பணியில் நேர்மையின்றி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - கன்னியாகுமரி மாவட்ட SP டி.என்.ஹரி கிரன் பிரசாத் எச்சரிக்கை!
நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள்(Highway patrol)மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்களை புதியதாக நியமித்து உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்: பணியில் நேர்மையின்றி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை! கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப புதிதாக நியமித்து காவல் கண்காணிப்பாளர் டி.என்.ஹரி கிரன் பிரசாத் உத்தரவு பிறப்பித்தார். இதில் ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் தாலுகா காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டனர். நெடுஞ்சாலை ரோந்து மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவில் புதியதாக பணியமர்த்தப்பட்ட காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், புதியதாக நெடுஞ்சாலை ரோந்து, மதுவிலக்கு பிரிவில் பணிமாற்றப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் எனவும், பொதுமக்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்ளவும், பணியின் போது விழிப்புடனும்...