திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது முன்னதாக யாக கலச பூஜைகளுடன் மேளதாளங்கள் முழங்க கலசநீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோவில் கோபுரங்களுக்கும் சாமிக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது இதில் பழவேற்காடு மீஞ்சூர் பொன்னேரி உள்ளிட்டசுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருளை பெற்றுச் சென்றனர். கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்..
செய்தியாளர் ராதா கிருஷ்ணன்

Comments
Post a Comment