கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள கண்டப்பன்குறிச்சி ஸ்ரீ பவானி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கும் விழா கல்லூரியின் தாளாளர் ஜெ. நாராயணன் தலைமையில் நடந்தது. ஸ்ரீ பவானி கல்வி குழுமத்தின் செயலாளர் மகாலட்சுமி நாராயணன் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார்.ஸ்ரீ பவானி கல்வி குழுமத்தின் நிர்வாக அலுவலர் பொன். சடையமுத்து வரவேற்புரையாற்றினார்.
ஸ்ரீ பவானி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் க. பாலமுருகன், ஸ்ரீ பவானி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.தொடர்ந்து, கல்லூரி மாணவர்களின் பிரிவு உபசார விழா நடந்தது, விழாவில் கல்லூரி மாணவ மாணவிகள் தங்களது நடன திறமைகளை வெளிப்படுத்தினர். அப்பொழுது பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டி மாணவர்களை வழி அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர் விஜய்

Comments
Post a Comment