வேலூரில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென வானத்தில் வட்ட வடிவத்தில் புகைமூட்டம் ஒன்று தோன்றியது. இதனால் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக விரைவாக பரவியன. இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கையில், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து பெங்களூருக்கு செல்லும்போது வேலூர் மாவட்டத்தில் இரவு 4 முறை வட்டமடித்துள்ளது. இதுகுறித்த முழுமையாக வானியல் வல்லுநர்களுக்குதான் தெரியும், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டில் அந்த விமானம் வரவில்லை என்றும் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் வேலூர் மாவட்ட பொதுமக்கள் மத்தியில் திடீர் பதட்டம் நிலவுகிறது. செய்தியாளர்: வாசுதேவன்
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் (Media - News Company) Email : News.kakithapoo@gmail.com www.kakithapoo.com Cell : +91 9962944433 | 044 42146943