கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்று வருகிறது.அதன்படி அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அதிமுக நகர செயலாளர் அழகேசன் ஏற்பாட்டில் உடையார்பாளையம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கோடைகால நீர் மோர் பந்தலை அரியலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.இராஜேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, வெள்ளரி பிஞ்சு உள்ளிட்டவைகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் ராமஜெயலிங்கம்,மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சமுத்து, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ஜெயராமன்,நகர அவைத் தலைவர் சைத்மகதூம், நகர பொருளாளர் புருஷோத்தமன் அரசு ஓய்வு பெற்ற நடத்துநர் எஸ்.ராமச்சந்திரன், புரட்சி வீரன் பெரியசாமி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,நகர கழக பொறுப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் முணியத்தரியான்பட்டி அதிமுக உறுப்பினர் அ.விஜய் நன்றி கூறினார்.
செய்தியாளர் பாலு

Comments
Post a Comment