திருவள்ளூர் மாவட்டம் ரெட்டம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெண்ணிஅம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது யாக கலச பூஜைகளுடன் புண்ணிய நதிகளின் நீர் கொண்டு கோபுர கலசங்களுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது பின்னர் பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது இதில் பொன்னேரி கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், ஒன்றிய கவுன்சிலர் மெய்யழகன், முன்னாள் ஊராட்சி தலைவர் முரளி, ஊராட்சிமன்ற தலைவர் எல்லம்மாள் சங்கர், செந்தில், ஆத்துப்பாக்கம் ஊராட்சி செயலர் குருமூர்த்தி, ஜெயகோபி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோபி, அதிமுக மணி, ஆகியோர் கலந்து கொண்டனர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கி கோவில் நிர்வாகத்தினர் கிராம மக்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment