நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 14 ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து நாகை மாவட்ட இந்து அறநிலைத்துறை துணை ஆணையர் ராணி திருத்தேரை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தார். கீழ வீதியில் துவங்கிய தேரினை பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேராது 4 வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.
செய்தியாளர் கீதம்லெனின்
.jpeg)
Comments
Post a Comment