Skip to main content

Posts

Showing posts from February, 2023

போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது...

திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் அருகே உள்ள யாத்திரி நிவாஸ் பக்தர்கள் தங்கும் விடுதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரி என நடித்து கட்டப்பஞ்சாயத்து செய்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியை திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் சுபாஷ். இவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான தெரிவித்து பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டுள்ளார். போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுபாஷ் நேற்று மாலை திருவண்ணாமலைக்கு வந்து ஈசான லிங்கம் அருகே உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியான யாத்திரி நிவாஸ் விடுதியில் தங்கி உள்ளார். யாத்ரி நிவாஸ் விடுதியில் தங்கிய போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுபாஷ் ஒரு தம்பதியிடம் பிரச்சனைகள் குறித்து பேசி பிரச்சனைகளை முடித்து தருவதாக கட்டப்பஞ்சாயத்து பேசி உள்ளார். அப்போது அந்த தம்பதியுடன் இருந்த ஒரு நபர் சுபாஷ் மீது சந்தேகம் கொண்டு காவல் துறை எண்ணான 100க்கு தொலைக்காட்சியில் தகவல் அளித்துள்ளார். தொலைபேசி வாயிலாக தகவலை அறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் யாத்திரி நிவாஸ் விடுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுபாஷ் ஐ.ஏ.எஸ்...

கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு உபகரணங்கள் வழங்கிய டி ஐ ஜி முத்துசாமி.!

வேலூர் மாவட்டம் என்றாலே வெயிலுக்கு பெயர் பெற்றது. இந்நிலையில் வேலூரில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது.  கடும் கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு தொப்பி, ஓ ஆர் எஸ் கரைசல் மற்றும் கண்களை முழுமையாக குளிர்ச்சியாக வைத்திருக்கும் வகையில் கூலிங் கிளாஸ் ஆகியவற்றை நேற்று காலை காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் நடந்த எளிய நிகழ்ச்சியில் வேலூர் சரக காவல்துறை தலைவர் முத்துசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ்கண்ணன், காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி, காட்பாடி காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், காட்பாடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர் வாசுதேவன் 

வேலூர்: ஒடுகத்தூரில் போலி மருத்துவர் கைது.!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூர் உள்வட்டம், ஒடுகத்தூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் போலி மருத்துவர் என புகார்கள் வந்தன. இதையடுத்து, அணைக்கட்டு வட்டாட்சியரின் தலைமையில்  பெருமாள் என்பவர் யுவராஜ் கிளினிக் என்ற பெயரில் நடத்தி வந்த மருத்துவமனையில் திடீர் விசாரணையை மருத்துவ துறையினர் மேற்கொண்டனர். விசாரணையில் பொதுமக்களுக்கு காயம், காய்ச்சல் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சுமார் 2 வருடமாக கிளினிக் நடத்தி வருவதாகவும் பெருமாள் தெரிவித்தார். மேலும் ஸ்டெதாஸ்கோப், ரத்த அழுத்தம் பரிசோதனை கருவி, ஆங்கில மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்து செலுத்தும் ஊசிகள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன. மேலும் யுவராஜ் கிளினிக் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த அதிரடி சோதனை நிகழ்வில் மண்டல துணை வட்டாட்சியர், ஒடுகத்தூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள் மற்றும் ஒடுகத்தூர் சுகாதார நிலைய ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர். இது குறித்து வட்டார மருத்துவ அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற போலி மருத்துவர்கள் ஒடுகத்தூரில் இன்னமும் இருவர் இருப்பதாக தகவ...

அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவ, மாணவியருக்கு "நீங்களும் சாதனையாளர்களே" எனும் தலைப்பிலான நடைபெற்ற கருத்தரங்கம்.

 அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவ, மாணவியருக்கு "நீங்களும் சாதனையாளர்களே" எனும் தலைப் பிலான தலைப்பிலான கருத்தரங்கம் கொளத்தூரில் உள்ள மகராசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் முனைவர் வி.ஜெ.சக்கரவர்த்தி அவர்கள் வரவேற்புரை கெழ்த்தினார். அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் துணை ஆணையரும். அருள்மிகு கபாலீசுவரர் கல்லூரியின் செயலாளருமான ஹரிஹரன் அவர்கள் இந்நிகழ்வினைத் தலைமை தாங்கி நடத்தினார். இக்கருத்தரங்கின் சிறப்பு அழைப்பாளமாக, க்ளேபல் அட்ஜெஸ்மென்ட் பவுண்டேஷனின் நிர்வாக இயக்குநர். லட்சுமி சுப்பிரமணின் அவர்கள் மாணவர்களோடு கலந்துரையாடினார், மாணவர்கள் தங்களைத் தாங்களே ஆச்சர்யப்படுத்த பழக வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இடையீடுகளுக்கு இடம் கொடுக்காமல் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்  பட்டப்படிப்பை முடித்து சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் இலக்கை நோக்கி நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களைச் சாதனையானராக உலகிற்கு அடையாளம் காட்டும் என்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றின...

விபத்தில் இறந்த முன்னாள் ராணுவ வீரரின் உடல் பாகங்கள் சிஎம்சி மருத்துவமனைக்கு தானம்..!

சாலை விபத்தில் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரரின் உடல் பாகங்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(39). இவர் முன்னாள் ராணுவ வீரர். தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார் . இவர் வேலைக்கு சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது உடல் பாகங்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனை ராணிப்பேட்டை கேம்பஸூக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த தானத்தை பெற்றுக் கொண்ட வேலூர் சிஎம்சி நிர்வாகம் உடல் உறுப்புகள் தேவைப்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் இதயம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும்,  லிவர் வேலூர் சிஎம் சி ராணிப்பேட்டை கேம்பஸுக்கும், இடதுபுற கிட்னி வேலூர் சிஎம்சி ராணிப்பேட்டை கேம்பஸுக்கும் வலதுபுற கிட்னி சென்னை போரூர் எஸ்ஆர்எம்சி மருத்துவமனைக்கும் தானமாக அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் உடல் உறுப்புகள் தேவைப்பட்டோர் இந்த உடல் உறுப்புகளை பெற்றுக் கொண்டு மீண்டும் வாழ்க்கையில் புதிய ஒளி பெற்றனர். சாலை விபத்தில் கடந்த 18ஆம் தேதி உயிரிழந்த சரவணனுக்க...

மெத்தனப்போக்கில் செயல்பட்ட லத்தேரி போலீசாரை களையெடுத்த வேலூர் எஸ்.பி.,!

 வேலூர் மாவட்டம், காட்பாடி உட்கோட்டத்தைச் சேர்ந்தது லத்தேரி காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் ஆய்வாளராக விஸ்வநாதன் பணியாற்றி வந்தார். இவருடன் ரங்கநாதன், பாஸ்கரன் மற்றும் போலீசார் இந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தனர்.  இவர்கள் கடந்த ஜனவரி மாதம் நடந்த பால்காரர் நாகேஷ் என்பவரது கொலை வழக்கில் சரியாக துப்பு துலக்கவில்லை என்பதும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருபவர்களிடம் கணிவாக நடக்காமல் செயல்பட்டதாகவும்  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. அப்பொழுதும் எஸ்.பி., அலுவலகம் வாயிலாக பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மௌனம் காத்து வந்தனர் லத்தேரி போலீசார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் லத்தேரி காவல் நிலையத்தை உன்னிப்பாக கவனித்து வந்தது. கடந்த 5ம் தேதி லத்தேரியில் கத்திக்குத்து சம்பவம் ஒன்றும் அரங்கேறியது . கொலை வழக்கில் குற்றவாளிகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ரௌடிகளுடன் இணக்கமான சூழலில் காவல் நிலையம் செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து லத்தேரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய தலை முதல் வால் வரை களையெடுத்தார் மாவட்ட...

திமுக சார்பில் காட்பாடியில் அண்ணாவின் 54வது நினைவு நாள் அனுசரிப்பு..!

 வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக சார்பில் அண்ணாவின் 54 வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாதுரையின் 54வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டல குழு அலுவலகம் அருகில் இருந்து வேலூர் தொகுதி எம்பி டி.எம்.கதிர்ஆனந்த், வேலூர் மாநகர துணை மேயரும், காட்பாடி தெற்கு பகுதி கழக செயலாளருமான எம். சுனில் குமார், காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னிய ராஜா, காட்பாடி 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, காந்திநகர் பகுதி செயலாளர் பரமசிவம் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலையை அடைந்தனர். இந்த மௌன ஊர்வலத்துக்கு பிறகு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலைக்கு வேலூர் தொகுதி எம்பி டி. எம். கதிர்ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர் இதை இந்த அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அன்பு, ரீட்டா சரவணன், சீனுவாசன், சித்ரா மகேந்திரன...

மதுரை நேருநகர் ஸ்ரீகாளியம்மன் திருக்கோவில் நடைபெற்ற திருவிளக்குபூஜை.

மதுரை பைபாஸ் ரோடு நேருநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் திருக்கோவில் 22ம் ஆண்டு உற்சவ விழா கடந்த 30.1.2023 அன்று கணபதி ஹோமத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு பெண்களின் கும்மிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும்  திருவிளக்கு பூஜை 70 வது வட்ட மாமன்ற உறுப்பினர் அமுதா தவமணி தலைமையில் நடைபெற்றது. இத்திருவிளக்குபூஜையில் சுற்றுப்புற பகுதி பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுவிக்ஷே தீபராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் ஜெயப்பிரகாஷ், செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் மாரியப்பன் தலைமையில் விழாக்குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர். செய்தியாளர் : செந்தில் கணேஷ்

சென்னையில் ரவுடிகள் ஐந்து பேர் கைது.. ரவுடி ஒழிப்பு போலீசார் நடவடிக்கை.!

சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்திரவின் பேரில்  ரவுடி ஒழிப்பு சிறப்பு தனிப்படை மேற்கு மண்டல காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் சென்னையில் உள்ள தலைமறைவு ரவுடிகளை வேட்டையாடி பிடித்து  அவர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி அம்பத்தூர் அயப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் (எ) சதீஷ்குமார் (என்ற )கோண சதீஷ் வயது 29 என்ற தலைமறைவு ரவுடி பொறி வைத்து பிடித்தனர். இவர் மீது ஓட்டேரி செம்பியம் கொடுங்கையூர் மாதவரம் திருவேற்காடு ஆகிய பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்ளது. இவர் பிரபல ரவுடி அகரம் கதிர் என்பவனின் கூட்டாளி ஆவார் நடந்து முடிந்த கொலைகளுக்கு இவர் மூளையாக செயல்பட்டவர் எனவும் இவரை முதல் முறையாக சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்வது குறிப்பிடத்தக்கது. பிரபல ரவுடியான சேர்த்து சென்னை புறநகர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்துக்கள் அடிதடி வழக்குகள் போன்றவற்றில் தலைமறைவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரை பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் பகுதியில் அவரது கூடாடாளி அணில் எ சதீஷ் வயது 26 மாது வயது 26 தணிகாசலம் வயது 20 ஆகியோருடன் பதுங்கி இருந்த அவரை மிகவும் லாவகமாக பிடித்த...