திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில சுமார் நான்கு அடி உயர டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலையை கிராம மக்கள் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதால் அனுமதி இன்றி அங்கு சிலை அமைக்க கூடாது என பொதுமக்களிடம் ஆரணி போலீசார் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் ஆகியோர் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டு வருகின்றனர் அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பீடம் அமைத்து சிலை நிறுவும் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது சிலை நிறுவப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்து அங்கேயே சிலை இருக்க வேண்டுமென பொன்னேரி வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்க மறுத்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் உரிய பாதுகாப்புடன் சிலையை பத்திரமாக அகற்றி பாதுகாப்பாக கொண்டு சென்று வைத்தனர்.
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் (Media - News Company) Email : News.kakithapoo@gmail.com www.kakithapoo.com Cell : +91 9962944433 | 044 42146943

Comments
Post a Comment