பொருட்கள் எனக்கு வேண்டாம்..! நமக்கும் வேண்டாம்..! - ஆவடி காவல் ஆணையர் சங்கர் மாணவர்களுக்கு அறிவுரை..!

 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில்  கல்லூரி நாள் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா இன்று நடைபெற்றது இதில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் முனைவர் கல்லூரிமுதல்வர் தில்லைநாயகி முனைவர்கள் திருச்சேரன் சொர்ண முத்துராஜ்,சாமுவேல் செல்வராஜ் சுருளி முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கும் அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளி வழங்கி பாராட்டி பேசுகையில் போதை பொருட்கள் எவ்வளவு இளைஞர்களின் வாழ்க்கையை  சீரழிக்கிறது என்றும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் போதைக்கு அடிமையாகும் போது எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறையினரின் முயற்சி மட்டும் போதாது போதை பொருட்கள் எனக்கு வேண்டாம் நமக்கும் வேண்டாம் என இளைஞர்கள் போதை பொருட்களை  தொடக்கூடாது பயன்படுத்தக் கூடாது என்றும் எல்லோரும் சேர்ந்து தான் போதை பொருள் பிரச்சனையை எதிர்கொண்டு  நீக்கலாம் என்று அவர் தெரிவித்தார். செய்தியாளர் ராதாகிருஷ்ணன...

பொன்னேரி மின்வாரியத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா..!

 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மின்வாரிய அலுவலகத்தில் சட்ட மேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு  பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது இதில் அனைத்து மின் வாரிய செயற் பொறியாளர்கள் உதவி செயற்பொறியாளர்கள கலைக்குழுவினர் பங்கேற்று சிறப்பித்து பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்தனர். ஆதித்தமிழர்  கலைக் குழுவினர் பாரம்பரிய தப்பாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர் பின்னர் அனைவருக்கும் பிரியாணி  உணவு வழங்கப்பட்டது  இதில் பா.கதிரேசன் வடக்கு திட்ட தலைவர் சி ஐ டி உதவி செயற் பொறியாளர்கள் பன்னீர்செல்வம் சிவசங்கரன் பெருமாள் ஷீலா ஸ்ரீதர் வெங்கடேசன் கன்னியப்பன் மாநில அமைப்பு செயலாளர் டாக்டர் அம்பேத்கர் பணியாளர் பொறியாளர் சங்கம் கோடீஸ்வரன் வெங்கடேசன் பார்த்திபன் காமராசு எல்லப்பன் குமார் அருள்நாதன் ஜீவா உள்ளிட்ட மின்வாரிய முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். செய்தியாளர் ராதாகிருஷ்ணன் 

திருவள்ளூரில் மழை நீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொன்னேரி வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு..!

 திருவள்ளூர் மாவட்டம் பெரவள்ளூர் போரக்ஸ் நகர் பகுதியில் மெட்டாபிலிம் இந்தியா பிரைவேட் லிமிடெட் என தனியார் தொழிற்சாலை இருந்த இடத்தில் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த வெங்கட் மனிஷ்ரெட்டி  தனியார் ஒருவர் பெரவள்ளூர் ஏரி மற்றும்  அங்குள்ள  மழைநீர் கால்வாய் சுமார் 20க்கும் மேற்பட்ட ஏக்கரில்  ஆக்கிரமிப்பு செய்து  வீட்டுமனைகளாக  மாற்றி விற்பனை செய்வதை தடுத்து முறையாக ஆக்கிரமிப்புகளை ‌அகற்ற கோரி   பொன்னேரி வட்டாட்சியர் அலுவகத்தில்   பாதிக்கப்பட  கிராமமக்கள் வழக்கறிஞர் ராஜா தலைமையும் மனு  அளித்தனர்‌.  மாவட்ட நிர்வாகம் அரசு துறை அதிகாரிகள் தலையிட்டு ஏரி ஆக்கிரமிப்பை மீட்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்  மறியல்போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அளித்தும் தற்போது வரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய தீர்வு  காணப்படவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர். செய்தியாளர் ராதாகிருஷ்ணன் 

என் கர்ப்பத்திற்கு சார்பு ஆய்வாளர் தான் காரணம் - காவல் நிலையம் முன் பெண் தர்ணா..!

காவல் சார்பு ஆய்வாளருடனான திருமணத்தை மீறிய உறவால் கர்ப்பமடைந்த நிலையில், தற்போது தன்னை ஏற்க மறுப்பதாகக் கூறி பெண் ஒருவர் காரைக்குடி மகளிர் காவல் நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமதி (வயது 35). இவர் காரைக்குடி மகளிர் காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், 20 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கலைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகவும், அதன் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து இரண்டாவதாக அதே திண்டுகலைச் சேர்ந்த சரவணன் என்பவருடன் சேர்ந்து வசித்து வந்தேன்.  இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பேஸ்புக் மூலம் பழக்கமான காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சார்பு ஆய்வாளருடன் பழக்கம் ஏற்பட்டு  இருவரும் திருமணத்தை மீறிய தகாத உறவில் வாழ்ந்து வந்தோம்.  இதனால் நான் தற்போது 8 மாத  கர்ப்பிணியாக உள்ளேன். ஆனால் ஆய்வாளர் தன்னை ஏற்க மறு...

புழல் அருகே ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல்

பெருநகர சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல்  அண்ணா நினைவு நகரில் தனியாருக்கு சொந்தமான வண்ண மீன் வளர்ப்பு மையம் உள்ளது. இங்கு ஏற்கனவே 4 ஆழ்துளை கிணறுகள் உள்ள நிலையில், மீண்டும் இங்கு ஆழ்துளை கிணறு அமைக்க போர்வெல் வாகனம் வந்து பணிகளை துவங்கியுள்ளது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர் சேட்டு, ஆலன் மோகன், காந்தி, இன்பராஜ், சாம்ராஜ் உள்ளிட்டோர் இங்கு ஆழ்துளை கிணறு அமைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் எனவே ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த புழல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சமரசம் பேசியதில் போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செய்தியாளர் ரஞ்சித் 

14 வயது சிறுமி பலாத்காரம் - மணப்பாறையில் ஒருவர் கைது

திருச்சி உறையூா் பகுதியைச் சோ்ந்த 14 வயதுச் சிறுமி திருச்சியிலுள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். கடந்த ஏப். 19 ஆம் தேதி பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி திருச்சி அருகேயுள்ள கல்லணைக்கு பேருந்தில் சென்று, அங்கிருந்த பூங்காவில் சுற்றித் திரிந்து உள்ளார். இரவு வெகு நேரமானதால் அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அவா் வந்தபோது மா்ம நபா் ஒருவா் சிறுமியிடம் பேச்சு கொடுத்ததில், சிறுமி வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபா், சிறுமியை மத்தியப் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்து, பின்னா் சிறுமியை கோவைக்கு அழைத்து சென்று, அங்கு ஒரு விடுதியில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னா் சிறுமியிடம் பணத்தைக் கொடுத்து அவரை திருச்சி செல்லுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டாா். இதையடுத்து அச்சிறுமி மறுநாள் திருச்சி வந்தாா். அதன் பின்னரும் வீட்டுக்குச் செல்ல விரும்பாத அச் சிறுமி, மணப்பாறை பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்து பேருந்தில் ஏறி மணப்பாறை சென்றாா். மணப்பாறை பேருந்து நிலையத்தில் வந்து இறங்...

செங்குன்றத்தில் தனியார் (HDFC) வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி..!

செங்குன்றத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை பிடித்து செங்குன்றம் போலீசார் விசாரணை.சென்னை செங்குன்றம் காமராஜர் நகர் ஜி.என்.டி.புறவழிச் சாலையில் பழைய சார் பதிவாளர் அலுவலகம்  அருகே தனியாருக்கு சொந்தமான எச்டிஎப்சி வங்கி இயங்கி வருகின்றது. இங்கு அந்த வங்கியின் ஏடிஎம் மையமும் உள்ளது.நள்ளிரவில் இந்த ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர் கல்லை கொண்டு உடைக்க முயற்சித்தபோது இதனை சிசிடிவி காட்சியில் கண்காணித்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டி இது தொடர்பாக செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் பேரில் செங்குன்றம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார். காவலர்களை கண்டதும் தப்பி ஓட முயன்றவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து செங்குன்றம் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் செங்குன்றம் அடுத்த வடகரையை சேர்ந்த அலெக்ஸாண்டர் (40) என்பது தெரிய வந்தது. ...

லயன் டாக்டர் ஏ.ஆர். தர்மலிங்கம் யாதவ் பிறந்தநாளை முன்னிட்டு 2000 பேருக்கு அன்னதானம்

சமூக பொருளாதார முன்னேற்ற அறக்கட்டளை நிறுவனத் தலைவரும் கொடைவள்ளலுமான லயன் டாக்டர் ஏ.ஆர். தர்மலிங்கம் யாதவ் பிறந்தநாளை முன்னிட்டு 2000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் பிறந்தநாள் விழாவும் செங்குன்றம் அடுத்த காவாங்கரை வெட்டுடை அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில்  லயன் டாக்டர் ஏ.ஆர். தர்மலிங்கம் யாதவ் - ராணி சங்குபதி ஆகியோர் மகன் சசிக்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தனர். பாடியநல்லூர் சுற்றுவட்டாரா யாதவர் நலச் சங்க செயலாளர் எம்.வி. புண்ணியசேகரன், இளைஞர் அணி தலைவர் எம்.சரவணன் யாதவ் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டை மிகச் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்வில் பாடியநல்லூர் சுற்றுவட்டாரா யாதவர் நலச் சங்கத் தலைவர் பி.ராஜேந்திரன் யாதவ், பொருளாளர் எம்.முத்து யாதவ், கௌரத் தலைவர்கள் கே.கோகுல சேகர் யாதவ், ஓ.கே. முனியாண்டி யாதவ், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரவி, இளைஞரணி செயலாளர் என்.ஹரி யாதவ், பொருளாளர் ஏ.வெங்கடேசன் யாதவ், எம்.விக்னேஷ்வரன் உள்ளிட்ட செங்குன்றம், காவாங்கரை, புழல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், லயன்ஸ் சங்கம், அனைத்...

முதியவரை வெட்டிய போதை கும்பல்..! தடுத்த காவலர்களுக்கும் அரிவாள் வெட்டு.. திருச்சியில் நடந்த கொடூரம்.!

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் 5 ஆம் பிரகாரத்தைச் சோ்ந்தவா் காஜாமைதீன் (63) சமையல் தொழிலாளி. இவா், சனிக்கிழமை இரவு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதிக்கு வந்துள்ளாா்.  அவரை நோட்டமிட்ட மதுபோதையிலிருந்த மா்ம நபா்கள் 4 போ், காஜா மைதீனிடம் இருந்த பையையும், ரூ.1,400 ரொக்கத்தையும் பறித்துச் சென்றனா். இதில் ஒருவரைப் பிடித்த காஜாமைதீன், சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைக்க இழுத்துச் சென்றாா். அப்போது அவரை அந்த மா்ம நபா் அரிவாளால் வெட்டியுள்ளாா். இதைக்கண்ட புறக்காவல் நிலையப் போலீஸாா் அந்த இளைஞரை மடக்கிப் பிடிக்க முயன்றனா். இதையடுத்து, அவா் கையில் வைத்திருந்த அரிவாளை சுழற்றி ரகளையில் ஈடுபட்டாா். பின்னா் அவரைப் பொதுமக்கள் உதவியுடன் போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். இதில், ரகளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதில் இளைஞா் காயமடைந்தாா். அதேபோல இளைஞரைப் பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளா்கள் ராஜா, பிரேம் ஆனந்த் மற்றும் அரிவாளால் வெட்டுப்பட்ட முதியவரும் காயமடைந்தனா். இதில் இளைஞா் மற்றும் வெட்டுப்பட்ட முதியவா் ஆகிய இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ...

எந்த படிப்பும் தாழ்ந்ததல்ல ஒவ்வொரு படிப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததே உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் MRC தாளாளர் உரை...

 அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள  தத்தனூர்   மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள், கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரி சார்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு  மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் வழக்கறிஞர். M.R. இரகுநாதன்,மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின்  இயக்குநர்கள் இரா.இராஜமாணிக்கம், முனைவர் வை.தியாகராஜன் ,  கீழப்பழுவூர் மீரா மகளிர் கல்லூரி தாளாளர் M.R  கமல்பாபு மற்றும் அன்னை தெரசா பாரா மெடிக்கல் கல்லூரியின் தாளாளர், திரு. முத்துகுமரன்,மீனாட்சி இராமசாமி பொறியியல்  கல்லூரியின் நிர்வாக இயக்குநர் முனைவர். க.செந்தில் குமரன் மற்றும் முதல்வர்கள் முனைவர் ந.மதியழகன், முனைவர் சங்கீதா சிவசங்கர், முனைவர் சம்பத், முனைவர் மாலதி, முனைவர் அன்பழகன், முனைவர் திருமுருகன்  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.10,12 ம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் என்ன...

செங்குன்றம் ஸ்ரீதேவி பராசக்தி வீரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா காப்பு கட்டி கொடியேற்றுத்துடன் துவங்கியது..

 அருள்மிகு ஸ்ரீதேவி செங்குன்றம் பராசக்தி வீரகாளியம்மன் ஆலயத்தில் 46 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஆலய தர்மகர்த்தா அருள் வாக்கு தேவி சித்தர் தவத்திரு ஆர்.ராஜா சுவாமிகள் தலைமையில் கொடியேற்றி காப்பு கட்டி சிறப்பாக துவங்கியது.ஆலய விழா குழு நிர்வாகிகள், தலைவர் ஜி.கோபி, செயலாளர் எஸ்.குமரேசன், பொருளாளர் ஜெ.ரவிச்சந்திரன், துணைத்தலைவர்கள் எஸ்.கபாலி, ஆர் பாபு, துணைச் செயலாளர் ஜெ.ராஜேந்திரன், இணை செயலாளர் எஸ்.பிரேம்குமார், ஆர்.ஹரிராம், கணக்கு தணிக்கையாளர் ஜி.அன்பு, கௌரவ தலைவர் ஆர்.பொன்னுசாமி, ஒருங்கிணைப்பாளர் பி.என்.கே.கிருஷ்ணன், கே.சுரேஷ் எம்.ஜெகன், ஆர்.மனோகர், கே.பரமசிவம், கௌரவ ஆலோசகர்கள் ஆர்.முனுசாமி, வி.கமல், வி.குப்புசாமி, பி.ராஜேஷ், டி.தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.15 நாட்கள் நடைபெறும் இத்தீமிதி திருவிழாவில் குங்கும அபிஷேகம், மங்கள சண்டி ஹோமம், ஊஞ்சல் சேவை, பால் குடம் எடுத்தல், பெண்கள் முளைப்பாரி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளுடன் ஆலமரம் பகுதியில் இருந்து அம்பாள் பூ பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு அடியார்கள் தோல் சுமந்து அம்பாள் மாடவீதி உலா நடைபெறும்.  அதனைத் தொடர்ந்து 05.05.20024 ஞா...

சித்ரா பௌர்ணமியை ஒட்டி ஸ்ரீ மகாலக்ஷ்மி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது...

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தடபெரும்பாக்கத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 14ஆம் ஆண்டு பால்குட ஊர்வலம் இன்று நடைபெற்றது அருள்மிகு கன்னியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக மேலதாளங்கள் முழங்க  வலம் வந்து பின்னர் மகாலட்சுமி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை  வழிபாடு செய்தனர். இதில் கோவில் நிர்வாகிகள் GVN குமார், சேகர், சீனிவாசன், பிரகாஷ், பூபால், வேணு, ராஜா,ஆனந்தன்,வெங்கடேசன், ஊராட்சிமன்ற தலைவர் பாபு, துணை தலைவர் சபீதா, ராம்கி உஷா டில்லி வார்டு உறுப்பினர், ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு குளிர்பானம் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர். செய்தியாளர் ராதா கிருஷ்ணன் 

அத்திப்பட்டு புது நகரில் ஓம் மகாமாயா சக்தி பீடத்தில் 108 பால்குட அபிஷேகம்.!

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புது நகரில் உள்ள சித்தர் பீடம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை பௌர்ணமியை ஒட்டி 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.பெண்கள் பால் குடங்களை தலையில் சுமந்தவாறு அலகு குத்தியும் மேல தாளங்கள் முழங்க முக்கிய வீதிகளில் வலம் வந்து ஓம் சக்தி பராசக்தி கோஷங்களை எழுப்பியவாறு பக்தி பரவசத்துடன் அம்மனை தரிசித்தனர்.  ஓம் மகாமாயா சக்தி கோவில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபாடு செய்தனர். சித்ரா பௌர்ணமி பால்குட விழாவிற்கான ஏற்பாடுகளில் ஓம் மகாமாய சக்தி கோவில் டிரஸ்ட் சிதம்பரம் நடராஜர் அவர்களின் குடும்பத்தினர் செய்திருந்தனர்.இதில் ஊராட்சி மன்ற தலைவர் எம் டி ஜி சுகந்தி வடிவேல்  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம் டி ஜி கதிர்வேல் திரைப்பட தயாரிப்பாளர் செல்வம் சாண்டி செல்வராஜ்  தலைவர் சாண்டி முத்தாரம்மன் கோவில் டிரஸ்ட் மற்றும் கிராம நிர்வாகிகள் கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் ராதா கிருஷ்ணன் 

பொன்னேரியில் அருள்மிகு கரி கிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றம்..!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு கரி கிருஷ்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கி நடைபெற்றது தொடர்ந்து பிரம்மோற்சவ உற்சவம் 12 நாட்கள் நடைபெறுகிறது முக்கிய விழாவாக வருகிற 27ஆம் தேதி கருடோற்சவ அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு நிகழ்வும்  29ஆம் தேதி திருத்தேராட்டம் 3ஆம்  தேதி தெப்ப உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது கொடியேற்று விழாவில் கும்மிடிப்பூண்டி பொன்னேரி மீஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கரி கிருஷ்ண பெருமாளை தரிசனம் செய்தனர்.  இதில் பொன்னேரி முன்னால்  சட்டமன்ற உறுப்பினர் பலராமன் சங்கர் செல்வகுமார் வெற்றிவேல் திரையரங்க உரிமையாளர் ராமலிங்கம் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகிகள் உபயதாரர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். செய்தியாளர் ராதா கிருஷ்னன் 

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. இதில் 5-ம் நாள் அன்று சிவபக்தியில் சிறந்த செட்டிப் பெண் ரத்தினாவதிக்கு  அவளது பேறுகாலத்தில் தாய் வர முடியாத காரணத்தால், அவளது தாயாக சிவபெருமான் வந்து பேறுகாலத்தில் மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. 6-ம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி- அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.  தொடர்ந்து 9-ம் நாளான நேற்று அதிகாலை 4.30  மணிக்கு மேல் மேஷ லக்கனத்தில் சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு...

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திராப் பௌர்ணமி பெருவிழா..!

நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும்  பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில்  சித்ரா பௌர்ணமி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக  நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 14 ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து நாகை மாவட்ட இந்து அறநிலைத்துறை துணை ஆணையர் ராணி திருத்தேரை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தார். கீழ வீதியில் துவங்கிய தேரினை பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேராது  4 வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.  முக்கிய விழாவான   சித்திராப்பௌர்ணமியான  நாளை  பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்  ரத காவடி,  பால் ...

புழல் சுற்றுவட்டார அனைத்து வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புடன் இணைக்கப்பட்ட புழல் செக்போஸ்ட், காவாங்கரை சுற்றுவட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் வணிக வளாகம் திறப்பு விழா, கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா புழல் அடுத்த தண்டல்கழனி பகுதியில் சங்கத் தலைவர் ஆர்.ரவி தலைமையில் நடைபெற்றது. சங்க செயலாளர் ஆர்.சுந்தரம் அனைவரையும் வரவேற்றார். சங்க பொருளாளர் எம்.பூமிக்காளை, கௌரவ தலைவர்கள் எம்.டி.வி. இளங்கோவன், எஸ்.மைக்கேல், துணைத்தலைவர்கள் எஸ்.தாமரைச் செல்வன், டி.கனகராஜ், துணைச் செயலாளர் ஏ.முகம்மது கமால் பாதுஷா, சங்க ஆலோசகர் எஸ்.தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவரும் அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் தேசிய துணைத்தலைவருமான ஏ.எம்,விக்கிரமராஜா வணிக வளாக கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், பெருநகர சென்னை மாநகராட்சி 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜன் பர்ணபாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்...

உடையார்பாளையம் அருகே தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்லூரியில் 10,12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிக் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது...

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்லூரியில் 10,12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகளுக்கான உயர் கல்வி வழிக் காட்டும் நிகழ்ச்சியில் MRC யின் கல்வி நிறுவனங்களின் தாளாளர் இரகுநாதன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கருத்துக்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில் மீரா மகளிர் கல்லூரியின் தாளாளர் கமல்பாபு, ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்லூரியின் தாளாளர் முத்துக்குமார் மற்றும் 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர் பாலு 

சிறுவாபுரியில் டாக்டர் அம்பேத்கர் சிலையை நிறுவியதால் பரபரப்பு..!

 திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில சுமார் நான்கு அடி உயர டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலையை கிராம மக்கள் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதால் அனுமதி இன்றி அங்கு சிலை அமைக்க கூடாது என பொதுமக்களிடம் ஆரணி போலீசார் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் ஆகியோர் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டு வருகின்றனர் அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பீடம் அமைத்து சிலை நிறுவும் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது சிலை நிறுவப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்து அங்கேயே  சிலை இருக்க வேண்டுமென பொன்னேரி வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்க மறுத்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் உரிய பாதுகாப்புடன் சிலையை பத்திரமாக அகற்றி பாதுகாப்பாக கொண்டு சென்று வைத்தனர். செய்தியாளர் ராதா கிருஷ்ணன்  

தேவூர் அருள்மிகு ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்...

 நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்ல முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும் அந்த வகையில் இந்த ஆண்டின் சித்திரைப் பெருவிழா  கடந்த ஏப்ரல்  14 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து மின் அலங்கார ரதத்தில் அம்மன் வீதி உலா நடைப்பெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட ஊர்வலம் நடைபெற்றது. விரதமிருந்த பெண்கள் தலையில் பால்குடம் சுமந்தும், பக்தர்கள மயில் காவடி ,பால் காவடி, அலகு காவடி உள்ளிட்ட காவடிகள் காந்திநகர், பாரதியார் நகர், வ.உ.சி நகர், தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து  மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து மாரியம்மனுக்கு  நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைப்பெற்று  மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர் கீதம்லெனின் 

காட்டூரில் அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா..!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது முன்னதாக யாக கலச பூஜைகளுடன் மேளதாளங்கள் முழங்க கலசநீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோவில் கோபுரங்களுக்கும் சாமிக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது  இதில் பழவேற்காடு மீஞ்சூர் பொன்னேரி உள்ளிட்டசுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருளை பெற்றுச் சென்றனர். கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.. செய்தியாளர் ராதா கிருஷ்ணன்