திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தடபெரும்பாக்கத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 14ஆம் ஆண்டு பால்குட ஊர்வலம் இன்று நடைபெற்றது அருள்மிகு கன்னியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக மேலதாளங்கள் முழங்க வலம் வந்து பின்னர் மகாலட்சுமி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபாடு செய்தனர்.
இதில் கோவில் நிர்வாகிகள் GVN குமார், சேகர், சீனிவாசன், பிரகாஷ், பூபால், வேணு, ராஜா,ஆனந்தன்,வெங்கடேசன், ஊராட்சிமன்ற தலைவர் பாபு, துணை தலைவர் சபீதா, ராம்கி உஷா டில்லி வார்டு உறுப்பினர், ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு குளிர்பானம் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.செய்தியாளர் ராதா கிருஷ்ணன்

Comments
Post a Comment