திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு கரி கிருஷ்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கி நடைபெற்றது தொடர்ந்து பிரம்மோற்சவ உற்சவம் 12 நாட்கள் நடைபெறுகிறது முக்கிய விழாவாக வருகிற 27ஆம் தேதி கருடோற்சவ அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு நிகழ்வும் 29ஆம் தேதி திருத்தேராட்டம் 3ஆம் தேதி தெப்ப உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது கொடியேற்று விழாவில் கும்மிடிப்பூண்டி பொன்னேரி மீஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கரி கிருஷ்ண பெருமாளை தரிசனம் செய்தனர்.
இதில் பொன்னேரி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் சங்கர் செல்வகுமார் வெற்றிவேல் திரையரங்க உரிமையாளர் ராமலிங்கம் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகிகள் உபயதாரர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர் ராதா கிருஷ்னன்

Comments
Post a Comment