செங்குன்றம் அருகே சோழவரம் ஊராட்சி ஒன்றியம் அருமந்தை அடுத்த மாபுஸ்கான் பேட்டை ஊராட்சியில் உள்ள புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஜி.எப்.சி. குளோபல் பப்ளிக் பள்ளியில் 2023- 2024 கல்வி ஆண்டிற்கான விளையாட்டு தின நிகழ்ச்சி பள்ளித் தாளாளர் கே.என்.ரங்கநாதன் தலைமையில் பள்ளி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் பள்ளி முதல்வர் இந்துமதி வரவேற்புரை ஆற்றினார். பள்ளி குழும தலைவர் மீராபாய், பள்ளி இயக்குனர்கள் கார்த்திகேயன், சந்தோஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் சிலம்பம், தீப்பந்தம், கம்பு சுற்றுதல், போன்ற சாகசங்கள் செய்து காண்பித்தது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனத்தையும் ஈர்த்தன.
இதில் திரைப்பட நடிகரும், மாணவர் பயிற்சியாளருமான நடிகர் தாமு கலந்துகொண்டு மாணவர்களிடம், கல்வியின் எதிர்காலம் குறித்தும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை எவ்வாறு மதித்து நடக்க வேண்டும் என்பது குறித்தும், மாணவர்களின் வளர்ச்சிக்காக அவர்கள் படும் கஷ்டங்களையும் எடுத்துக் கூறி, தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கான பயிற்சியையும் வழங்கி பல குரலில் பேசி சிறப்புரையாற்றினார்.அதனைத் தொடர்ந்து இறுதியில் விளையாட்டுப் போட்டி யில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வெற்றிக் கோப்பைகளையும் வழங்கி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவர்களின் இசை நடனம் போன்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றன.இதில் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment