திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புது நகரில் உள்ள சித்தர் பீடம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை பௌர்ணமியை ஒட்டி 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.பெண்கள் பால் குடங்களை தலையில் சுமந்தவாறு அலகு குத்தியும் மேல தாளங்கள் முழங்க முக்கிய வீதிகளில் வலம் வந்து ஓம் சக்தி பராசக்தி கோஷங்களை எழுப்பியவாறு பக்தி பரவசத்துடன் அம்மனை தரிசித்தனர். ஓம் மகாமாயா சக்தி கோவில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபாடு செய்தனர். சித்ரா பௌர்ணமி பால்குட விழாவிற்கான ஏற்பாடுகளில் ஓம் மகாமாய சக்தி கோவில் டிரஸ்ட் சிதம்பரம் நடராஜர் அவர்களின் குடும்பத்தினர் செய்திருந்தனர்.இதில் ஊராட்சி மன்ற தலைவர் எம் டி ஜி சுகந்தி வடிவேல் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம் டி ஜி கதிர்வேல் திரைப்பட தயாரிப்பாளர் செல்வம் சாண்டி செல்வராஜ் தலைவர் சாண்டி முத்தாரம்மன் கோவில் டிரஸ்ட் மற்றும் கிராம நிர்வாகிகள் கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ராதா கிருஷ்ணன்
3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

Comments
Post a Comment