தேவூர் அருள்மிகு ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்...
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்ல முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும் அந்த வகையில் இந்த ஆண்டின் சித்திரைப் பெருவிழா கடந்த ஏப்ரல் 14 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து மின் அலங்கார ரதத்தில் அம்மன் வீதி உலா நடைப்பெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட ஊர்வலம் நடைபெற்றது. விரதமிருந்த பெண்கள் தலையில் பால்குடம் சுமந்தும், பக்தர்கள மயில் காவடி ,பால் காவடி, அலகு காவடி உள்ளிட்ட காவடிகள் காந்திநகர், பாரதியார் நகர், வ.உ.சி நகர், தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைப்பெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் கீதம்லெனின்

Comments
Post a Comment