திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள வட காஞ்சி என அழைக்கப்படும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி நாயகி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவானது சுமார் ஒரு கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.யாக கலச பூஜைகளுடன் கலசநீர் மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கலச நீர் கொண்டு ராஜகோபுரம் விமான கலசங்களுக்கும் ஸ்ரீ பெருந்தேவிக்கும் வரதராஜ பெருமாளுக்கும் ஆண்டாள் ராமானுஜர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது இதில் பொன்னேரி மீஞ்சூர் செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வரதராஜ பெருமாளை தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் கார்த்திகேயன் மாதவன் ராஜசேகர் ஆய்வாளர் கார்த்திகேயன் ரோசய்யா மு.க.தமிழரசு பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஒன்றிய குழு தலைவர் ரவி மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் சுப்பிரமணி ஜெயபிரகாஷ் பட்டாபிராமன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் குப்புசாமி ரெட்டியார் ராமச்சந்திரன் ஜானகி தமிழ் உதயன் அலெக்சாண்டர் பானு பிரசாத் செல்வகுமார் டாக்டர் பரிமளம் மாரி சுப்பிரமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment