Skip to main content

Posts

Showing posts from March, 2025

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்..! திமுக அரசும் உடந்தையா.? அண்ணாமலை கேள்வி..!

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், ஒரு மாபெரும் ஊழலை அரங்கேற்றியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. செல்வப் பெருந்தகை. இதற்கு திமுக அரசும் உடந்தையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றுவதாக அறிவித்து, அவர்கள், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம், மூலமாக, அரசுப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து மேற்கொள்ள, ரூ.524 கோடி மதிப்பில், அடுத்த 7 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாக திமுக அரசு அறிவித்திருந்தது   இதனையடுத்து, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் 54 பயனாளிகளுக்கும், சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் 33 பயனாளிகளுக்கும், நவீன கழிவு நீரகற்றும் வாகனம் வாங்கக் கடன் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில், கடந்த 12.08.2024 மற்றும் 19.08.2024 தேதிகளின் இடையே ஒரே வாரத்தில், ரூ. 65 லட்சம் வீதம், 54 பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. புதிய வங்கிக் கணக்கு தொடங்கி, செக் ...

ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.! மூடி மறைக்கும் சென்னை கமிஷ்னர்- சவுக்கு சங்கர்

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 25க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேலும் கொலை வழக்கில் திருவெங்கடம் என்ற குற்றவாளியை போலீசார் என்கவுண்டர் செய்திருந்தனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக யூடியூப்பர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கர் வீடு முற்றுகை போராட்டம் சென்னையில் நேற்று சவுக்கு சங்கர் வீட்டை துப்புரவு பணியாளர்கள் தாக்கினர். வீடு முழுவதும் மலம் மற்றும் குப்பையை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு உள்ளது. இதனை நேரடியாக அறிந்தவர் ...

தமிழ்நாடு செய்தித் துறையினர் யூனியன் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா.

தமிழ்நாடு செய்தித் துறையினர் யூனியன் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு அடையாள வழங்கும் நிகழ்ச்சி. தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் சங்க தலைவரும் மக்கள் காவலர் செய்தி துணை ஆசிரியர் ஸ்ரீதர் முன்னிலையில்,  பொதுசெயலாளர் கொளத்தூர் நண்பன் சத்யா தலைமையில் சென்னை கொளத்தூர் குமரன் நகர் நன்னலசங்க கட்டிடத்தில் 22.03.2025 மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் அகமது அலி, மாநில துணை தலைவர் அரசுமலர் பாலமுருகன், மாநில இணை செயலாளர் மகேஷ், சங்க ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ், மாநில செய்தி தொடர்பாளர் மணிவண்ணன், அலுவலக செயலாளர் ஷர்மிளா பாய், சங்க உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ரமேஷ்குமார், பன்னீர்செல்வம்,  வடசென்னை மாவட்ட தலைவர் ஆரிப், செயலாளர் ராஜேஷ், துணை தலைவரை தமிழ்மணிமாறன், துணை செயலாளர் காவல் டுடே சுரேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார், திருநெல்வேலி மாவட்ட தலைவர்  தமிழ் உதயம் ஆசிரியர் தாஸ், துணை தலைவர் கோமுராஜ், கடலூர் மாவட்ட தலைவர் செய்தி முழக்கம் ஆசிரியர் வேல்முருகன், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ச...