Skip to main content

நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை நிகழ்ச்சி..!

சென்னை புழல் கதிர்வேடு பகுதியில் இயங்கி வரும் நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 9 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சமுதாயத்தில் நலிவடைந்த மாணவ மாணவிகள் அனைவருக்கும் பல்வேறு இலவச தொழிற் திறன் மேம்பாட்டு பயிற்சியை அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது.இந்த நிலையில்  இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தரபாண்டியன் தலைமையில் 4வது முறை சாதனையாக ஏசியா புக் ஆப் ரெகார்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்வு நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்றது.இங்கு தொழிற்பயிற்சி பெற்ற 20 இளைஞர்களை தேர்ந்தெடுத்து 10 இருசக்கர வாகனங்களை 10 நிமிடத்தில் தனித்தனியே  பிரித்து மற்றும் முழுவதுமாக ஒன்றிணைத்து இயங்க வைக்கும் நிகழ்வு ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில்  பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் மூத்த தொழில்நுட்ப வல்லுனர் கிருஷ்ணகுமார், வருமானவரித்துறை ஆணையர் நந்தகுமார், புழல் சரக காவல் உதவி ஆணையர் சகாதேவன், பெருநகர சென்னை மாநகராட்சி புழல் கதிர்வேடு 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு, சமூக சேவகர் கதிர்வேடு பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசினையும், கேடயத்தையும் வழங்கி பாராட்டினர்.குறிப்பாக இந்நிறுவனத்தில் கடந்த வருடம் சுமார் 1300 இளைஞர்களுக்கு ஆட்டோ மொபைல்ஸ் சம்மந்தப்பட்ட இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து பல முன்னணி நிறுவனங்களில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தியாளர் ரஞ்சித் 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...