கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மேல்பட்டாம்பாக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தணிகைச் செல்வன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்வில்,டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் வழியில் கொள்கை மாறாமல் சமுதாயப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சேப்பாக்கம் ஜெ.பிரகாஷ் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பொன்னாடை போற்றி யானைச் சின்னம் பொறித்த கேடயம் வழங்கி பாராட்டினார்.அப்போது, மக்கள் தொண்டன் சு .திருமாறன் உட்பட பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் விஜய்

Comments
Post a Comment