செங்குன்றம் ஸ்ரீதேவி பராசக்தி வீரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா காப்பு கட்டி கொடியேற்றுத்துடன் துவங்கியது..
அருள்மிகு ஸ்ரீதேவி செங்குன்றம் பராசக்தி வீரகாளியம்மன் ஆலயத்தில் 46 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஆலய தர்மகர்த்தா அருள் வாக்கு தேவி சித்தர் தவத்திரு ஆர்.ராஜா சுவாமிகள் தலைமையில் கொடியேற்றி காப்பு கட்டி சிறப்பாக துவங்கியது.ஆலய விழா குழு நிர்வாகிகள், தலைவர் ஜி.கோபி, செயலாளர் எஸ்.குமரேசன், பொருளாளர் ஜெ.ரவிச்சந்திரன், துணைத்தலைவர்கள் எஸ்.கபாலி, ஆர் பாபு, துணைச் செயலாளர் ஜெ.ராஜேந்திரன், இணை செயலாளர் எஸ்.பிரேம்குமார், ஆர்.ஹரிராம், கணக்கு தணிக்கையாளர் ஜி.அன்பு, கௌரவ தலைவர் ஆர்.பொன்னுசாமி, ஒருங்கிணைப்பாளர் பி.என்.கே.கிருஷ்ணன், கே.சுரேஷ் எம்.ஜெகன், ஆர்.மனோகர், கே.பரமசிவம், கௌரவ ஆலோசகர்கள் ஆர்.முனுசாமி, வி.கமல், வி.குப்புசாமி, பி.ராஜேஷ், டி.தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.15 நாட்கள் நடைபெறும் இத்தீமிதி திருவிழாவில் குங்கும அபிஷேகம், மங்கள சண்டி ஹோமம், ஊஞ்சல் சேவை, பால் குடம் எடுத்தல், பெண்கள் முளைப்பாரி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளுடன் ஆலமரம் பகுதியில் இருந்து அம்பாள் பூ பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு அடியார்கள் தோல் சுமந்து அம்பாள் மாடவீதி உலா நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து 05.05.20024 ஞாயிற்றுக்கிழமை அன்று அம்பாளுக்கு தூபதீப ஆராதனை நடைபெற்று . அன்று மாலை அம்பாள் தனது அடியார்களுடன் தீமித்தல் எனும் பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் சென்னை வியாசர்பாடி, சர்மா நகர், மணலி, எண்ணூர், மாதவரம், செங்குன்றம், புழல், தீர்த்தகரைம்பட்டு, புள்ளிலைன், பாடியநல்லூர், ஜோதி நகர், பவானி நகர், மொண்டியம்மன் நகர், காந்திநகர், அலமாதி, பொத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பக்தர்கள் 2000க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதம் இருந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர்.விழாவில் 15நாட்கள் இரு வேலையும் சிறப்பான அன்னதானம் வழங்கப்படும். மேலும் தீமிதி திருவிழா அன்று பல்வேறு நற்பணி மன்றங்களின் சார்பில் குளிர்பானம் வழங்கப்படும்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment