போதை பொருட்கள் எனக்கு வேண்டாம்..! நமக்கும் வேண்டாம்..! - ஆவடி காவல் ஆணையர் சங்கர் மாணவர்களுக்கு அறிவுரை..!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் கல்லூரி நாள் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா இன்று நடைபெற்றது இதில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் முனைவர் கல்லூரிமுதல்வர் தில்லைநாயகி முனைவர்கள் திருச்சேரன் சொர்ண முத்துராஜ்,சாமுவேல் செல்வராஜ் சுருளி முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கும் அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளி வழங்கி பாராட்டி பேசுகையில் போதை பொருட்கள் எவ்வளவு இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது என்றும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் போதைக்கு அடிமையாகும் போது எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.
போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறையினரின் முயற்சி மட்டும் போதாது போதை பொருட்கள் எனக்கு வேண்டாம் நமக்கும் வேண்டாம் என இளைஞர்கள் போதை பொருட்களை தொடக்கூடாது பயன்படுத்தக் கூடாது என்றும் எல்லோரும் சேர்ந்து தான் போதை பொருள் பிரச்சனையை எதிர்கொண்டு நீக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment