திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள்பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீசௌந்தர்யவல்லி தாயார் சமேத கரி கிருஷ்ண பெருமாள் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 23ஆம் தேதி துவங்கியது முக்கிய விழாவாக.இன்றுதிருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பொன்னேரி செங்குன்றம் கும்முடிப்பூண்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகளில் இழுத்து வந்து பெருமாளை தரிசனம் செய்தனர். முன்னதாக பொன்னேரி சின்னக்காவனம் பெரிய காவனம் ஆலாடு உள்ளிட்ட ஐந்து கிராம மக்கள் சார்பில் காய்கறி பழ வகைகள் இனிப்பு வகைகள் கொண்ட சீர் சுமந்து பெருமாளுக்கு படைத்து வழிபாடு நடத்தினர்.
தேர் ஓடிய முக்கிய வீதிகளில் பக்தர்கள் திரளாக வந்து தீபாராதனை செய்து பெருமாளுக்கு நெய்வேதியம் அளித்து வழிபாடு செய்தனர் இதில் இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர்கள் பிரகாஷ் ராஜசேகர் பிரபாகரன் ஆய்வாளர் கார்த்திகேயன் விக்கி சுப்பிரமணி பொன்னேரி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் முத்துக்குமார் பானு பிரசாத் பாஜக பட்டியலனி மாநில செயலாளர் சிவகுமார் அதிமுக நகர செயலாளர் செல்வகுமார் பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment