Skip to main content

Posts

Showing posts from September, 2024

ஓசூர் டாடா செல்போன் உதிரி பாக தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை, 4 மணி நேரமாக போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்

  ஓசூர் அடுத்த கூத்தனப்பள்ளி பகுதியில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டாடா தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி அணைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த திம்ஜேப்பள்ளி ஊராட்சி கூத்தனப்பள்ளி பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டாடா தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். இந்நிலையில் இன்று (செப்.28) காலை தொழிலாளர்கள் ஷிப்ட் முடிந்து வீட்டுக்குச் செல்லும் போது, அங்கிருந்த ஆனோ கெமிக்கல் பிளாண்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த 3 ஆயிரம் தொழிலாளர்களை மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் சுமார் 4 மணி போரட்டத்துக்குப் பின் தீ முற்றிலும் அணைக்க்பட்டது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் பொருட்கள்...

கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை, கிளெனீகல்ஸ் உடன் வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருக்கும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து, சாலை விபத்தால் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த நபர் ஒருவரின் கல்லீரல் தானமாக பெறப்பட்டு, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 40-வயதான ஆண் நோயாளிக்கு பொருத்தப்பட்டிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க ஒரு மைல்கல் நிகழ்வாக டெல்டா பிராந்தியத்தில் முதன்முதல் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சமீபத்தில் வெற்றி கரமாக மேற்கொண்டு இருக்கிறது. கிளென்கல்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின். ஒத்துழைப்போடு நடைபெற்ற இச்சிகிச்சை செயல்முறையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து, சாலை விபத்தால் பாதிக்கப்பட்டு மூளை சாவு அடைந்த நபர், ஒருவரின் கல்லீரல் தானமாக பெறப்பட்டு, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த,40-வயதான ஆண் நோயாளிக்கு பொருத்தப்பட்டு அவருக்கு வாழ்க்கையில் புதிய தொடக்கத்தை தந்திருக்கிறது. பல்வேறு உறுப்பு மாற்று .சிகிச்சைகளுக்கு இந்தியாவில் புகழ்பெற்ற மையங்களுள் ஒன்றாக சென்னையில் அமைந்திருக்கும் கிளெனீகல்ஸ் மருத்துவமனையுடன்  டெல்டா பிராந்தியத்தில் பல்வேறு சிறப்பு பிரிவுகள் கொண்ட முன்னணி மருத்துவமனையான, தஞ்சாவூர் ...

தஞ்சாவூர் ஒரத்தநாடு - வல்லம் பகுதிகளில் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் திடீர் ஆய்வு.!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வல்லம் பகுதிகளில்,  நெடுஞ்சாலைத் துறையின் கீழ் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலைப்பணிகளை, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் பொறியாளர் சரவணன்  ஆய்வு மேற்கொண்டார். தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில், சாலைகளை அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலையாக மற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், ஆய்வுக் கூடத்தின் போது அனைத்து சாலைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.  அதன்படி தஞ்சை மாவட்டம் வல்லம், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் பொறியாளர் சரவணன்  ஆய்வு மேற்கொண்டார். அப்போது தஞ்சாவூர் கோட்டம் (நெ) தஞ்சாவூர் உட்கோட்டம் (நெ) தஞ்சாவூர் கோட்டத்தில் பரப்பு அடிப்படையில் உள்ள பராமரிப்பு மற்றும் மேம்பாடு திட்டத்தின் கீழ் அகலப்படுத்தி மேம்படுத்த திட்ட சாலைகளான வல்லம்,  ஒரத்தநாடு சாலை முடிவுற்ற பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் செந்தில் குமார், கோட்ட பொறியாளர் செந்தில் குமார், தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் சந்த...

தஞ்சையில் தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், மாநிலம் தழுவிய ஒற்றைக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.!

 தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்தும், மாநிலக் கழகத்தின் சார்பாக செப்டம்பர்-5 ஆசிரியர் தினத்தில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடப்பது போன்று, தஞ்சை முதன்மை கல்வி அலுவலர், அலுவலக வளாகம் முன்பு, நேற்றைய தினம்(5.9.2024) மாலை 5:00 - மணியளவில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், மாநிலம் தழுவிய ஒற்றைக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்,பி. இளையராஜா தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர்,கே. செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர், கே ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார், மாவட்டத் துணைத் தலைவர், எஸ்.ராஜேந்திரன் துவக்க உரையாற்றினார், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாவட்டத் தலைவர்,சி. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, மாவட்ட பொருளாளர்,பி. முருகானந்தம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்,  க.மதியழகன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச்செயலாளர், ச.கோதண்டபாணி,...

உலகத்தின் தமிழ் முகமாகத் தமிழ்ப்பல்கலைக் கழகம் திகழ்கிறது.! தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் இரா. சந்திரசேகரன் பேச்சு..

உலகமொழியாக விளங்கும் தமிழ்மொழிக்காக உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத்தின் தமிழ்முகமாகத் திகழத்தொடங்கி இருப்பதாக, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் இரா. சந்திரசேகரன் தெரிவித்தார். இப்புத்தொளிப்பயிற்சியின் நிறைவுவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சான்றிதழ் வழங்கியதோடு, தனது சிறப்புரையில் தமிழ் இலக்கிய இலக்கணம் தொடர்பான புத்தொளிப்பயிற்சிகளைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் நிகழ்த்துவதற்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உறுதுணையாக இருக்கும் என்று குறிப்பிட்டார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையில் தமிழ்ப் பல்கலைக்கழகம், “தமிழ்ச் செம்மொழி இலக்கிய இலக்கண நூல்களின் மொழிபெயர்ப்புகள்” என்னும் பொருண்மையில் புத்தொளிப் பயிற்சியினை  கடந்த 19.8.2024 முதல் 4.9.2024 (பதினான்கு நாட்கள்) நடத்தியது. தமிழகத்தின் கல்லூரி மற்றும் வெவ்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்து 33 பேராசிரியர்கள் இப்பயிற்சியில் பங்கேற்பாளராகப் பங்கேற்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம், அரபு, உருது, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெ...

காகிதப்புரட்சி நூல் அறிமுக விழா தஞ்சையில் நடைப்பெற்றது.!

தஞ்சாவூர் மாவட்ட வெற்றித்தமிழர் பேரவை சார்பில், த.ஸ்டாலின்- குணசேகரன் எழுதிய காகிதப்புரட்சி நூல் அறிமுக விழா, தஞ்சை பெசன்ட் அரங்கில்,1.9.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை,6:00- மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வெற்றித் தமிழர்ப் பேரவை மாவட்ட பொறுப்பாளர்,லயன்,எம்.எஸ். ஆசிப் அலி தலைமை தாங்கினார், வெற்றித்தமிழர்ப் பேரவை மாநில துணைப்பொதுச் செயலாளர், யோகம் இரா.செழியன் முன்னிலை வகித்தார். வெற்றித் தமிழர்ப் பேரவை பூதலூர் ஒன்றிய செயலாளர், நல்ல.சின்னையா வரவேற்புரை ஆற்றினார், மக்கள் சிந்தனைப் பேரவை  துணைத் தலைவரும், பேராசிரியருமான, கோ. விஜயராமலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளரும், இயக்குநருமான,முனைவர். பாரதி கிருஷ்ணகுமார் நூல் அறிமுக உரையாற்றினார்.மக்கள்சிந்தனை நிறுவனரும், தலைவரும், நூலாசிரியருமான,த. ஸ்டாலின் குணசேகரன் ஏற்புரை வழங்கினார்.  நிகழ்ச்சியின் நிறைவாக வெற்றித் தமிழர்ப்பேரவை பொறுப்பாளர், தரும.சரவணன் நன்றி கூறினார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் அறிஞர் பெருமக்கள் உரையில் சில கருத்துக்கள்: தொல்காப்பியர் பத்து,பத்து, புத்தகங்களை படித்துவிட்டுஒரு புத்தகத்தை உருவாக்கியவர்,2...

தஞ்சையில் பாஜக அரசை கண்டித்து திராவிட கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

ஆர்.எஸ்.எஸ்சின் புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்காததால், தமிழ்நாடு அரசின் கல்வி துறைக்கு நிதியை ஒதுக்காத பாஜக அரசை கண்டித்து, திராவிடக் கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம் சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், தஞ்சை பனகல் கட்டிடம் எதிரில்,3.9.2024 அன்று மாலை,5:00- மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திராவிட மாணவர் கழக மாநில செயலாளர், இரா. செந்தூரப் பாண்டியன் தலைமை தாங்கினார், மாவட்ட இளைஞரணி தலைவர்,ரெ. சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்,இர.மணிகண்டன், திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர்,ச. சிந்தனையரசு,' மாநகர இளைஞர் அணி தலைவர்,ஆ. மதன்ராஜ், மாநகர இளைஞரணி செயலாளர்,மா. இராஜராஜன், மாநகர மாணவர் கழக தலைவர்,மு. கனிமொழி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். திராவிட கழகம் மாவட்ட இளைஞரணி செயலாளர்,ஆ. பிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்,  இரா.வெற்றிக்குமார், தொடக்க உரையாற்றினார். தலைமைக் கழகப் பேச்சாளர்,இரா.பெரியார் செல்வன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்,மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன், காப்பாளர்,மு. அய்யனார், மாவட்ட தலைவர்,சி.அமர்சிங், மாவட்ட செயலாளர்,அ....

தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர், கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களின்,69-வது பிறந்தநாள் விழா.

இந்திய தேசிய  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்,தஞ்சைதெற்கு மாவட்ட காங்கிரஸ்தலைவர். டாக்டர்.T.K.V. கிருஷ்ணசாமி வாண்டையார். அவர்களின்,69-வது பிறந்தநாள், செப்டம்பர்,1-ம் தேதி அன்று அவரது இல்லத்தில் சீரும், சிறப்போடும் கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் காணும்அவருக்கு, தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ்,எஸ்சி/எஸ்டி பிரிவு தலைவர் அருண் சுபாஷ், மற்றும்  தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் செந்தில் சிவகுமார்.ஆகியோர் சால்வை அணிவித்து  பூங்கொத்து மற்றும் பழங்கள் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். செய்தியாளர் வேங்கை குணா 

தஞ்சை லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்,இன்டாக் வினாடி- வினா நிகழ்ச்சி நடைபெற்றது.!

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள, லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில், இந்திய பாரம்பரிய வினாடி-வினா நிகழ்ச்சி பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்றது. இன்டாக் ஒருங்கிணைப்பாளர் கே.சுவாமிநாதன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார், இந்திய பாரம்பரிய கலாச்சார பெருமையை பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் பொருட்டு இன்டாக் சார்பாக, தேசிய அளவிலான வினாடி- வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மார்னிங் ஸ்டார் மெட்ரிக்ப்பள்ளி, வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளாசம் பப்ளிக் பள்ளி, லிட்டில்ஸ்காலர்ஸ்   மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லிட்டில்ஸ்காலர்ஸ் பப்ளிக் உயர்நிலைப் பள்ளியிலிருந்து சுமார்,200- மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் சுற்றில் நடைபெற்ற போட்டியில்,13.குழு மாணவர்கள் வெற்றி பெற்று, இரண்டாம் சுற்றுக்கு தேர்வு பெற்றனர்.  இறுதி சுற்றில் லிட்டில்ஸ்காலர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நித்தேஷ் கீர்த்திவர்மன் குழு மாநில அளவில் நடைபெறும் வினாடி-  வினா நிகழ்ச்சிக்கு   தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு இன்டாக் பொருளாளர் இராமநாதன்,செயலாளர் முத்துக்கும...

இந்துஸ்தான் நிகர்நிலை பல்கலை கழகத்தின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் காயார் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்றது

இந்துஸ்தான் நிகர்நிலை பல்கலை கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக கடந்த 24 ஆகஸ்ட் முதல் ஆகஸ்ட் 31 வரை சிறப்பு நாட்டு நலப்பணித் திட்ட முகாம் காயார் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.  இம்முகாமினை திரு. S. N., ஸ்ரீதரா, துணை வேந்தர், திரு. முத்துக்குமார் சுப்பிரமணியம், பதிவாளர், மற்றும் திரு. ரமேஷ், காயார் ஊராட்சி தலைவர் துவக்கி வைத்தனர். இம்முகாமில் கண் மருத்துவ முகாம்( பம்மல் சங்கரா மருத்துவமனை ), பல் மருத்துவ முகாம்( ராகாஸ் மருத்துவமனை ), கால்நடை மருத்துவ முகாம்( அரசு மருத்துவமனை), மற்றும் பொது மருத்துவ முகாம் ( சத்யசாய் மருத்துவமனை ) ஆகியவை நடைபெற்றது. மேலும் இம்முகாமில்  சுவர்களுக்கு வண்ணம் அடித்தல், பள்ளி வளாகத்தை தூய்மை படுத்தும் பணியும் நடை பெற்றது. காயார், இள்ளலூர், மற்றும் வெண்பேடு அரசு பள்ளிகளில் தூய்மை இந்தியா என்கிற தலைப்பில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கபட்டது. 50 மாணவர்கள் இம்முகாமினில் கலந்து கொண்டனர். இம்முகாமினை முனைவர். திரு. க. ஞானசேகரன், நாட்டு நல்லபணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார். செய்தியாளர் மூர்த்தி 

எம் ஸ் கிரீன்ஸ் ஸ்டுடியோவின் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஒலிப்பதிவுக்கூடம் திறப்பு விழா.!

தஞ்சையில் வெற்றிகரமான,3-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்,எம் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோவின் புதிய ஒலிப்பதிவுக்கூடம், நவீன தொழில் நுட்பத்துடன், தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை, அண்ணா நகர் அருகில், எஸ்.எம்.ஆர். காம்ப்ளக்ஸில், அமைந்துள்ள ஸ்கிரீன் ஸ்டுடியோவின் திறப்பு விழா, 31.8.2024 அன்று காலை,10:00- மணியளவில் நடைபெற்றது.  புதிதாக வடிவமைத்த ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோவை  தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர், ச.முரசொலி அவர்கள்  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.  இந்த நிகழ்வில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர்,டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சை மாநகர மேயர்,சண். இராமநாதன், துணை மேயர்,டாக்டர். அஞ்சுகம் பூபதி, சதய விழா குழு தலைவர் து. செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மு. ரெங்கசாமி, காவல்துறை ஓய்வு எம்.தவமணி,அண்ணா திமுக மாநகர செயலாளர்,என்.எஸ். சரவணன், திராவிடக் கழக மாநில ஒருங்கிணைப்பாளர், இரா.ஜெயக்குமார், பாரத் கல்வி குழும செயலர், திருமதி. புனிதா கணேசன், வெற்றித் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர், யோகம் இரா.செழியன், ஒரு அக்ரோஃபார்ம்,ரெ.தர்மராஜ், தணிக்கை சிட்டிடெவலப்பர்ஸ்,வி.கே.டி. அரசு, கே.ஆர். பிரிண்டர்ஸ் எஸ்....

தஞ்சாவூர் மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் மாபெரும் ஓவியப்போட்டி.!

தஞ்சாவூர் மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கம் மற்றும் தஞ்சாவூர் டெல்டா ரோட்டரி சங்கம்- தஞ்சாவூர் கிரானரி ரோட்டரி சங்கம், மற்றும் தஞ்சாவூர் ஹெரிடேஜ் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும், மாணவர்களுக்கான மாவட்ட அளவில் மாபெரும் ஓவிய போட்டி, இளந் தூரிகை -2024" நிகழ்ச்சியானது தஞ்சை பாரத் கலை அறிவியில் கல்லூரியில், 31.8.2024அன்றைய தினம் காலை,8:00- மணியளவில் போட்டி தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்டத் தனியார் பள்ளிகள் சங்க தலைவர், ச.சித்தார்த்தன் தலைமை தாங்கினார், தஞ்சாவூர் மாவட்ட. தனியார் பள்ளிகள் சங்க செயலாளரும், ரோட்டரி உதவி ஆளுநருமாகிய, இரா. பழனியப்பன் வரவேற்புரையாற்றினார். தஞ்சாவூர் மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க பொருளாளர்,மு. முகமது இக்பால், இணைச்செயலாளர்,பொ.பால பாலத்தண்டாயுதபாணி, இணைச்செயலாளர் திருமதி.க.இ.கிருஷ்ணராணி, பூதலூர் ஒன்றிய செயலாளர்,ந. திருநாவுக்கரசு, திருவையாறு ஒன்றிய செயலாளர், மே.ரங்கநாதன், செயற்குழு உறுப்பினர்,ஜி.மணிக்கண்ணன், ஒரத்தநாடு ஒன்றிய தலைவர்,த.செல்வம்,திருவோணம் ஒன்றிய செயலாளர்,அ. இராமகிருஷ்ணன்,செயற்குழு உறுப்பினர்,அ. சிராஜுதீன், செயற்குழு உறுப்பினர்,மு. புகழேந்தி...