Skip to main content

முதியவரை வெட்டிய போதை கும்பல்..! தடுத்த காவலர்களுக்கும் அரிவாள் வெட்டு.. திருச்சியில் நடந்த கொடூரம்.!

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் 5 ஆம் பிரகாரத்தைச் சோ்ந்தவா் காஜாமைதீன் (63) சமையல் தொழிலாளி. இவா், சனிக்கிழமை இரவு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதிக்கு வந்துள்ளாா். 

அவரை நோட்டமிட்ட மதுபோதையிலிருந்த மா்ம நபா்கள் 4 போ், காஜா மைதீனிடம் இருந்த பையையும், ரூ.1,400 ரொக்கத்தையும் பறித்துச் சென்றனா். இதில் ஒருவரைப் பிடித்த காஜாமைதீன், சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைக்க இழுத்துச் சென்றாா். அப்போது அவரை அந்த மா்ம நபா் அரிவாளால் வெட்டியுள்ளாா். இதைக்கண்ட புறக்காவல் நிலையப் போலீஸாா் அந்த இளைஞரை மடக்கிப் பிடிக்க முயன்றனா். இதையடுத்து, அவா் கையில் வைத்திருந்த அரிவாளை சுழற்றி ரகளையில் ஈடுபட்டாா். பின்னா் அவரைப் பொதுமக்கள் உதவியுடன் போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.

இதில், ரகளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதில் இளைஞா் காயமடைந்தாா். அதேபோல இளைஞரைப் பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளா்கள் ராஜா, பிரேம் ஆனந்த் மற்றும் அரிவாளால் வெட்டுப்பட்ட முதியவரும் காயமடைந்தனா். இதில் இளைஞா் மற்றும் வெட்டுப்பட்ட முதியவா் ஆகிய இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். உதவி ஆய்வாளா்கள் முதலுதவி சிகிச்சை பெற்றனா். இதுதொடா்பாக கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்

மேலும், ரகளையில் ஈடுபட்ட நபா் திருச்சி கோட்டை சிந்தாமணி அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்த எம். அபிஷேக் (23) என்பதும், வழிப்பறி செய்து தப்பியவா்கள் கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கே.குரு (20), காந்திமாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த அ.தவ்பிக் (19), அரியமங்கலத்தைச் சோ்ந்த எம். அபுபக்கா் சித்திக் (19) ஆகியோா் என்பதும் தெரியவந்தது. இதில் அபிஷேக் தவிர தப்பிச்சென்ற மற்ற 3 பேரையும் போலீஸாா் அதிரடியாக கைது செய்தனா். அபிஷேக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் கைதுசெய்யப்பட்டு போலீஸாா் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறாா். திரைப்படத்தில் வரும் சம்பவம்போல இந்தச் சம்பவம் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் நடந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி எச்சரிக்கை

திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக காமினி பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக சரித்திர பதிவேட்டில் இருக்கக்கூடிய நபர்கள் தொடர்ந்து தவறான செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

செய்தியாளர் சங்கர ராமன் 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...