Skip to main content

Posts

Showing posts from June, 2023

வேலூரில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் - ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு.!

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாநகர திமுக மற்றும் வேலூர் சட்டமன்ற தொகுதி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மாநகர செயலாளர் ப .கார்த்திகேயன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.  இதில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் திமுக வேலூர் மாவட்ட செயலாளரும்,   அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார், மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, மாவட்ட பொருளாளர் சி.நரசிம்மன், மாவட்ட துணை செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் ,அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர் வாசுதேவன் 

வேலூர் கணியம்பாடியில் சிபிஐஎம்எல் ஆர்ப்பாட்டம் !

வேலூர் மாவட்டம்,  கணியம்பாடி பேருந்து நிலையத்தில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.ஐ.எம்.எல்., கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலூர் மாவட்டம் ,கணியம்பாடி பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை அகில இந்திய விவசாயிகள் கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் ஆர்.தசரதன் தலைமையில், மாணிக்கம், கோபால், சாந்தி, மலர், சதீஷ், ஆகியோர் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் எம்.சரோஜா கலந்து கொண்டு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மோடி ஆட்சியை வெளியேற்றுவோம் மக்கள் உரிமைப் பெறுவோம், 2022க்குள் அனைவருக்கும் வீடு என்றது அரசாங்கம் ஆனால் 2023 முடிய போகிறது இன்னும் வீடு கிடைக்கவில்லை, நாட்டின் பல முக்கிய துறைகளை சீரழித்ததை போலவே மோடி அரசாங்கம் தேசிய ஊரக வேலை திட்டத்தையும் சீரழித்து வருகிறது. 30 கோடிக்கு மேற்பட்ட கிராமப்புற தொழிலாளர்களை பட்டினி போட்டுக் கொள்ளும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆறு...

ராசிபுரம் ரயில்கள் நிலையத்தில் 3 ரயில் நின்று செல்ல அனுமதி.

பரிசார்த்த  முறையில் ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தென்னக ரயில்வே  ராசிபுரம் ரயில் நிலையத்தில் 3   விரைவு ரயில் வண்டிகளுக்கு நின்று செல்ல அனுமதி வழங்கி இருக்கிறது நாமக்கல் ஜுன் 24  நாமக்கல் மாவட்டம் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று , தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் மின் கல வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம் ஆகியோர் இந்த ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  கீரம்பூர் கீழ் சாத்தனூர் ராசபாளையம் உள்ளிட்ட 13 கிராம ஊராட்சிகளுக்கு தலா 1 வீதம் 13 மின்கல வாகனங்களை வழங்கி கொடி அசைத்து  தொடங்கி வைத்து அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களிடம்  ஒப்படைத்தார்   இந்த வாகனம் ஒன்றின் விலை தலா ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். 13 வாகனங்களின்  மொத்த மதிப்பு ரூ 32 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர். என். ராஜேஷ்குமார்...

காட்பாடி சத்திரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்..!

வேலூர்,ஜூன் 23- காட்பாடி அருகே உள்ள சத்திரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் மற்றும் ஆங்கில வழி கல்வி முதல் வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேடு கம்பர் தெருவில் உள்ள சத்திரம்  மாநகராட்சி தொடக்கப் பள்ளியில்  2023 - 2024 ஆம் கல்வியாண்டில்  பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மற்றும் ஆங்கில வழி முதல் வகுப்பு வகுப்பு தொடக்க விழா விமரிசையாக  வட்டார கல்வி அலுவலர் சரவணன்  முன்னிலையிலும்,பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.டி. அல்போன்ஸ் கிரி தலைமையிலும் நடைபெற்றது.  இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மேலாண்மை குழு கூட்டம் மற்றும் ஆங்கில வழி முதல் வகுப்பை தொடங்கி  வைத்தார்.   அதனைத் தொடர்ந்து பள்ளியில் புதியதாக  சேர்ந்த மாணவர்களுக்கு   பரிசுத் தொகை ஆயிரம் ரூபாய்   வழங்கி, மாணவ, மாணவிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.  பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரி...

வேப்பநேரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

வேலூர், ஜூன் 23- வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணனின் உத்தரவின் பேரில் குடியாத்தம் உட்கோட்டம் கே.வி. குப்பம்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பநரி கிராமத்தில்  சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் எம்.டி. இருதயராஜ்  அறிவுறுத்தலின்படி,   காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் மற்றும்   புள்ளியல் ஆய்வாளர் அருணா, இணைய வழி குற்றப்பிரிவு பெண் தலைமை காவலர்  சசிகலா,  பெண் தலைமை காவலர் தனலட்சுமி,  ஆகியோர் வேப்பநேரி பொதுமக்களிடம் சமூக நீதி , சமத்துவம், மனிதநேயம், மனித உரிமைகள் ,எஸ்.சி./எஸ்.டி.,  திட்டங்களைப் பற்றியும், இணையதள குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இலவச உதவி எண்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பற்றிய  துண்டு  பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகித்தனர். இதன் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில்   100 க்கும் மேற்பட்ட பொதுமக்களும், பெண்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இவ்வாற...

வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் 25ம் தேதி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ரூ. 4 கோடி மதிப்பீட்டில் தங்கக் கவசம்.!

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலய 4-வது மஹா கும்பாபிஷேக பெருவிழா வரும் 25-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. கோயில் கொடிமரம் மற்றும் கலசங்கள், மூலவர் ஆகியயோருக்கு சுமார் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் தங்க மூலாம் பூசப்பட்ட கொடிமரம் முழுவதும், சிறிய, பெரிய கலசங்கள் மூலவர் என ரூ.4 கோடியில் அமைக்க விறுவிறுப்பாக பணிகள் நடைபெற உள்ளது. தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத் தகடு, கலசம் ஆகியவற்றை பூஜை செய்து கோயில் நிர்வாகிகள் எடுத்துச் சென்றனர். இந்த பூஜையில் கும்பாபிஷேக கமிட்டி தலைவர் கலவை ஶ்ரீமௌனகுரு சச்சிதானந்த சுவாமிகள், செயலாளர் சுரேஷ்குமார், துணைத் தலைவர்கள் தர்மலிங்கம், அச்சுதானந்தம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் வெங்கடசுப்பு, கும்பாபிஷேக தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். கும்பாபிஷேகத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிக விரைவாக கமிட்டியினர் செய்து வருகின்றனர். செய்தியாளர் : வாசுதேவன் 

மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி

 மதுரை யாதவா பெண்கள் கலைக் கல்லூரியில்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்ற விழாவில்  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி  மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.44.00 லட்சம் மதிப்பீட்டில் பரிசுகளை வழங்கினார். இவ்விழாவில்,  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி  தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாடு மாநிலத்தை விளையாட்டுத் துறையில் முதன்மை மாநிலமாக மேம்படுத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மிக குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டு சர்வதேச நாடுகள் பாராட்டும் வகையில் தமிழகத்தில் ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன. இது  தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார்  நிர்வாகத் திறனுக்கு சான்று.  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் நமது மாநில இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று தமிழகத்திற்...

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஆட்டோ ஓட்டும் ஆசிரியர்..!

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஆட்டோ வாங்கி, அதனை இயக்கி வருகிறார் இடைநிலை ஆசிரியர் தினகரன். பள்ளிக்கு மாணவர்கள் வர காலதாமதம் ஆவதால் தனது சொந்த செலவில் ஆட்டோ வாங்கி, மாணவர்களுக்காக இயக்கி வரும் ஆசிரியரின் சேவையை வெகுவாக பாராட்டுகிறார்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த டாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இந்த கிராமத்திலிருந்தும், இதற்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு குறித்த நேரத்தில் வருவதற்கு முடியாமல் போகிறது. இதனால் ஆசிரியர் தினகரன் தனது சொந்த செலவில் ஆட்டோ வாங்கி பள்ளி மாணவர்களை குறித்த நேரத்தில் பள்ளியில் கொண்டு வந்து விடுவதும், பள்ளி வேலை நேரம் முடிந்ததும் அவர்களை மீண்டும் பள்ளியிலிருந்து அவர்களது வீடுகளில் கொண்டு போய் விடுவதையும் ஒரு சேவையாக கருதி செய்து வருகிறார். இவரது ஆட்டோ மூலம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்ப...

கர்நாடக மாநிலத்துக்கு கடத்த இருந்த 555 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.!

வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்  உத்தரவுப்படி பத்தலபல்லி  சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.   அப்போது பத்தலபள்ளி கிராமம் அருகாமையில் நூதன முறையில் பொன்னி அரிசி போன்று 25 கிலோ கொள்ளளவு கொண்ட பைகளில் நுட்பமாக தைத்து கடத்த முயன்ற 555 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை வட்டாட்சியர் விநாயகமூர்த்தி மேற்பார்வையில், களப்பணியாளர் திவாகர் தலைமையில், இந்த அதிரடி தணிக்கை நடந்தது.  பிடிபட்ட அரிசி மூட்டைகளை குடியாத்தம் நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் பறக்கும் படையினர்  ஒப்படைத்தனர். செய்தியாளர் : வாசுதேவன்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நல உதவிகள், மதிய உணவு..

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு  விழாவினை முன்னிட்டு சென்னை வடகிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பாடியநல்லூர் ஊராட்சியில் கழக கொடி ஏற்றி தூய்மைப் பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலை, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளரும் சோழவரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவருமான மீ.வே.கருணாகரன் தலைமையில் பாடியநல்லூர் மொண்டியம்மன் நகர் பஜார்  அருகே நடைபெற்றது.  சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு டாக்டர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, கழக கொடியேற்றி, தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், 1000 பேருக்கு மதிய உணவாக  சிக்கன் பிரியாணி வழங்கினார். இதில் சோழவரம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் அ.காசிம் முகம்மது, துணைச் செயலாளர்கள் கே.எம். துரைவேல், ப.சீனிவாசன், கி.வீரம்மாள், பொருளாளர் செ.அரசு, மாவட்ட பிரதிநிதிகள் இரா.விஜயன், பா.சேகர், பொன்.கோதண்டன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பரசுராமன்...

செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி சார்பில் தூய்மைப் பணி விழிப்புணர்வு பேரணி

செங்குன்றம் நாரவாரிக்குப்பம்தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம்  புழல் ஏரிக்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடங்களில் தூய்மை பணியும் பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சியாக மாற்றுவதற்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பேரூராட்சி தலைவரும் சிஎம்டிஏ உறுப்பினருமான கு.தமிழரசி குமார் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார்.  பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்இஆர். விப்ரநாராயணன், லயன்ஸ் சங்க மாவட்டச் செயலாளர் இரா.ஏ.பாபு ஆகியோர் தூய்மைப் பணியை துவக்கி வைத்தனர்.கவுன்சிலர்கள் வினோதினி பாலாஜி, கா.கு. இலக்கியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இப்பணியில் பேரூராட்சியுடன் இணைந்து சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரி, எலைட் பள்ளி,  ஸ்வாட், தமுமுக - மமக, இயற்கை பாதுகாப்புக் குழு உள்ளிட்ட பல்வேறு பொதுநலச் சங்கங்களை சேர்ந்த தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டு புழல் ஏரிக்கரையை தூய்...

இராசிபுரம் அருகே மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன்..

 நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் இவருக்கு திருமணம் ஆகி சரசு, சின்னப்பொண்ணு  என 2 மனைவிகள் உள்ளனர்.    இவர் கூலி வேலைக்கு செல்லும் நிலையில் இவருக்கு சின்ராசு, கோபால் என்ற இரு மகன்கள் உள்ளனர் இவர்களும் கூலி வேலைக்கு செல்கின்றனர். இவரது 2வது மனைவி சின்னபொண்ணு நடத்தையின் மீது மாரியப்பனுக்கு சந்தேகம் இருந்து வந்ததாகவும் இருவருக்கும் அவபோது குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாகவே சொந்த நிலத்தை விற்பதற்க்கு மாரியப்பன் முயற்சி செய்து வந்ததாகவும், நிலத்தை விற்கக் கூடாது என மனைவி சின்னபொண்ணு தடுத்து வந்ததாகவும் இதனால் இவர்களுடைய அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.... இந்த நிலையில் வழக்கம் போல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி சின்னபொண்ணு மீது மாரியப்பன் அதிகாலை அளவில் தலையில்   ஹோலோ பிரிக்ஸ் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்ததாக  கூறப்படுகிறது. இரத்த வெள்ளத்தில்  கிடந்த மனைவியடனே தூங்கிவிட்டு அதிகாலை அளவில்  காவல் நிலையத்தில் தானாக சென்று தன் மனைவியை தல...

நாமக்கல் அருகே பயங்கரம் ...29 ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய்க்கூட்டம் ..!

  நாமக்கல் மாவட்டம் விசாணம் ஊராட்சிக்கு உட்பட்ட விட்டப்பநாயக்கன் பட்டியை சேர்ந்த விவசாயி பாஸ்கர் இவர் விவசாயம் நிலத்தில் நேற்று இரவு 29 வெள்ளாடுகளை பட்டியில் போட்டு அடைத்து விட்டு வழக்கம் போல் உறங்க சென்றார்  காலையில் எழுந்து பார்க்கும் போது 29 ஆடுகளும் இறந்து கிடந்தன  மேலும் 5  கோழிகளும் இறந்து கிடந்தன இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுத்த பிறகு நஷ்ட ஈடு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்  இப்பகுதியில் அதிகமாக கோழிப்பண்ணைகள் இருக்கும் நிலையில் இறந்த கோழிகளை உண்பதற்கு நாய்கள் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் நாய்களின் அட்டகாசத்தை தடுத்து நிறுத்தி கால்நடைகளை உயிரிழப்பை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்  இறந்த 29 ஆடுகளை விவசாயி பாஸ்கர் அப்பகுதியில் குழி வெட்டி புதைத்தார். செய்தியாளர் ;முத்தையா 

குடியாத்தம் அருகே சாராயம் காய்ச்ச வெல்லம், நாட்டு சர்க்கரை பதுக்கி யவர் கைது..!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய வேட்டை நடத்த போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தலைமையில், மாவட்ட தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் குடியாத்தம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  பெருமாள் என்பவரின் வீட்டின் பின்புறம் கள்ளச்சாராய ஊறலுக்கு பயன்படுத்தக்கூடிய 900 கிலோ எடை கொண்ட 18 வெல்ல மூட்டைகள் மற்றும் 600 கிலோ எடை கொண்ட 20 நாட்டு சர்க்கரை மூட்டைகள் என மொத்தம் 1500 கிலோ வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெருமாள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். செய்தியாளர் : வாசுதேவன் 

காரில்... 2500 மதுபாட்டில்களை கடத்திய இருவர் கைது..!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மணிவண்ணன் உத்தரவின் பேரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதனடிப்படையில் பொன்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதண்டகுப்பம் மூன்று வழிச்சாலையில்  ஃபோர்டு ஐகான் காரில் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து மதுபானங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பொன்னை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீனிவாசன், எஸ்எஸ்ஐ ராஜேந்திரன், எஸ்எஸ்ஐ ரவி, தனிப்பிரிவு எஸ்எஸ்ஐ மணவாளன், காவலர்கள்  தங்கராஜ் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் மேற்கொண்ட வாகன சோதனையில் "டாப் ஸ்டார்" என்ற பெயர் கொண்ட 90ML அளவு கொண்ட 2112 மது பாக்கெட்டுகள் 384 மது பாக்கெட்டுகள் என மற்றும் 180 ML அளவு கொண்ட மொத்தம் 2496 மது பாக்கெட்டுகள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர். அத்துடன் மது கடத்திய வினோத் குமார்,  ஆனந்தன் என்ற இருவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். செய்தியாளர் : வாசுதேவன்