Skip to main content

Posts

Showing posts from May, 2025

பெரம்பலூர் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு  அவர்கள் தலைமையில் நடைபெற்றது

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட  வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு  அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தார்கள். திரு.ராமராஜன் அவர்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அடிகிணறு வெட்ட வழிவகை செய்ய வேண்டுமென்றும், கொட்டரை நீர்தேக்கத்தில் மாற்றுப்பாதை அமைத்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.   திரு.ராஜீ அவர்கள்  மானாவாரி பயிர்களுக்கு கோடை உழவு மானியம் கூடுதலாக வழங்க வேண்டுமெனவும், அனைத்து நீர் நிலைகளிலும் நில அளவை செய்து தூர்வார வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.  திரு.கருணாநிதி அவர்கள் லாடபுரம் பகுதியில் அரசு மருத்துவமனையை  சுற்றி சீரமைத்து தர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.  திரு.ராஜா அவர்கள் மக்காச்சோளத்திற்கு பயிர் காப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்தி விரைவில் வழங்க வேண்டுமென  கேட்டுக்கொண்டார்.   திரு.செந்தில்குமார் அவர்கள் அரும்பாவூர் பகுதியில் குடிதண்ணீர் கிணறு உள்ள பகுதியில் சீரமைத்து   தர  வேண்டுமென  ...

செங்குன்றம் அருகே வடகரையில் நடைபெற்ற எம்.வி.எம். மஹால் திறப்பு விழா

செங்குன்றம் அருகே வடகரையில் எம்.வி.எம். மஹால் திறப்பு விழா நடைபெற்றது. பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் திறந்து வைத்தார்.  சென்னை செங்குன்றம் அடுத்த வடகரையில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.எம். ரமேஷ் குமார் கட்டியுள்ள எம்.வி.எம்.  மஹாலை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர். என்.ஆர். தனபாலன் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பெண்கள் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.  இவ்விழாவில் மறைந்த தாய் தந்தையருக்கு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதில் வயலட் தனபாலன், எம்.வி.எம்.ரமேஷ்குமார், தமிழ்ச்செல்வி ரமேஷ் குமார், ராகுல் - ஸ்வஸ்திகா,மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர். புழல் ஏ.தர்மராஜ்,மாநில தலைமை நிலைய செயலாளர். எம்.ஆர். சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர்  ஜி.சந்தானம்,மாநில வர்த்தக அணி செயலாளர். எம்.வைகுண்ட ராஜா, மாநில உயர்மட்ட குழு உறுப்பினர். உதயகுமார், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர்  வி.பி.ஐயர்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் காமராஜ், மாவட்ட செயல...