சமூக பொருளாதார முன்னேற்ற அறக்கட்டளை நிறுவனத் தலைவரும் கொடைவள்ளலுமான லயன் டாக்டர் ஏ.ஆர். தர்மலிங்கம் யாதவ் பிறந்தநாளை முன்னிட்டு 2000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் பிறந்தநாள் விழாவும் செங்குன்றம் அடுத்த காவாங்கரை வெட்டுடை அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் லயன் டாக்டர் ஏ.ஆர். தர்மலிங்கம் யாதவ் - ராணி சங்குபதி ஆகியோர் மகன் சசிக்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தனர். பாடியநல்லூர் சுற்றுவட்டாரா யாதவர் நலச் சங்க செயலாளர் எம்.வி. புண்ணியசேகரன், இளைஞர் அணி தலைவர் எம்.சரவணன் யாதவ் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டை மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் பாடியநல்லூர் சுற்றுவட்டாரா யாதவர் நலச் சங்கத் தலைவர் பி.ராஜேந்திரன் யாதவ், பொருளாளர் எம்.முத்து யாதவ், கௌரத் தலைவர்கள் கே.கோகுல சேகர் யாதவ், ஓ.கே. முனியாண்டி யாதவ், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரவி, இளைஞரணி செயலாளர் என்.ஹரி யாதவ், பொருளாளர் ஏ.வெங்கடேசன் யாதவ், எம்.விக்னேஷ்வரன் உள்ளிட்ட செங்குன்றம், காவாங்கரை, புழல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், லயன்ஸ் சங்கம், அனைத்து சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டு வாழ்த்தினர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment