Skip to main content

Posts

Showing posts from November, 2024

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி - அம்மா எக்ஸ்பிரஸ் கலீல் ரகுமான் கைது

கள்ளக்குறிச்சி கிராமச்சாவடி தெருவைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவர் ஓ.பி.எஸ் அணியில் நகர செயலாளராக உள்ளார். இவரிடம் கடந்த 2023 நவம்பர் மாதம் கோவை மாவட்டம் போத்தனூர் பகுதி அருள்முருகன் நகரச் சேர்ந்த கலீல் ரகுமான்(60) என்பவர் அம்மா எக்ஸ்பிரஸ் நாளிதழில் நிர்வாக இயக்குனராக உள்ளதாகவும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பழக்கம் உள்ளது. இதன் மூலம் பல்வேறு துறையில் அரசு வேலை வாங்கி தந்துள்ளதாக கூறி அறிமுகமாகியுள்ளார். இதனை நம்பி தன்னுடைய மகளுக்கு இளநிலை உதவியாளராக அரசு வேலை வாங்கி தருவதற்கு ரூபாய் 15 லட்சத்து 92 ஆயிரம் களில் ரகுமானிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அரசு வேலையும் வாங்கித் தரவில்லை பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இதுகுறித்து புண்ணியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் கடந்த மாதம் கலீல் ரகுமான் மீது வழக்குப் பதிந்து தேடி வந்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்.நகரைச் சேர்ந்த துரை(65) என்பவரிடம் கலீல்ரகுமான் என்பவர் தான் அம்மா எக்ஸ்பிரஸ் நாளிதழ் நிர்வாக இயக்குனர் என கூறி அறிமுகமாகியுள்ளார். உன்னுடைய மகனுக்கு அரசு மருத்துவமனையில் ப...