சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று மதுக்கரை பகுதியில் உயர்ரக போதை பொருளான மெத்தமெட்டமைனை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுக்கரை காவல் நிலைய காவல்துறையினர் மதுக்கரை அடுத்த மச்சகவுண்டன் பாளையம் அருகே விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அங்கு உயர்ரக போதை பொருளான மெத்தமெட்டமைன் வைத்திருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராசு என்பவரது மகன் திவாகர் (22)* என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5.750 கிராம் எடையுள்ள உயர்ரக போதை பொருளான மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்து, திவாகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் பட்டுராஜ்

Comments
Post a Comment