தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மூர்த்தி நாயக்கன்பட்டியில் நகரிகுல பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சூடம்மாள் அம்மன் ஆலயம் உள்ளது. இங்கே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 27, 28 , 29 தேதிகளில் காலை சுமார் 6.45 மணி முதல் 6.52 வரை சூரிய ஒளிக் கதிர்கள் கோயில் கருவறையில் அமைந்துள்ள அம்மன் சிலை மீதுபடும் அபூர்வ நிகழ்வு நடந்து வருகிறது .
வழக்கமாக நடந்த அந்த அரியநிகழ்வில் இன்றும் அதே நேரப்படி நடந்தது சூரிய பகவான் அம்மனை வழிபடுவதாக பக்தர்கள் பரவசத்தோடு பங்கேற்றனர்.200 ஆண்டுகளுக்கு முன்னதாக முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் பெட்டகத்தில் இருந்த பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந் நீலையில் ஏராளமான பக்த்தர்கள் அம்மனனவழிபாடுபசெய்து சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் விஜயலிங்க ராஜா

Comments
Post a Comment