டேங்க் ஆப்ரேட்டர் பணி வழங்குவதற்கு ரூபாய் 5 லட்சம் கேட்ட ஊராட்சி மன்ற தலைவியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா ,இடப்பிறை ஊராட்சியில் டேங்க் ஆப்ரேட்டராக கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்தவர் கோவிந்தசாமி. இந்நிலையில் கோவிந்தசாமி உடல் நலக்குறைவால் கடந்த 31. 12 .2022 இல் காலமானார். இதையடுத்து அவரது பணியை அவரது மனைவி பராசக்தி தொடர்ந்து இந்நாள் வரை செய்து வந்தார் .கணவர் இறந்ததால் கருணை அடிப்படையில் இந்த பணி பராசக்திக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவி ஜீவா என்பவர் கடந்த நான்கு மாதங்களாக பராசக்திக்கு மாத ஊதியம் தராமல் கிடப்பில் போட்டு விட்டார். இதனால் பராசக்தி நான்கு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் மிகவும் தவிப்புக்கு உள்ளானார். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவியை நேரில் சந்தித்து தனக்கு நான்கு மாத சம்பளம் வழங்காமல் உள்ளீர்கள், அதை கொடுத்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்று கேட்டுள்ளார் . அதற்கு ஊராட்சி மன்றத் தலைவி ஜீவா டேங்க் ஆப்ரேட்டர் பணி வழங்க வேண்டும் என்றால் எனக்கு நீ ரூபாய் 5 லட்சம் கொடு...
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் (Media - News Company) Email : News.kakithapoo@gmail.com www.kakithapoo.com Cell : +91 9962944433 | 044 42146943