Skip to main content

Posts

Showing posts from November, 2025

பூந்தமல்லி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் கும்பாபிஷேகம்

பூந்தமல்லியில் உள்ள மிகப் பழமையான ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப்பெருமாள் கோயிலின் உப கோயிலான ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயில் பூந்தமல்லியில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்தக் கோயிலின் ஆஞ்சநேயர் வியாசராயரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். இந்தக் கோயிலின் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 21ஆம் தேதி வேத ப்ரபந்த பாராயணத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. 22ஆம் தேதி யாகசாலையில் கும்ப திருவாராதனம், ஹோமம், அஷ்டபந்தனம், நவகலச பூஜை, பூர்ணாஹூதி, தீர்த்த பிரசாதம் விநியோகம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று யாகசாலை கும்பாராதனம், பிரதான ஹோமம், மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலையிலிருந்து கும்பங்களில் எடுத்து வரப்பட்ட புனித நீர், கோயில் மூலவர் வீர ஆஞ்சநேயர் விமானத்தில் உள்ள கலசங்களில் வேத மந்திரங்கள் முழங்க ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளாக கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் பாபு, அ...

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

பூந்தமல்லியில் தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்.

தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணியில் பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. பூந்தமல்லி நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், நகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆகியோர் உத்தரவின் பேரில், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்கும் பணி தொடங்கியது. பூந்தமல்லி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் ஆயிரக்கணக்கான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். சில இடங்களில், நாய் கடித்த சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்தும் பணிகளில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் ஐயப்பன் ஆகியோர் நகராட்சி பணியாளர்களுடன் சென்று இந்த பணியில் ஈடுபட்டனர். இது குறித்து நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் கூறியதாவது: நகராட்சி பகுதியில் ஆதரவற்ற தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குவதும், முதியவர்கள் குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறத...