Skip to main content

Posts

Showing posts from November, 2022

மாதவரத்தில் இஸ்லாமிய பள்ளியில் குழந்தைகள் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்த இருவர் போலீசாரால் கைது..!

 சென்னையடுத்த மாதவரம் பொன்னியம்மன் மேடு அய்யர் தோட்டம் பகுதியில் அரபி மதரஸா இஸ்லாமிய பள்ளி இயங்கி வருகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த நசீர் என்பவர் கொடுங்கையூரை சேர்ந்த அக்தர் (வயது 26) என்பவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன் வாடகைக்கு விட்டுள்ளார். இந்த இஸ்லாமிய பள்ளியில் பீகாரை சேர்ந்த அப்துல்லா (வயது 20) என்பவர் பிள்ளைகளுக்கு பாடம் நடத்திவரும் ஆசிரியராக இருந்து வருகிறார். இப்பள்ளியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுமார் 10 வயது முதல் 12 வயதுள்ள ஆண் சிறுவர்கள் 12 பேர் இஸ்லாமிய பாடம் கற்க இங்கேயே தங்கி பாடங்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் சைல்டு ஹெல்த் கேர் பள்ளியில் சிறுவர்களின் அபயக்குரல் கேட்பதாக ரகசிய தகவல் வந்ததின் பேரில், கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் ராஜாராமுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் மற்றும் போலீசாருடன் அங்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டபோது , அங்கு சிறுவர்கள் பயத்தில் இருந்தது தெரிந்தது . பின் அவர்களை பார்த்தபோது முகம், கை, கால், முதுகு பின்மறைவிட பகுதிகளில் அடித்து தழ...

புழல் சிறை கைதி மரணம்..!

   சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்தவர் சீனிவாசன் என்ற மொட்டை சிவா  ( வயது 36). இவர் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீசார் இந்த மாதம் புழல் சிறையில் அடைத்தனர். இவருக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனே அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து புழல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செய்தியாளர்: அகமது அலி 

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் மற்றும் செட்டிநாடு பல்நோக்கு மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம்.

                            சென்னை மாநகராட்சி 15 வது மண்டலத்திற்குட்பட்ட காரம்பாக்த்திலுள்ள கங்கை அம்மன் கோயில் வளாகத்தில் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் மற்றும் செட்டிநாடு பல்நோக்கு மருத்துவமனையும் இணைந்து இலவச முகாமை நடத்தினார். இந்நிகழ்வில்  முதலாவதாக மாநகராட்சி 198 வது மாமன்ற உறுப்பினரும்  பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநிலத் துணைத் தலைவர் லியோ என்.சுந்தரம், தமிழ்நாடு செய்தி துறையினர் யூனியன் மாநிலத் தலைவர் ஸ்ரீதர்,  மாநில பொதுச் செயலாளர் கொளத்தூர் நண்பன் சத்யா, மாநில துணை தலைவர் மாலை முரசு அகமதுஅலி, மாநில அமைப்பு செயலாளர் அரசுமலர் பாலமுருகன், மாநில செய்தி தொடர்பாளர் அரசியல் அரிச்சுவடி லோகேஷ், அலுவலக செயலாளர் கொளத்தூர் நண்பன் சக்தி மாரியப்பன், காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் மதன் கோபால், முன்னாள் கவுன்சிலர் புருஷோத்தமன், வணிகர் சங்க முன்னாள் செயலாளர் லயன்ஸ் அன்பழகன், மகி என்கிற பழனி, கார்த்திக், அன்பரசு, மோகன், அவர்களுடன்  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.   ...

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் பத்திரிகை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்...

 தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில்  பத்திரிகை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்  (26.11.2022) அன்று வடபழனியில் நடைபெற்றது. பத்திரிகை நலன் மற்றும் பாதுகாப்பு , நாளிதழ்கள், பருவ இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகத்தின் இன்றைய நிலை, பத்திரிகை ஆசிரியர்களின் ஒற்றுமையின் அவசியம், அரசு அடையாள அட்டையின்  புதிய விதிகள், பத்திரிகையாளர் நலவாரியம் உள்ளிட்ட பத்திரிகைத்துறை சார்ந்த பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் செய்யப்பட்டது. பத்திரிகை ஆசிரியர்கள் வழங்கிய ஆலோசனைகள்  மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் கோரிக்கைகளை வகுத்து மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர், உயர்திரு செய்தித்துறை இயக்குநர் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆக்கபூர்வமான இந்த  ஆலோசனை கூட்டத்தில் 100-க்கு மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர். ஆலோசனை கூட்டத்தின் கோரிக்கைகள் விரைவில் தமிழக அரசிடம் வழங்கப்படும். 

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த இரண்டு பேர் கைது..!

 திண்டுக்கல் மாவட்டத்தில் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் குறைவாகவும் லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதிகமாகவும் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் தாண்டிகுடி பாச்சலூர்,ஆடலூர், பன்றி மலை உள்ளன. இதுபோல சிறுமலை, அய்யலூர் மலை, கரந்த மலை என மலைகளால் சூழப்பட்டுள்ளது.  இந்த பகுதியில் இருக்கும் மக்கள் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். ஆனால் சமீப காலமாக பலரும் லைசன்ஸ் இல்லாமல் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு வன  விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். தங்களுக்குள் மோதல் ஏற்படும்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது ஆகிய சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளது. இதை தடுக்க போலீசார் தொடர் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் அடுத்த சித்தரேவு பகுதியில் போலீசார் வாகன சோதனையில், நாட்டு துப்பாக்கியுடன் டூவீலரில் சுற்றி திரிந்த ராமு,23, சோலை ராஜ்,21, இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர்: அரியநாயகம் 

சோழவரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான திருவிழா.

 திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான திருவிழா நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுகன்யா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை ஆசிரியர்கள் இளங்கோவன், ரமேஷ் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொண்டாடும் விதமாக குழந்தைகளுக்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பரதநாட்டியம், சிலம்பாட்டம் கிராமிய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மாறுவேட போட்டியில் காந்தி, நேரு, நேதாஜி, பாரதியார் உள்ளிட்ட தேசத்தலைவர்கள் மற்றும் கிருஷ்ணர், ராதா, ஔவையார் வேடமணிந்து வந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் பார்வையாளர்களை அசத்தினர். இதையடுத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர்: சந்திரசேகர் 

புழல் கதிர்வேடு பகுதியில் பூங்கா அமைக்க பூமி பூஜை .

 சென்னை மாநகராட்சி மண்டலம் 3 க்குட்பட்ட புழல் அடுத்த கதிர்வேடு 31 வது வார்டு குடியிருப்பு பகுதியில் உள்ள சீனிவாசா நகர், ஜெய்மாருதி நகர், ரங்கா அவென்யூ ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், மாலை நேரங்களில் குழந்தைகளுடன் விளையாடவும் பொழுதுபோக்கு பூங்கா அமைத்து தர வேண்டி மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபுவிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி ,அந்தந்த  வார்டுகளில் நான்கு  இடங்களை தேர்வு செய்து அதில் பொழுதுபோக்கு பூங்கா அமைந்திட  டுபிட்கோ நிறுவனத்தின் மூலமாக  சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  பூங்கா உருவாக்கும் திட்டத்தை  செயல்படுத்தும் விதமாக பூமி பூஜைகள் நடைபெற்றது.  இந்நிகழ்வில்  மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு காங்கிரஸ் கட்சியின் சர்க்கிள் தலைவர் சந்திரசேகரன் , சமூக ஆர்வலர் பாபு  மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் நம்மிடம் பேசிய மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு, இதனை தேர்தல் வாக்குறுதியாக பொதுமக்களிடம் அறிவித்திருந்தேன், அதனை தற்போது நிறைவேற்றியுள்ளேன் எனவும், கூடிய விரைவில் கட்டுமான பணிகள் துவங...

தாழம்பூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட வேங்கடமங்கலம் ஊராட்சியில் புறகாவல் நிலைய திறப்பு விழா...

செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேங்கடமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் பாதுகாப்புக் கருதி வேங்கடமங்கலம் - அகரம் தென் சந்திப்பு சாலையில்,  புற காவல் நிலையமும் அதனுடன் இணைந்த கண்காணிப்பு அறையையும் அகரம் தென் சந்திப்பு சாலை,  பொன்மார் சாலை,  வெங்கட பெருமாள் கோயில், வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 100 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக,  இன்று தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் திறந்து வைத்தார்.  மேலும் சிசிடிவி கேமராக்கள் இல்லாத முக்கிய இடங்களை கணக்கிட்டு உடனடியாக அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களை  விரைவில் நிறுவ வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் ஆணையர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கரணை துணை ஆணையர், கேளம்பாக்கம் சரக காவல் உதவி ஆணையர்,  தாழம்பூர் காவல் ஆய்வாளர் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள்,  ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணிரவி,  (பிஜேபி ஏபிகே.ரகு எம்ஏ .பி.எ...

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் லாட்டரி விற்பனை..

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக SP.பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் பட்டிவீரன்பட்டி போலீசார் அண்ணாநகர் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பிரசாத்(23) என்பவரை கைது செய்துள்ளனர்.  அவரிடமிருந்து 5,405 லாட்டரி சீட்டுகள், ரூ.18,220 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுத்து பறிமுதல் செய்த போதும் விற்பனை நின்ற பாடு இல்லை. இதனால் விற்பவர்கள் குறித்து பட்டியல் போலீசாரிடம் இருந்த போதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.  செய்தியாளர்: அரியநாயகம்

அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோவிலில் நடந்த பிரித்யங்கரா யாகம்..

 திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு பிரித்யங்கரா யாகம் நடைபெற்றது. இந்த யாகம் அரக்கர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெறுவதற்காக பராசக்தியால் நடத்தப்படும் யாகம் ஆகும். இந்த யாகத்தில் அனைத்து விதமான பொருட்களும் சுவாகா கொடுப்பது வழக்கமாகும். இந்த யாகத்தை முன்னிட்டு காலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. பின்பு யாகம் சிறப்பாக  நடத்தப்பட்டது. அம்மனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள், அபிஷேகம் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரசாதம் பெற்றனர். செய்தியாளர்: அரியநாயகம்

தென்காசி MLA பழனி நாடாரின் வாகனம் மோதி நான்கு வயது சிறுவன் பலி..!

தென்காசி மாவட்டம் கீழ சுரண்டை பகுதியில் தென்காசி சட்ட மன்ற உறுப்பினர் S.பழனி நாடார் அவர்களுக்கு சொந்தமான SPN சேம்பர், குவாரிக்கு அதிக அளவில் மணல் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மேலும் மணல் டிராக்டர்கள் அதிக வேகத்தில் மக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக கொண்டு செல்லப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு. அவ்வாறு கீழ சுரண்டை பிள்ளையார் கோவில் தெருவில் அதிவேகமாகச் சென்ற டிராக்டர் வாகனம் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த கீழ சுரண்டை தங்கராஜ் அவர்களின் பேரனும் ராஜதுரை அவர்களின் மகனுமாகிய நான்கு வயது சிறுவன் ராஜமுகன் என்பவரின் மீது டிராக்டரின் முன்பக்க டயர் மற்றும் இஞ்சின் டயர் ஏறி இறங்கியதில் சிறுவன் ராஜமுகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து சிறுவனின் உறவினர்கள் சுரண்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர். செய்தியாளர்: சந்திரன் 

அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் 2022−23ஆண்டிற்கான கலைத்திருவிழா..

 செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் முதல்நிலை ஊராட்சியில் பாரதியார் தெருவில் இயங்கிவரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இன்று காலை சுமார் 10.00மணியளவில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2022−2023 ஆண்டிற்கான மாணவர்களின் கலைத்திருவிழா துவக்க நிகழ்ச்சி, தலைமையாசிரியர் மகாலட்சுமி தலைமையில் நடைப்பெற்றது.  இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் டி.மகாலட்சுமி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் வார்டு உறுப்பினருமான கபீர்கான் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்கள். சிறப்பு அழைப்பாளாராக படூர் ஊராட்சி மன்றத்தலைவரும் , படூர் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிர்வாகியுமான கே.ஏ.எஸ்.தாராசுதாகர் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களுக்கு இடையேயான 6வகையான பிரிவில் 36வகையான போட்டிகளை துவங்கிவைத்து பார்வையிட்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.  இந்நிகழ்வில் பள்ளி கல்விமேலாண்மை குழு உறுப்பினரும் ,08வது வார்டு உறுப்பினருமான ஜெயந்திதசரதன் , 04வதுவார்டு உறுப்பினர் ரேகாசேகர் மற்றும் மேலாண்மைகுழு உறுப்பினர்கள்,  பெற்றோர்ஆசிரியர் கழக உறுப்பினர்கள் உடன...

கொடைக்கானலில் 80கிலோ பிரம்மாண்ட கேக் தயாரிப்பு..

 உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் 45 நாட்களுக்கு முன்னதாகவே உலர்பழங்கள் மற்றும் மதுபான வகைகளை கொண்டு கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரி அருகில் அமைந்துள்ள தனியார் விடுதியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, கிறிஸ்துமஸ் பழம், அத்திப்பழம் உள்ளிட்ட 15 வகையான பழங்கள் மற்றும் 5 வகையான உயர்ரக மதுபானங்களில் இருந்து 8 லிட்டர் கொண்டு கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது.  இந்த கலவை 30 நாட்களுக்கு பதப்படுத்தி வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாக மேலும் சில மாவு சேர்த்து 80 கிலோ பிளம் கேக் தயாரிக்கப்பட உள்ளதாக சமையல் கலைஞர்கள் தெரிவித்தனர். இந்த கேக்குகள் விடுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேக் தயாரிப்பில் 13 சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர்.  மேலும் விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் இணைந்து கிறிஸ்துமசை வரவேற்கும் விதமாக பாடல்கள் பாடி உற்சாகம் அடை...

புழலில் 82.61 கோடியில் அமைக்கப்பட்ட குடிநீர் தேக்க தொட்டியை முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் துறையின் சார்பில்  82.61 கோடி மதிப்பீட்டில் புழல் சூரப்பட்டு புத்தகரம் மற்றும் கதிர்வேடு பகுதிகளுக்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு குடிநீர் வழங்கிட குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அதனை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். புழல் அம்பத்தூர் சாலையில் அமைந்துள்ள இந்த குடிநீர் தேக்க தொட்டியை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம்  பகுதி செயலாளர் துக்காராம் மண்டல குழு தலைவர் நந்தகோபால் வார்டு மாமன்ற உறுப்பினர்கள்  குட்டிமோகன்,சங்கீதா பாபு, புழல் சேட்டு ஆகியோர்கள் குத்துவிளக்கேற்றி தண்ணீர் இறைக்கும் மோட்டாரின்  இயக்கத்தை துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளர்கள் செங்குன்றம் ராஜேந்திரன், விப்ரநாராயனன் மற்றும் குடிநீர் வாரிய திட்ட செயற் பொறியாளர்  கலைச்செல்வன் பொறியாளர் பாக்கியலட்சுமி, கற்பகம், பர்வேஸ் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்: அகமது அலி 

வேடசந்தூரில் காதல் திருமணம் செய்த கோவை வாலிபர் தற்கொலை..!

 கோவை மாவட்டம், பொருளூர் பகுதியை சேர்ந்தவர் தினகரன் மகன் சரவணன் (வயது37). இவர் ஜெயப்பிரியா என்ற பெண்ணை காதலித்தார். இதற்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நண்பர் உதவியுடன் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நேருஜி நகரில் வசித்து வந்தார். இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார்.  அரிசி வியாபாரம் செய்து வந்த சரவணனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால் மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து அறிந்ததும் வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர்: அரியநாயகம் 

பள்ளி கட்டணம் கட்டாததால் மாணவனை வெளியே நிற்க வைத்த கொடுமை - கல்வித்துறை விசாரணை

 கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி சரண்யா. இவர்களது மகன் ரோகன். கீழ்பூமி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இதே பள்ளியில் மாணவனின் தாய் சரண்யா 4 ஆண்டுகளாக அலுவலக கணக்காளராக பணிபுரிந்து வந்தார். ஆனால் இவருக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாததால் பள்ளியை விட்டு நின்றுவிட்டார்.  இதனை தொடர்ந்து இவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள பாக்கியில் இருந்து தனது மகனுக்கு தேவையான கல்வி கட்டணத்தை பிடித்தம் செய்து கொள்ளுமாறு கூறியிருந்தார். அதன்படி பள்ளி நிர்வாகமும் ரோகன் செலுத்த வேண்டிய கல்வி கட்டணத்தை எடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவனை காவலாளி வாசலிலேயே நிறுத்திவிட்டார். இதுகுறித்து கேட்டபோது கல்வி கட்டணம் செலுத்தாதால் உன்னை உள்ளே விடக்கூடாது என்று அறிவுரை வந்துள்ளது என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தாய் சரண்யா தனது மகனை உள்ளே அனுப்பாததை கண்டித்து பள்ளி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.  இதுகுறித்து கொடைக்கானல் வர...

பெண்களிடம் நகை பறிப்பு மற்றும் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் ஈடுபட்டவர் போலீசாரால் கைது ..!

 கொளத்தூர், ராஜமங்கலம் மற்றும் மாதவரம் பகுதிகளில் செல்போன் , இருசக்கர வாகனம் திருட்டு, பெண்களிடம் நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் நடப்பதாக அடிக்கடி காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதுகுறித்து கொளத்தூர் துணை ஆணையாளர் ராஜாராம் சம்பந்தப்பட்ட குற்றவாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி , கொளத்தூர் உதவி கமிஷனர் சிவக்குமார் ஆலோசனையில் ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் உள்ள  சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் கொளத்தூர் ரெட்டேரி  200 அடி சாலையில்  தனியார் பள்ளியின் அருகில் சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் , அவர் கொளத்தூர் சிவசக்தி நகரை சேர்ந்த அப்பு என்ற இளவழகன்  (வயது 33) என்பவர் என தெரிந்தது. பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இவர் பகல் நேரங்களில் ஆட்டோ ஓட்டி பிழைப்பதாகவும் இரவில் தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு மற்றும் இருசக்கர வாகனத்தை திருடியும்  ...

பிளாஸ்டிக் பைகள் தயாரித்த கம்பெனிக்கு 'சீல்' ..!

திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் தயாரிக்கப்படுவதாக சுகாதாரத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தொழிற்சாலைக்கு திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது ரகசியமாக பாலித்தீன் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு தயாரித்து விற்பனைக்காக வைத்திருந்த 450 கிலோ பாலித்தீன் பைகள், மூலபொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பாலித்தீன் பை தொழிற்சாலைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். செய்தியாளர்: அரியநாயகம் 

அரசு வேலை கேட்டு கதறி அழுத பெண்ணால் பரபரப்பு..!

 செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டையில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதற்கு தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ராஜசேகரன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார், சித்தையன்கோட்டை பேரூராட்சி தலைவர் போதுமணி முரளி, தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) எழுமலையான், ஆத்தூர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) தனி தாசில்தார் நிர்மலாகிரேஸ், மண்டல துணை வட்டாட்சியர் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில் வீட்டு மனைபட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 401 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் செம்பட்டி அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டி சேர்ந்த கணவரை இழந்த சண்முகப்பிரியா (வயது 27) என்பவர் மனு கொடுத்தார். அதில் ஆதரவற்ற விதவை சான்று பெற்ற தான் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்தும் அரசு வேலை வழங்கவில்லை. 2 மகள்களுடன் கஷ்டப்படுகிற தனக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மனு கொடுத்தபோது அங்கிருந்த அதிகாரிகளிடம் சண்முகப்பிரியா கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேர...

உயிர்ப்பலி வாங்க துடிக்கும் சேதமடைந்த நிழற்குடை..!

  தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு வடபுறமாக கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் 1996 - 97 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மிகவும் சேவைமடைந்து காணப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்த செல்லக்கூடிய பேருந்து நிலையம் ஆகும். ஆகையினால் உடனடியாக சேதமடைந்த கட்டிடத்தை அப்புறப்படுத்தி விட்டு புதிய பேருந்து நிழற்குடை அமைத்து தரும்படி பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.. ? செய்தியாளர்: சந்திரன்  

மீஞ்சூர் அருகே சாலையில் திரியும் மாடுளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்..!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மீஞ்சூர் அருகே உள்ள வாயலூர் பகுதியில் சாலையில் மாடுகள் சுற்றி திரிவதாகவும், இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு மாடுகளால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதாக பொன்னேரி சார் ஆட்சியருக்கு புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் நேற்று இரவு சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் செல்வகுமார் வாயலூரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சாலைகளில் திரிந்து கொண்டிருந்த பத்து மாடுகளை வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் பிடித்து வாயலூரில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை பட்டியில் அடைத்தனர். மேலும் சம்மந்தப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் உறுதிமொழி அளித்து கால்நடை பாதுகாப்பிற்கான அபராத தொகை இரண்டாயிரம் ரூபாய் செலுத்திய பின்னர்  கால்நடை பட்டியில் உள்ள மாடுகளை அவர்களிடம் ஒப்படைக்குமாறு சார் ஆட்சியர் அறிவுறுத்தினார். செய்தியாளர்: சந்திரசேகர் 

குடிபோதையில் அரசு பேருந்தை மறித்து டிரைவரிடம் சண்டை போட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்..!

 திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் இருந்து காமலாபுரம், சக்கையநாயக்கனூர், அழகம்பட்டி, சின்னாளபட்டி வழியாக திண்டுக்கல்லுக்கு அரசு டவுன்பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை அந்த பஸ் கொடைரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. டிரைவர் ஆரோக்கியதாஸ்(53) பஸ்சை ஓட்டிவந்தார். அழகம்பட்டி, சக்கையநாயக்கனூர் இடையே திடீரென அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(23) என்பவர் குடிபோதையில் பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்டார். இதனை ஆரோக்கியதாஸ் தட்டிகேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து பஸ்சுக்குள் புகுந்த பாலசுப்பிரமணியன் பயணிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஒரு கட்டத்தில் பாலசுப்பிரமணியன் டிரைவர் ஆரோக்கியதாசுடன் சாலையில் கட்டிபுரண்டு சண்டைபோட்டார். மேலும் அவரது சட்டையையும் கிழித்துள்ளார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் பாலசுப்பிரமணியன் ரகளை செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி ...

பள்ளி முன்பு மழைநீர் குளம்போல தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதி..!

 தாராபுரம் அலங்கியம் ரோடு அரோபிந்தோ வித்யாலயா பள்ளி முன்பு உள்ள மாநில நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். அலங்கியம் சாலைக்கு கிழக்கு புறமாக உள்ள நில உரிமையாளர்கள் மழைக்காலங்களில் வழக்கமாக மழைநீர் செல்லும் பாதையை மண்திட்டுகள் அமைத்து தடுத்து விட்டனர். இதனால் மழைநீர் வாய்க்காலை சென்றடைய வழி இல்லாமல் பெரிய குளம்போல தேங்கியுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக அரோபிந்தோ பள்ளி நிர்வாகம் சார்பில் நெடுஞ்சாலத்துறை மற்றும்  வருவாய்த்துறையிடம் பல மனுக்கள் அளித்தும், மழைநீர் தேங்காதவாறு வடிகால் வசதி ஏற்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் பல வாகனங்கள் பழுதாகி நிற்கின்றன. வாகன ஓட்டிகள் தண்ணீரில் விழுந்து செல்கின்றனர். பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் நலன் கருதி மழைநீர் தேங்காதவாறு வடிகால் வசதியை நெடுஞ்சாலைத் துறையும், வருவாய்துறையும் விரைந்து எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. செய்தியாளர்: அருண்குமார் 

கொடைக்கானலில் பலத்த காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்தன.. நகராட்சி மெத்தனம்..

 திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல சூறாவளி காற்றுடன் சில இடங்களில்  மழை பெய்ததால் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. மின்வயர்கள் துண்டிக்கப்பட்ட  நிலையில் இருந்துள்ளன. இவற்றை சரி செய்யும் பணியில் மின்வாரியத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.   பொதுமக்கள் கூறியதாவது கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதுகுறித்து பொதுமக்களே மின்வாரியத்தில் புகார் தெரிவித்து வருகிறோம். கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் தேங்கி நிற்கும் மழை நீர்களையும், மின்கம்பங்களையும் சரி செய்யும் பணியை உடனடியாக மின்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். செய்தியாளர்: அரியநாயகம் 

திருப்போரூர் அருகே ஶ்ரீஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் நாளை மஹாகும்பாபிஷேகம்..

 செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெண்பேடு ஊராட்சியில் காயார் செல்லும் பிரதான சாலையின் அருகே ஶ்ரீஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. வாராவாரம் சனிக்கிழமைகளில் இங்கு அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்கள். இக்கோவிலில் 32அடியிலான விஸ்ரூப ஆஞ்சநேயர் உள்ளது தனிச்சிறப்பாகும்.  இந்நிலையில் இக்கோவில் பிரகாரத்தில் சோளிங்கர் திவ்யதேசத்தில் உள்ள யோகநரசிம்மர், அமிர்தவல்லிதாயார் ,யோக ஆஞ்சநேயர் மற்றும் சீதா ,ரமா ,லட்சுமணன் ஆஞ்சநேநேயருக்கு தனித்தனி ஆலயங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தநிலையில் அனைத்து பணிகளிலும் நிறைவடைந்ததை தொடர்ந்து நாளை 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை  காலை 08.30மணி முதல் 10.30மணிக்குள்ளாக அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடத்தப்பட உள்ளது.  நேற்று  வெள்ளிக்கிழமை மாலை 05.00மணியளவில் யாகசாலை மண்டபத்தில் முதல்கால யாகபூஜையுடன் கும்பாபிஷேகத்திற்கான நிகழ்ச்சி துவங்குகிறது. தற்பொழுது ஶ்ரீஜெய்வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான இறுதிகட்டப்பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. ஆலயத்தொடர்புக்கு: 9940326724 , 93801...

பிரதமர் காரில் பயணித்த அண்ணாமலை - தொண்டர்கள் உற்சாகம்..!

 திண்டுக்கல் அடுத்த காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாத்துரை ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து விழா நடைபெறும் பல்நோக்கு அரங்கிற்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் மீண்டும் ஹெலிகாப்டரில் பயணிக்க முயன்றபோது மோசமான வானிலை காரணமாக சின்னாளபட்டியில் இருந்து கார் மூலம் மதுரைக்கு செல்ல முயன்றார்.  அப்போது பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு தொண்டர்களுடன் நின்ற பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையை அழைத்தார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் பிரதமர் மோடியின் அருகில் வந்தார். பின்னர் அவரை தனது காரில் அருகில் அமர வைத்து மதுரை வரை அழைத்துச் சென்றார். அப்போது தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அண்ணாமலையிடம் பிரதமர் மோடி கேட்டறிந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். பிரதமர் மோடியுடன் காரில் இதுவரை தமிழக பா.ஜ.க. தலைவர்கள் யாரும் பயணிக்காத நிலையில் அண்ணாமலை அவருடன் சென்றது கட்சியினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. செய்தியாளர்: அரியநாயகம் 

எடப்பாடி அருகே செந்நாய்கள் கடித்து குதறியதில் 15 ஆடுகள் பலி ..!

 சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் சித்தூர் ஊராட்சிக்குட்பட்ட ரெட்டிபட்டி எல்லைமுனியப்பன் கோவில் அருகே வசிக்கும் விவசாயி தங்கராஜ் என்பவர் ஆடுகள் வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே நேற்று மாலை வழக்கம்போல  20 ற்கும் மேற்பட்ட ஆடுகளை ஆட்டுப்பட்டியலில் அடைத்து வைத்துள்ளார். பின்னர் இன்று அதிகாலையில் ஆடுகள் கூச்சலிட்டதை தொடர்ந்து தங்கராஜு ஆட்டுப்பட்டிக்கு சென்று பார்த்த போது 10ற்கும் மேற்பட்ட செந்நாய்கள் ஆடுகளை கடித்து குதறிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு செந்நாய்களை விரட்டியடித்தனர்.  பின்னர் ஆட்டுப்பட்டியலில் இருந்த ஆடுகளை பார்த்தபோது 10 ற்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த நிலையிலும் மற்ற ஆடுகள்  கவலைக்கிடமாகவும் இருந்ததைக்கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கால்நடை மருத்துவர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவலைக்கிடமாகவுள்ள ஆடுகளுக்கு சிகிச்சையளித்து, இச்சம்பவம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதே போல மேல் சித்தூர் பகுதியி...

திண்டுக்கல் மாநகராட்சியில் குண்டும் குழியுமான ரோடுகள்..வாகன ஓட்டிகள் அவதி..!

 திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. நகராட்சி ஆக இருந்த திண்டுக்கல் 2014ம் ஆண்டு மாநகராட்சியாக அந்தஸ்து பெற்றது. மாநகராட்சியாக அந்தஸ்து பெற்றதே தவிர எந்த அடிப்படை வசதிகளும் மாநகராட்சிக்கு செய்யப்படவில்லை. முக்கியமான ரோடு வசதி மிக மோசமாக உள்ளது. பல ரோடுகள் குண்டும் குழியுமாக இருப்பதால் தொடர்ந்து விபத்துக்கள் நடக்கிறது. பல வார்டுகளில் ரோடுகள் படிக்கட்டுகள் போல் உள்ளது. தொடர்ந்து விபத்துக்கள் நடக்கிறது. பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் பெண்கள் வாகனங்களை ஓட்டும் போது தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.  பள்ளங்களில் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. மலேரியா ,டெங்கு உட்பட பல நோய்களும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் திண்டுக்கல் மாநகராட்சி ரோடுகள் படுமோசமாக உள்ளன. மாநகராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி ரோடுகளை பேட்ஜ் ஒர்க் செய்ய வேண்டும். தற்காலிகமாக பேட்ஜ் வொர்க் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியம் கேட்டபோது: திண்டுக்கல் மாநகராட்சிகள் மழையால் சேதம் அ...

சோழவரம் ஒன்றியத்தில் மழை பாதித்த பகுதிகளில் அமைச்சர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு..!

வடகிழக்கு பருவமழை காரணமாக, திருவள்ளூர்  மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோழவரம், ஆங்காடு, செம்புலி வரம், பாடியநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளையும், மழை நீரை வெளியேற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாவட்ட  கண்காணிப்பு அலுவலர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் வி.இராஜாராமன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்னிலையில் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  உடன் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப், சார் ஆட்சியர் (பொன்னேரி), ஐஸ்வர்யா ராமநாதன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேல், நீர்வளத்துறை உதவி ...

கம்பீரமாக காட்சியளிக்கும் காசி விசுவநாதர் திருக்கோவில்...

  தென்காசி மாவட்டம், காசி விசுவநாதர் திருக்கோவில் மாமன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது. மன்னன் பலமுறை வாராணசிக்குச்  செல்ல முயன்றும் முடியவில்லையாம். இதனால், மனவருத்ததுடன் இருந்த மன்னனிடம், தேவவாக்கு மன்னா நீ இருக்குமிடத்திலே எனக்கு ஒரு கோயில் கட்டு, அங்கு நான் அருள் பாலிக்கின்றேன்' என்றதாம். அதைக்  கேட்ட மன்னன் 15-11-1446-ம் ஆண்டு இந்த கோயிலைக் கட்டத் தொடங்கி 10-6-1467-ல் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்யப்பட்டது. தென்காசி கோவில் கட்டி இன்றுடன் 572 வருடம் ஆகிவிட்டது. செய்தியாளர்: சந்திரன் 

பழனி மலைக்கோவில் கருவறைக்கு சென்று நவபாஷாண சிலை ஆய்வு.. இந்து அமைப்பினர் அதிர்ச்சி..!

 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுடுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள்‌ நடைபெற்று வருகிறது. வருகிற ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பழனி கோவில் மூலவர் சிலையான நவபாஷாண சிலையை ஆய்வு செய்ய இந்து சமய அறிநிலையத்துறை சார்பில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பொங்கிலியப்பன் தலைமையாலான சிலை பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது.  இந்தக்குழுவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கோவை சிரவை ஆதினம்,பேருர் மருதாச்சல அடிகளார், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், கோவில் இணைஆணையர் நடராஜன், பழனி நகர்மன்றத்தலைவர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 15பேர் கொண்ட  குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்நிலையில் இன்று பழனி கோவில் கருவறைக்குள் சென்று  நவபாஷாண மூலவர் சிலையை ஸ்தபதி தட்சிணாமூர்த்தி தலைமையில் கருவறை  சிலையை ஆய்வு செய்தனர். முன்னதாக பிம்பசுத்தி பூஜை செய்து கருவறைக்குள் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து கோவில் நிர்...

இயற்கையை கற்பிக்கும் தலைமை ஆசிரியர்... குவியும் பாராட்டுகள்...

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி அடுத்த ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பரமசிவன் என்பவர் கடந்த பத்தாண்டுகளாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி வளாகத்தில் மருத்துவ குணம் கொண்ட நெல்லி, இலுப்பை, மருதமரம், புளியமரம் உள்ளிட்ட மரங்களை வளர்த்து வருகிறார். மேலும் அபூர்வ வகையான வாகை மரம், வில்வமரம், புங்கைமரம் உட்பட சுமார் 200 வகை மரங்களையும் கடந்த பத்தாண்டுகளாக இவர் வளர்த்து வருகிறார். ஒருகட்டத்தில் தான் சார்ந்த சமூகத்திற்கும் கிராம மக்களுக்கும் ஏதாவது உபயோகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதை தொடர்ந்து பரமசிவன் கடந்த நான்காண்டுகளாக பள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்.  பூச்சிக்கொல்லி மருந்து எதையும் கலக்காமல் இயற்கை முறை விவசாயத்தில் கத்தரி, வெண்டை, பாகற்காய், சிகப்பு முள்ளங்கி, பீட்ரூட், கொத்தவரங்காய், பீர்க்கங்காய், அவரைக்காய் உள்ளிட்ட சத்தான காய்கறிகளை பயிரிட்டு வருகிறார். மேலும் சிகப்பு தண்டுக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை உள்ளிட்ட சத்துமிகுந்த கீரை வகைகளும் இவரது தோட...

திண்டுக்கல்லில் சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலி...உறவினர்கள் சாலை மறியல்..!

 திண்டுக்கல் நந்திகோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஆறுமுகம். இவரது மூத்த மகன் கதிரவன் (17). இவர் சின்னாளபட்டி பகுதியில் உள்ள ஆதி திராவிட விடுதியில் தங்கி, அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கதிரவன், தன்னுடன் விடுதியில் தங்கியுள்ள தினேஷ்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். அவர்களுடன் வெள்ளோடு பகுதியை சேர்ந்த ஸ்டெல்லா மேரி என்பவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ஏ. வெள்ளோடு பிரிவு அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. இதில் கதிரவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தினேஷ்குமார் மதுரை அரசு மருத்துவமனையிலும், ஸ்டெல்லா மேரி திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் டவுன் போலீசார் விபத்தில் பலியான கதிரவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப...

திண்டுக்கல் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்த மாணவர்கள்..

 வடமதுரை மற்றும் அய்யலூர் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. அரசு பஸ்சை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மற்றும் அய்யலூரை சுற்றி ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு காலை நேரத்தில் ஒரு அரசு பஸ் மட்டுமே திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.  இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு பள்ளியில் ஆப்சென்ட் போடப்பட்டது. இதுதொடர்பாக பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே அரசு பஸ் இயக்கப்பட்டதால் கர்ப்பிணி பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் போக்குவரத்து வசதியின்றி தவித்தனர்.  இதனால் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்லும் நிலை ஏற்பட்டது. இன்று காலை மம்...

காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவுக்கு முதல்வர் வருகை ...

திண்டுக்கல் அருகில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் வருகை தருகிறார். முன்னதாக 11-ந்தேதி காலையில் கரூரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.  அதனை தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் திண்டுக்கல் வருகை தருகிறார். முதலமைச்சருக்கு திண்டுக்கல் மேற்கு, கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்ட எல்லையான வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியில் அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மாநகர, நகர பகுதி பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். திண்டுக்கல் வருகை தரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் செந்தில்குமார் ஆகியோரும் தெரிவித்துள்ளனர். செய்தியாளர்...