திருவள்ளூரில் மழை நீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொன்னேரி வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு..!
திருவள்ளூர் மாவட்டம் பெரவள்ளூர் போரக்ஸ் நகர் பகுதியில் மெட்டாபிலிம் இந்தியா பிரைவேட் லிமிடெட் என தனியார் தொழிற்சாலை இருந்த இடத்தில் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த வெங்கட் மனிஷ்ரெட்டி தனியார் ஒருவர் பெரவள்ளூர் ஏரி மற்றும் அங்குள்ள மழைநீர் கால்வாய் சுமார் 20க்கும் மேற்பட்ட ஏக்கரில் ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்வதை தடுத்து முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொன்னேரி வட்டாட்சியர் அலுவகத்தில் பாதிக்கப்பட கிராமமக்கள் வழக்கறிஞர் ராஜா தலைமையும் மனு அளித்தனர்.
மாவட்ட நிர்வாகம் அரசு துறை அதிகாரிகள் தலையிட்டு ஏரி ஆக்கிரமிப்பை மீட்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மறியல்போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அளித்தும் தற்போது வரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய தீர்வு காணப்படவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment