திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் திருநாளான நேற்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக பாலசுப்ரமணியருக்கு சிறப்பு ஆராதனை நடந்தேறியது. மாலை 5 மணியளவில் முருகப்பெருமான் வீரபாகுவுடன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. இதில் முதலாக, யானை முகம் கொண்ட தாரகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்தார். இதையடுத்து சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்தார். பின்னர் தன் முகம் கொண்ட சூரபத்மனை வதம் செய்தார். தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் வந்த சூரபத்மனை வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி முருகப்பெருமான் தன் வாகனமாக ஆட்கொண்டார். இந்த சூரசம்ஹார விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் சித்ராதேவி, நிர்வாக அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் சந்துரு, மு.ஒன்றிய கவுன்சிலர் பகலவன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர்: சந்திரசேகர்
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் (Media - News Company) Email : News.kakithapoo@gmail.com www.kakithapoo.com Cell : +91 9962944433 | 044 42146943