தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் 51-வது அகில இந்திய திராவிட மொழியியலாளர் மாநாடு,3-நாட்கள் நடைபெறுகிறது. மொழியியல், இலக்கியம், ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு இவற்றின் சமகால ஆய்வுகள் பற்றிய மாநாடாக இது நடக்கிறது என்று துணைவேந்தர் திருவள்ளுவன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் வரும்,27-ம் தேதி முதல் 29.ம் தேதி வரை மூன்று நாட்கள் இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டின் நோக்கம் மொழியியல் கற்றல், கற்பித்தல், தேசிய கல்விக்கொள்கை, மாநிலக் கல்விக் கொள்கை இலக்கியம், ஒப்பிலக்கியம். மொழிபெயர்ப்பு தொடர்பாக, இன்றைய நவீனத் தொழில்நுட்பக் காலத்தில் நடைபெற்று வரும் ஆய்வுகள், அதன் போக்குகள் ஆகியவற்றை இளம் தலைமுறையினரின் பார்வைக்குக் கொண்டு வருவதே ஆகும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்த மாநாடு 2 -வது முறையாக நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 1983-ஆண்டில் 13-வது அனைத்து இந்திய திராவிட மொழியியலாளர்கள் மாநாட்டினை, தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்தி முத்திரை பதித்தது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும், உலகின் சிறந்த மொழியியலாளர்கள் வரிச...
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் (Media - News Company) Email : News.kakithapoo@gmail.com www.kakithapoo.com Cell : +91 9962944433 | 044 42146943