’மிஷன் 2047’ CD... PFI போட்ட பிளான்..? அதிர்ந்து போன உள்துறை அமைச்சகம்..! PFI எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை செய்த விஷயம் தான் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனுடன் தொடர்புடைய RIF, CFI, AIIC, NCHRO, நேஷனல் உமன் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன் மற்றும் ரிஹாப் பவுண்டேஷன், கேரளா ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன. முன்னதாக 17க்கும் மேற்பட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ ரெய்டு நடத்தி பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 1,300க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த சூழலில் பி.எஃப்.ஐ அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் ரெய்டு நடத்திய மத்திய புலனாய்வு அமைப்புகளின் கைகளில் அதிர்ச்சியூட்டும் பல்வேறு விஷயங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பி.எஃப்.ஐ தலைவரான முகமது நதீமிடம் இருந்து முக்கிய ஆவணம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.அதில் ஐ.இ.டி குண்டுகளை எளிதில் கிடைக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்தி எப்படி தயாரிப்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்ற ஆவணம் மற...
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் (Media - News Company) Email : News.kakithapoo@gmail.com www.kakithapoo.com Cell : +91 9962944433 | 044 42146943