Skip to main content

எந்த படிப்பும் தாழ்ந்ததல்ல ஒவ்வொரு படிப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததே உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் MRC தாளாளர் உரை...

 அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள  தத்தனூர்   மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள், கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரி சார்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு  மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் வழக்கறிஞர். M.R. இரகுநாதன்,மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின்  இயக்குநர்கள் இரா.இராஜமாணிக்கம், முனைவர் வை.தியாகராஜன் ,  கீழப்பழுவூர் மீரா மகளிர் கல்லூரி தாளாளர் M.R  கமல்பாபு மற்றும் அன்னை தெரசா பாரா மெடிக்கல் கல்லூரியின் தாளாளர், திரு. முத்துகுமரன்,மீனாட்சி இராமசாமி பொறியியல்  கல்லூரியின் நிர்வாக இயக்குநர் முனைவர். க.செந்தில் குமரன் மற்றும் முதல்வர்கள் முனைவர் ந.மதியழகன், முனைவர் சங்கீதா சிவசங்கர், முனைவர் சம்பத், முனைவர் மாலதி, முனைவர் அன்பழகன், முனைவர் திருமுருகன்  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.10,12 ம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் எந்தெந்த துறைகளை தேர்வு செய்யலாம் என்ற விரிவான தகவல்களோடு 30 க்கும் மேற்பட்ட பேராசிரியர்களின் விளக்கவுரையோடு உயர்கல்வி  வழிகாட்டுதல் நிகழ்ச்சி  மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் 10 &12 ம் வகுப்பு முடித்த 500 க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவியர்களும் அவர்களது பெற்றோர்களும் ஆசிரிய பெருமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மதியழகன் வரவேற்புரையாற்றினார்.விழாவில் பங்குபெற்ற மாணவர்களை வரவேற்று உற்சாகப்படுத்தி பேசிய தாளாளர் இரகுநாதன் அவர்கள், உயர்கல்வியில் எந்தக் கல்வியும் மற்றொரு கல்விக்கு தாழ்ந்ததல்ல.ஆசிரியர் , மருத்துவர்கள் , பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள்,ஆராய்ச்சியாளர்கள்,  செவிலியர்கள்  என ஒவ்வொருவரும் அந்தந்த துறையில் சிறப்பானவர்களே. ஒவ்வொரு படிப்பும் அந்தந்த துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததே. எனவே எந்த ஒரு கல்வியையும் மற்றொரு கல்வியோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டாம் 

அவரவர்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ அந்தத் துறை தொடர்புடைய உயர்கல்வி பாடங்களை விருப்பமுடன் எடுத்த படித்து அந்த துறையில் சிறப்பான இடத்தைப் பெற்று சாதனைகளை புரியவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் வாழ்க்கையின் தேவைகளையும் வெற்றிகளையும் உயர்வுகளையும் பொருளாதார உயர்வுகளையும் கல்வியும் உழைப்பும்  தீர்மானிக்கும் என்று தொடங்கி பல கல்வியாளர்கள், அறிஞர்கள்,தொழிலதிபர்கள்,சாதனையாளர்களின் வாழ்க்கையையும் அவர்களின்  திறனையும் சிறப்பாக குறிப்பிட்டார்.கல்வியின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொருவரும் உயர்கல்வி பயிலவேண்டும் ..இதன் மூலம் வாழ்க்கையில் உயருதல் வேண்டும் என்றார். பெண் கல்வியின் அவசியம் , பெண்கள் வேலைக்கு செல்லுதல், சுயமாக சம்பாதிக்க வேண்டியதன் அவசியம், பெண்கள் ஏன் படிக்க வேண்டும் , கல்வியால் பெண்களின் வாழ்க்கைத்தரம் எப்படி உயரும் ,  கல்வி பெண்களுக்கு கொடுக்கும் தன்னம்பிக்கை , சம உரிமை,  பொருளாதார உயர்வு, பதவி, அதிகாரம் போன்ற பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை மிகச் சிறப்பாக குறிப்பிட்டார்.எனவே எந்த படிப்பு படித்தாலும் அதை நீங்கள் ஆர்வமுடன் படித்து அதில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வெற்றி காண வேண்டும் வாழ்த்தினார்.இயக்குநர் முனைவர். வை.தியாகராஜன் அவர்கள் நல்ல ஆளுமைமிக்க மனப்பான்மையை வளர்த்துகொள்ளுங்கள் என தொடங்கி பல்வேறு நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்தி பேசினார். தமிழகத்திலும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பொறியியல் கல்வியின் அவசியம் குறித்தும் வேலைவாய்ப்பு குறித்தும் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் உரையாற்றினார்.. மீரா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் அவர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தி பேசியது சிறப்பாக அமைந்தது.அன்னை தெரசா பாராமெடிக்கல் கல்லூரியின் தாளாளர் அவர்கள் வாழ்க்கைக்கு அவசியமாக பணத்தைவிட வீரத்தைவிட கல்வியே முக்கியம் என சிறப்பாக பேசி உரையை நிறைவு செய்தார்.இந்நிகழ்வில்  500க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின்  முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திமுடித்தனர்.இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும்  மீனாட்சி இராமசாமி பொறியியல்  கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் அரிவசந்த் அவர்கள் நன்றி கூறினார். 

செய்தியாளர் பாலு 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...