தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புடன் இணைக்கப்பட்ட புழல் செக்போஸ்ட், காவாங்கரை சுற்றுவட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் வணிக வளாகம் திறப்பு விழா, கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா புழல் அடுத்த தண்டல்கழனி பகுதியில் சங்கத் தலைவர் ஆர்.ரவி தலைமையில் நடைபெற்றது.
சங்க செயலாளர் ஆர்.சுந்தரம் அனைவரையும் வரவேற்றார். சங்க பொருளாளர் எம்.பூமிக்காளை, கௌரவ தலைவர்கள் எம்.டி.வி. இளங்கோவன், எஸ்.மைக்கேல், துணைத்தலைவர்கள் எஸ்.தாமரைச் செல்வன், டி.கனகராஜ், துணைச் செயலாளர் ஏ.முகம்மது கமால் பாதுஷா, சங்க ஆலோசகர் எஸ்.தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவரும் அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் தேசிய துணைத்தலைவருமான ஏ.எம்,விக்கிரமராஜா வணிக வளாக கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், பெருநகர சென்னை மாநகராட்சி 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜன் பர்ணபாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
வடசென்னை வடக்கு மாவட்டத் தலைவர் கொரட்டூர் த.இராமச்சந்திரன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் வி.கோவிந்தராஜுலு, மாநிலப் பொருளாளர் ஏ.எம். சதக்கத்துல்லா, திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் தலைவர் வி.பி. வில்லியம்ஸ், சட்ட ஆலோசகர்கள் எஸ்.எம். ரமேஷ் ராகவேந்திரா, நா.மு. இஸ்மாயில் உள்ளிட்ட புழல், காவாங்கரை சுற்றுவட்டார வணிகர் பேரமைப்பு மாநில, மாவட்ட, கிளைக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment