Skip to main content

Posts

Showing posts from January, 2023

அரசால் தடை செய்யப்பட்ட 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

பல்லடம் ஜனவரி.29-  பல்லடம் பகுதியில் உள்ள மளிகை கடைகள் பேக்கரிகள் பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர் 20- க்கும் மேற்பட்ட கடைகளில் சுமார் 30 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கடைக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்   செய்தியாளர் இப்ராஹிம்

புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை கொண்டாட செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்.. கள்ளக்காதலியுடன் கைது..!

கொடுங்கையூரை சேர்ந்த கணேஷ் குமார் (வயது 42) என்பவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 24 தேதி பணியை முடித்துவிட்டு செங்குன்றத்திலிருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில்  சென்று கொண்டிருந்தார். புழல் செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலை நாகாத்தம்மன் கோயில் அருகே வந்து கொண்டிருந்த போது சுமார் 11 மணியளவில் ஆணும் பெண்ணும் இவரை வழிமறித்து கத்தியை காட்டி இவரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.  இச்சம்பவம் பற்றி புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட புழல் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயபாஸ்கர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் புழல் கதிர்வேடு மேம்பாலம் அருகே  போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.  பின்னர் அவர்களை போலீசார் துரத்தி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர்கள் புழல் பகுதியை சேர்ந்த அபினேஷ் (வயது 22)  என்பவர்  தனது கள்ளக்காதலி கண்ணகிநகரை சேர்ந்த வாணி (வயது 19) என்பவருடன் புத...

செங்குன்றம் மின்சார வாரிய அலுவலகத்தில் தீ விபத்து..!

செங்குன்றம் காமராஜர் நகர் பைபாஸ் சாலையில் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது பற்றி உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதின் பேரில் செங்குன்றம் இரவு நேர ரோந்து பணியில் இருந்த தீயணைப்பு துறை அதிகாரி பஞ்சவர்ணம்  தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனத்துடன் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.   சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அனைத்தனர். இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் கணிணிகள் மற்றும் முக்கிய தஸ்தாவேஜிகள் எரிந்து நாசமாகியது. இது குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது? என விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த அலுவலகத்தில் மின்சார ஊழியர்கள் அஜாக்கிரதையாக சனிக்கிழமைகளில் இரவு வீக் எண்டு என்ற பெயரில், இரவு பணியில் இருப்போர் போதையில் இருப்பதாகவும், சிகரெட் பிடித்து அதனை அணைக்காமல் விட்டதால், இதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட காரணம் என கூறப்படுகிறது. செய்தியாளர்: அகமது அலி 

மாதவரம் மாடி பேருந்து நிலையத்தில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு.!

மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள ஆந்திர பேருந்து நிலையத்தில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். 2018 ஆம் ஆண்டு மாதவரம் ரவுண்டானா அருகே  8 ஏக்கர் நிலப்பரப்பில் 95 கோடி ரூபாய் செலவில் மாடி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ஆந்திர பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக இங்கிருந்து நெல்லூர், திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத், போன்ற இடங்களுக்கு செல்லும் ஆந்திர பேருந்துகளும், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, தடா, திருப்பதி  செல்லும் தமிழக பேருந்துகளும் இயக்கப்பட்டது. ஆனாலும் இந்த பஸ் நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாடு குறைவாகவே காணப்பட்டது. எனவே இதனை மேலும் விரிவாக்கம் செய்ய இன்று காலை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீரென பஸ் நிலையத்திற்கு வந்து ஆய்வுகள் மேற்கொண்டார். கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவே இந்த பஸ் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் ஆந்திரா மாநிலம் செல்லும் பஸ்கள் மட்டுமல்லாது தமிழக பஸ்களும் மற்றும் மாநகர பேருந்து பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படப் போவதாக தெரிவித்தார்.  மேலும் அங்கு உள்ள வசதிக...

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சி.எஸ்.ஆர் பங்களிப்பின் கீழ் ரூ.4.14 கோடி மதிப்பில் நலத்திட்டம் !

சென்னை முட்டுக்காட்டில், மத்திய அரசின் சமூக நீதித்துறையின் கீழ் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக தேசிய நிறுவனம், மொபிஸ் இந்தியா அறக்கட்டளையுடன் இணைந்து அந்நிறுவனத்தின் நிறுமச் சமுதாய பொறுப்புத் திட்டத்தின் கீழ் கற்றல் குறைபாடு உள்ள 10,000 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்குவதற்கான நல்லதொரு திட்டத்திற்கு முன்வந்தனர்.  முதற்கட்டமாக இத்திட்டம் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. சி.எஸ்.ஆர் பங்களிப்பின் கீழ் ரூ.4.14 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு பள்ளியில்  350- க்கும் மேற்பட்ட கற்றல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.  வழக்கறிஞர் முனைவர் அபிநயா, முனைவர் அமர்நாத், ஸ்டாலின் அருள் ரீகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மொபிஸ் இந்தியா அறக்கட்டளையின் நிர்வாக அலுவலர்கள் பிரேம் சாய், லக்ஷ்மணன், செல்வகுமார் மற்றும் செந்தில்குமார் முன்னிலையில் இந்த நல்மு...

சைக்கிளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீராங்கனையை வாழ்த்திய வேலூர் டிஐஜி!

பெண்களின் பாதுகாப்பு, அதிகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேசிய வீராங்கனையை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தார், வேலூர் சரக காவல் துணைத் தலைவர்.  மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேசிய மலையேற்ற வீராங்கனை ஆஷா மால்வியா, இந்த பெண் வீராங்கனை நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பெண்களின் பாதுகாப்பு, அதிகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிள் பயணத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார். இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார், நாடு முழுவதும் சைக்கிளில் பயணம் செய்யும் தேசியவீராங்கனை ஆஷா மாலியாவை, வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் எம்.எஸ்.முத்துசாமி வேலூர் சரக அலுவலகத்திற்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று, அவருடைய விழிப்புணர்வு பயணம் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார். செய்தியாளர்: வாசுதேவன் 

மாதவரத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது..!

மாதவரத்தில் நடந்து சென்ற ஆசாமியிடம் செல்போன் பறித்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மாதவரம் சின்ன ரவுண்டானா மஞ்சம்பாக்கம் 200 அடி சாலை அருகே நடந்து சென்ற மாதவரம் உடையார் தோட்டத்தை சேர்ந்த பிரவீன் (வயது 30) என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர். இதனை கண்ட அருகிலுள்ள நபர் ஒருவர் உடனே இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.  அதன் பேரில் நேற்று இரவு ரோந்து பணியில் இருந்த மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களின் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு தீவிரமாக மர்மநபர்களை தேடி வந்த நிலையில் மஞ்சம்பாக்கம் அருகே  சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் மாதவரம் உடையார் தோட்டத்தை சேர்ந்த மோனிஷ் (வயது 22 ) புழல் பகுதியை சேர்ந்த அற்புதராஜ் (வயது 20) ஆகியோர் அவரது நண்பரிடம் இருசக்கர வாகனத்தை இரவலாக வாங்கிக் கொண்டு வழியில் நடந்து சென்ற வடநாட்...

குடிபோதையில் மூன்று பேரை கத்தியால் வெட்டி கார்களின் கண்ணாடியை உடைத்து நொறுக்கிய மர்ம நபர்கள்..!

 செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் தெருவில் வசிப்பவர் கார்த்திகேயன் (வயது 24 ) அவரது நண்பர் அதே பகுதியை சார்ந்த விக்கி என்ற அஜித் (வயது 24 ) சார்லஸ் (வயது 26) இவர்கள் மூவரும் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் அங்காள பரமேஸ்வரி கோவில் அருகே உள்ள மைதானத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள்.  அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு கத்தியை காட்டி மிரட்டி அரசியல் பிரமுகரின் ஒருவர் பெயரை சொல்லி அவர் வீடு எங்கே உள்ளது என கேட்டதில் அவர்கள் தெரியாது என்று பதில் கூறினார். இதனால் ஆத்திரமுற்ற அவர்கள் தனது கையில் இருந்த கத்தியால் சற்றும் தாமதிக்காமல் மூன்று பேரையும் தலை, கை, கால், கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்ற போது அருகே நிறுத்தப்பட்டு இருந்த மூன்று கார்களையும் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மூவரும் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு அவர்கள்  பலத்த காயமடைந்து இரத்தம் வழிந்த நிலையில் இருந்த அவர்களை போலீசார்...

புழலில் கால்பந்து விளையாட்டு போட்டி துவக்கம்..

பொங்கல் திருநாளை முன்னிட்டு போலீஸ் பாய்ஸ் கிளப் மாணவ மாணவியர்களுக்கு கால்பந்து விளையாட்டு போட்டியை, கொளத்தூர் காவல்துறை கமிஷனர் ராஜாராம் துவக்கி வைத்தார்.  புழல் காவல் நிலையத்தின் சார்பில் போலீஸ் பாய்ஸ் கிளப் மாணவ மாணவிகள் 10 வயது சிறுவர் முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்கு  அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் புழல் சரக உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் ஆய்வாளர்கள் சண்முகம் , விஜயபாஸ்கர் ஒருங்கிணைப்பாளர் விஜயன் ஆகியோரது முன்னிலையில் கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாணவ மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடினார்கள். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பொங்கல் பண்டிகை அன்று காவல் துணை ஆணையாளர் பரிசுகள் வழங்குவார். செய்தியாளர்: அகமது அலி 

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி..!

 திண்டுக்கல் அருகே ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார். அவரது உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த போது கண்ணை எலி கடித்து குதறியதால், உறவினர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் பெரியகோட்டையை சேர்ந்த இளைஞர் முனியப்பன் (வயது 17), இன்று நண்பர்களோடு சந்தனவர்த்தினி ஆற்றில் குளித்தபோது பரிதாபமாக பலியானார்.  அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தபோது, இறந்த முனியப்பனின் கண்ணில் எலி கடித்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது குறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை டீன் வீர மணிகண்டனிடம் புகார் தெரிவித்தனர். அவர் டாக்டர்கள் மூலம் ஆய்வு நடத்தி எலி வரும் பகுதியை வலை வைத்து அடைப்பதாக உறுதி அளித்தார். செய்தியாளர்: அரியநாயகம் 

பத்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சேரா கூட்டாளி கைது..!

  ஜன. 10 வடசென்னை பகுதிகளில் ரவுடிசம் செய்து வந்த பிரபல ரவுடிகளான சேரா என்கிற ராஜேந்திரன் மற்றும் சோமு என்கிற சோமசுந்தரம், மற்றும் சேராமகன் கதிர் என்ற கதிராவின் கூட்டாளியான அன்பு என்ற கரிமேடு அன்பு, கடந்த பத்து வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் மீது, பல்வேறு பகுதிகளில் நில மோசடி, கட்டப்பஞ்சாயத்து, செம்மரம் கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்கள், குற்ற செயல்கள் தொடர்பாக காவல் நிலையங்களில் வழக்குகள் பதிந்து உள்ளது.  கடந்த எட்டு மாதங்களாக சென்னை பெருநகர காவல் ஆணையரின் சிறப்பு பிரிவாகிய தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு மேற்கு மண்டல ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில், ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை ஆந்திராவில் இருந்து ரெட்ஹில்ஸில் உள்ள, அவரது இரண்டாவது மனைவி பானு வீட்டிற்கு வரும்போது அதிரடியாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கம் மாநில தலைவர் டி.எம்.தருமராஜா அவர்களின் தாயார் நினைவு அஞ்சலி

மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கம் தமிழ்நாடு, மாநில தலைவர் டி.எம்.தருமராஜா அவர்களின் தாயார் தெய்வத்திரு எம்.காந்திமதி அம்மாள் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு மலர் அஞ்சலி நிகழ்ச்சி சென்னை வளசரவாக்கம் அக்க்ஷயா ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. டி.எம்.தருமராஜா,அங்குள்ள 50 க்கும் மேற்பட்ட மூத்தோர்கள் அனைவருக்கும் உணவு, மற்றும் வேஷ்டி, சேலை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் வி.பாஸ்கர், மாநில பொருளாளர் என்.சௌந்தரராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முரளி, எ.ஆர்.திருநாவுக்கரசு, தென் சென்னை மாவட்ட தலைவர் எஸ்.வி.கோபிநாத் பிஏ, துணைத் தலைவர் எம்.மதுரை இளஞ்செழியன் பி ஏ, காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் டி.டென்னீஸ்ராஜா, பொறுப்பாளர் டி‌தீபக்குமார் குப்தா, செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் சி.இமையரசு, துணை அமைப்பாளர் என்.கணேஷ் ராம், துணை பொறுப்பாளர் பி.சுரேஷ், தமிழன் டிவி ராஜா, வெளிச்சம் டிவி எஸ்.ஜெயகர், யுகம் நியூஸ் ராஜ்குமார், PM டிவி செல்வராஜ், விடியும் நேரம் மோகன், அதிர்வலை டிவி நாராயணன் மற்றும் அஜித் குமார்,...

தேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா..!

 பெங்களூரில் சர்வதேச அளவிலான தேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா,கானா, பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் கொசவப்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் 16 பேர் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.  இவர்களில் மூன்று பேர் தங்க பதக்கமும், நான்கு பேர் வெள்ளி பதக்கம், ஏழு பேர் வெண்கல பதக்கங்களை கைப்பற்றி சாதனைப்படுத்தினர். இந்நிலையில் சொந்த ஊருக்கு திரும்பிய மாணவருக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் ஜான்சன் எடின்பெர்க், தலைமையாசிரியர் செல்வநாயகம், உடற்கல்வி ஆசிரியர் தாமஸ் சேக்ஸ்ராஜ், பயிற்சியாளர் ஜெயசீலன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டு பாராட்டினர். செய்தியாளர்: அரியநாயகம் 

போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!

 பொன்னேரியில் வருவாய் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி நடைபெற்ற இந்த பேரணியை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா துவக்கி வைத்தார். உ.நா.அரசினர் கலைக்கல்லூரியில் துவங்கிய பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் போதைப்பொருளை தடுப்போம், போதை வாழ்க்கைக்கு கேடு உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.  இந்த பேரணி அண்ணா சிலை அருகில் நிறைவடைந்தது. பின்னர் அனைவரும் போதைப்பொருட்களை ஒழிக்க ஒன்றிணைவோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் வட்டாட்சியர் செல்வகுமார், நகர்மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் மற்றும் வருவாய் துறையினர், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.  செய்தியாளர்: சந்திரசேகர்