Skip to main content

Posts

Showing posts from October, 2024

நண்பனை கொலைச்செய்து துரோகியாக மாறிய விசிக சீனுவளவன்.. குற்ற உறுத்தல் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள கல்யாணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ஆரணி அடுத்துள்ள பையூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவருடன் ரம்யாவுக்குத் திருமணம் மீறிய தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. கணவருக்குத் தெரியாமல், பெருமாளை அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கிறார் ரம்யா. மனைவி ரம்யாவின் நடத்தையில் சுதாகருக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மனைவியின் தவறான தொடர்பு தெரியவந்ததால், கடும் மனஉளைச்சலுக்கு ஆளான சுதாகர், கோழிப்புலியூர் கிராமத்தில் வசிக்கும் தனது நண்பன் சீனுவளவனைச் சந்தித்து, தனது மனைவியின் நடத்தை விவகாரம் குறித்துக் கூறி வேதனைப்பட்டிருக்கிறார். சீனுவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரணமல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். நண்பன் சுதாகரை சமாதானப்படுத்திய வி.சி.க நிர்வாகி சீனுவளவன், அவரது மனைவியுடன் திருமணம் மீறிய தொடர்பிலுள்ள பெருமாளை கண்டிப்பதற்காகச் சென்றுள்ளார். ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென ரம்யா மீது சீனுவளவனுக்கு அக்கறை ஏற்பட்டது....

பத்திரிகையாளர்கள் சங்கம் என்ற போர்வையில் எல்எல்பி, பள்ளி, கல்லூரி ஆவணம் தயாரித்து லட்சக்கணக்கில் சுருட்டல்

  பத்திரிகையாளர் சங்கம் என்ற போர்வையில் பள்ளி, கல்லூரிகளுக்கான போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தும் எல்எல்பி பட்டம் வாங்கி கொடுத்தும் பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட டுபாக்கூர் ஆசாமிகள் 2 பேரை கைது செய்தனர்.  இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல மோசடிகள் அம்பலமாகி உள்ளது. வடசென்னை பகுதியில் பெரும்பாலான வாகனங்களில் பிரஸ் ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு சென்றவர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர்கள் போலி பத்திரிகையாளர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து நுண்ணறிவு பிரிவு போலீசார் வடசென்னையில் செயல்பட்டுவரும் பத்திரிகையாளர் சங்கங்கள், மாத பத்திரிகைகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், வில்லிவாக்கத்தில் ஒரு பத்திரிகையாளர் சங்கத்தில் எந்த சான்றிதழ் கேட்டாலும் தயார் செய்து கொடுப்பதாகவும் ஒவ்வொரு சான்றிதழுக்கும் குறிப்பிட்ட தொகை நிர்ணயித்து வசூல் செய்வதாகவும் ராஜமங்கலம் போலீசாருக்கு தெரியவந்தது. வக்கீல்கள் என்ற பெயரில் கட்ட பஞ்சாயத்து நடப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார், 13வது நீதிமன்ற நடுவர் தர்மபிரபுவுக்கு தகவல் தெரிவித்ததுடன் அவரத...

சர்வதேச சிலம்பம் போட்டியில் 23-தங்க பதக்கங்களை வென்ற, தஞ்சையை சேர்ந்த மாணவ, மாணவிகள்.!

தஞ்சாவூரைச்  சேர்ந்த சிலம்பம் பயிற்சியாளர், டாக்டர். வீ. விஸ்வேஸ்வரன், அவரது பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் கார்த்திக் அவர்கள்,விஸ்வேஸ்வரன் சிலம்பத்தில் நாட்டம் மிக்கவராக இருந்ததினால், அவருக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்த காரணத்தால், விஸ்வேஸ்வரன்  சிலம்பம் கற்றுக்கொள்ள மிகுந்த ஆர்வம் மிக்கவராக இருந்ததை புரிந்துகொண்ட கார்த்திக் அவர்கள், அவரது ஆசான்(குரு) சோமு(எ) யோவான் அவர்களிடம்,வீ. விஸ்வேஸ்வரனை  அறிமுகம் செய்து வைத்துள்ளார்.விஸ்வேஸ்வரனும்  அவரிடம், எட்டு ஆண்டுகள் திறன்பட நன்கு பயிற்சி பெற்று, இதன் பின்பாக சேவோன் சிலம்பம் பயிற்சி பள்ளியை, கீழவாசல் குறிஞ்சி தெருவில் உள்ள,' மாநகராட்சி பள்ளியில் துவங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி அளித்துள்ளார். இது மட்டுமல்லாது ஆயிரம் கணக்கான தேர்களை சிலம்பத்தால் உருவாக்கியுள்ளார்.இவரிடம் சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள்  சொல்லிக் கொடுப்பதை சிறந்த முறையில் கற்றுக் கொண்டதனால், அவர்களுடைய திறமையை நன்கு அறிந்த பயிற்சியாளர்,வீ. விஸ்வேஸ்வரன் அந்த மாணவர்களை மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், நடைபெறும...

புழல் மத்திய சிறையில் மேம்படுத்தப்பட்ட வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் நேர்காணல் அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் சிறைத்துறை அமைச்சர்

புழல் மத்திய சிறையில் மேம்படுத்தப்பட்ட வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் நேர்காணல் அறையை சிறைத்துறை அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பார்வையாளர்களுக்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்த போது எந்தவித சிறப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை. அமைச்சர் ரகுபதி பேட்டி. சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை தண்டனை மகளிர் என மூன்று பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை கைதிகள் தங்களது உறவினர்களை சிறைக்குள் சந்திப்பதற்கான பிரத்தியேக அறையும், வழக்கறிஞர்கள் தங்களது கட்சிக்காரர்களை சந்திப்பதற்கான பார்வையாளர் அறையை மேம்படுத்துமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. கைதிகளின் உறவினர்களும் வழக்கறிஞர்களும் கைதிகளை சந்திப்பதற்கு முந்தைய தினமே புழல் சிறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள பிரத்தியேக எண்ணில் முன்பதிவு செய்து கொண்டால் மறுநாள் அவர்களுக்கான நேரம் ஒதுக்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் கால விரயம் இன்றி பார்வையாளர்களும் வழக்கறிஞர்களும் சிறை கைதிகளை சந்திப்பதற்கான பிரத்தியேக ஏற்பாடுகள்...