சென்னை புழல் கேம்ப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை அருகில் புழல் பகுதி பொறுப்பாளர் புழல் வழக்கறிஞர் எம்.தேவேந்திரன் தலைமையில் புழல் வட்டார காங்கிரஸ் கமிட்டில் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு பொது மக்களின் தேவைக்காக தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
திருவள்ளூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.எம். தாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து தர்பூசணி, முலாம் பழம், ஜுஸ் வகைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் வழக்கறிஞர் புழல் எம்.ஜெயசீலன், திருவள்ளூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஜி.அச்சுதன், மாநில பொதுக் குழு உறுப்பினர் புழல் ஜி.குபேந்திரன் ஆகியோர் சிறப்பு டி.பலராமன், மாவட்ட பொதுச் செயலாளர் காங்கை குமார், பி.கிரி, வட்டாரத் தலைவர்கள் நித்தியானந்தம், ஆத்தூர் வேல்முருகன், பாடியநல்லூர் ரஜினி, கிருஷ்ணமூர்த்தி, சோழவரம் கே.எம். மணிகண்டன், லயன் ஜி.பாலாஜி, வி.விஜய், எஸ்.பிரதீப், ஜி.ராகுல்காந்தி, ஆர்.நாகராஜ், எம்.ரவிச்சந்திரன், சைன்ஷா, பிரபு, சாம்ராஜ், கதிர்வேடு எஸ்.குமார், மாவட்டச் செயலாளர் எம்.ஏ. தண்டபாணி, புழல் சுற்றுவட்டார வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்லத்துரை, மகளிர் அணி இ.விமலா, மாத்தூர் ரங்கநாயகி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment