Skip to main content

Posts

"புதிய புரட்சிக் கழகம்" சார்பில் தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள்

மாமல்லபுரம், பிப்.13- புதிய புரட்சிக் கழகத்தின் நிறுவனத்தலைவர் டாக்டர் ஓ.இ.சங்கரின் பிறந்தநாள் விழாவாக தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஏழை, எளியோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என சுமார் 20-ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு, இதுவரை அக் கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர்.  மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நரிக்குறவர், இருளர், பழங்குடியினர் குடும்பங்களுக்கு வேட்டி, சேலை, பாய், போர்வை, தலையணை உள்ளிட்ட வீட்டு உபயோக அத்தியாவசிய பொருட்கள் உதவி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் தற்காப்பு கலைகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு, அதற்கான சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது வருகிறது.  “புதிய புரட்சிக் கழகம்” கட்சியின் இந்த நலத்திட்ட உதவிகள் தற்போது தமிழ்நாடு முழுவதும் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த ஊடகப்பிரிவு தலைவர் எம்.அஜித், எஸ்.சந்துரு உள்ளிட்டோர் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த...
Recent posts

கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு

கும்மிடிப்பூண்டி,பிப்.11:  கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் அதிமுக சார்பிலான தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஆரம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெ.ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் டி.சி.மகேந்திரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் இமயம் மனோஜ், ஒன்றிய நிர்வாகிகள் கோவிந்தம்மாள் சீனன், பாலசுப்பிரமணியம், அதிமுக அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் பி.என்.ஆர்.நாகராஜன் முன்னிலை வகித்தனர் இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான கே.எஸ்.விஜயகுமார் பங்கேற்றார். தொடர்ந்து ஆரம்பாக்கம் பகுதியில் கடைக்காரர்கள் பொதுமக்களிடம் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரங்களை  வழங்கிய முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். விஜயகுமார் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக...

மாமல்லபுரம் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாமல்லபுரம் நகராட்சி துணைத்தலைவர் ராகவன் உதவி

மாமல்லபுரம் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாமல்லபுரம் நகராட்சி துணைத்தலைவர் ராகவன் உதவி  மாமல்லபுரம், பிப்.12- மாமல்லபுரம் நகராட்சி துணைத் தலைவர் க.ராகவன் அப்பகுதி மக்களுக்கு புயல், மழை போன்ற பேரிடர் காலங்களில் உணவு, உடை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, மற்றும் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட வார்டுகளில், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து கொடுத்து வருகிறார்., இந்த நிலையில் மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பூப்பந்து விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு மாநில அளவில் விளையாட தேர்வாகினர்.  இவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை, பள்ளிக்கு நேரில் சென்று வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். செய்தியாளர் தாஸ்

வாகனம் மோதி முதியவர் உடல் நசுங்கி பலி.. பொதுமக்கள் சாலை மறியல்..

சிவகங்கை மாவட்டம் அமராவதி புதூர், கணபதிபுரம் பகுதியை சேர்ந்த பாண்டி, அங்குள்ள முனீஸ்வரர் ஆலயத்தில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார், இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தேவகோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கனரக வாகனம் டிப்பர் லாரி மோதியதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், தகவல் அறிந்து வந்த காரைக்குடி வட்டாட்சியர் ராஜா, பேச்சுவார்த்தை நடத்திய பின் உடல் பிராத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. செய்தியாளர் அண்ணாதுரை

பூந்தமல்லி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் கும்பாபிஷேகம்

பூந்தமல்லியில் உள்ள மிகப் பழமையான ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப்பெருமாள் கோயிலின் உப கோயிலான ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயில் பூந்தமல்லியில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்தக் கோயிலின் ஆஞ்சநேயர் வியாசராயரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். இந்தக் கோயிலின் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 21ஆம் தேதி வேத ப்ரபந்த பாராயணத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. 22ஆம் தேதி யாகசாலையில் கும்ப திருவாராதனம், ஹோமம், அஷ்டபந்தனம், நவகலச பூஜை, பூர்ணாஹூதி, தீர்த்த பிரசாதம் விநியோகம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று யாகசாலை கும்பாராதனம், பிரதான ஹோமம், மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலையிலிருந்து கும்பங்களில் எடுத்து வரப்பட்ட புனித நீர், கோயில் மூலவர் வீர ஆஞ்சநேயர் விமானத்தில் உள்ள கலசங்களில் வேத மந்திரங்கள் முழங்க ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளாக கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் பாபு, அ...

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

பூந்தமல்லியில் தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்.

தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணியில் பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. பூந்தமல்லி நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், நகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆகியோர் உத்தரவின் பேரில், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்கும் பணி தொடங்கியது. பூந்தமல்லி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் ஆயிரக்கணக்கான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். சில இடங்களில், நாய் கடித்த சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்தும் பணிகளில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் ஐயப்பன் ஆகியோர் நகராட்சி பணியாளர்களுடன் சென்று இந்த பணியில் ஈடுபட்டனர். இது குறித்து நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் கூறியதாவது: நகராட்சி பகுதியில் ஆதரவற்ற தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குவதும், முதியவர்கள் குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறத...

பொன்மார் முதல்நிலை ஊராட்சி போலச்சேரியில் சுதந்திரத்தினத்தையொட்டி நடைபெற்ற மாரத்தான் போட்டி

பொன்மார் முதல்நிலை ஊராட்சி போலச்சேரியில் உள்ள டிஏபிசி தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இந்திய தாய்திருநாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்திலேயே முதல் முதலாக மிக பிரம்மாண்ட மாரத்தான் போட்டியை நடத்திய 09வதுவார்டு கவுன்சிலரும்,திமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக இளைஞரணி துணைஅமைப்பாளருமான போலச்சேரிபி .என்.எஸ் .செந்தில் ! வருகின்ற சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொன்மார் DABC அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் திமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக இளைஞரணி செயலாளரும் பொன்மார் முதல் நிலை ஊராட்சி மன்றத்தின் ஒன்பதாவது வார்டு கவுன்சிலருமான போலச்சேரி பி என் எஸ். செந்தில் ஏற்பாட்டில் வருகிற ஆகஸ்ட் 15 இந்திய தாய் திருநாட்டின் சுதந்திர தின விழாவை ஒட்டியும் மற்றும் போலச்சேரி பகுதி பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும், அதனை பேணிக்காப்பதின் அவசியத்தையும் வலியுறுத்தி நடைபெற்ற போலச்சேரி மாரத்தான்-2025 போட்டியில் 05 வயது முதல் 60 வயது வரை சுமார் 500 க்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி-2025 வெகு விமர்சையாக நட...

போதை பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

    திருப்போரூர்,ஆக. 12  திருப்போரூரில், போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது.திருப்போரூர், தண்டலம் ஸ்ரீ வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை தாளாளர் மலர்விழி துவக்கி வைத்தார். போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்கள் எழுப்பியபடி, பள்ளி மாணவ -- மாணவியர், ஓ.எம்.ஆர்., சாலையில் பேரணி சென்றனர். திருப்போரூர் பேருந்து நிலையத்தில், பேரணி நிறைவடைந்தது.அங்கு, மதுப்பழக்கம், போதை பொருட்களுக்கு அடிமையாதல், தீய பழக்கங்களில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்து, மாணவ - மாணவியர் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். செய்தியாளர் : மூர்த்தி

ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருட்களை தடுக்க 249 வழக்குகள் பதிவு... 107 கடைகளுக்கு சீல்

ஈரோடு. ஆக.13- ஈரோடு மாவட்டம் சித்தோடு ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் போதைப் பொருட்கள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து பள்ளி கல்லூரி மாணவ மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சித்தோடு ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் உபயோகத்தை கட்டுப்படுத்துவதற்காக 16 வகையான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் கொடுத்த தகவல்களின் பேரில் உரிய விசாரணை நடத்தி 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததற்காக 107 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. என்றார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துற...

கூடாரம் அமைத்து தங்கிவழிபடும் மக்கள்

  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வெளிமாவட்ட பக்தர்கள் காப்புகட்டி கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருந்து வருகின்றனர். திருவிழாவை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் உட்பட 2000 பக்தர்களுக்கும் மேல் காப்பு கட்டி விரதம் இருந்து வருவது வழக்கம். பக்தர்கள் ஆடி முதல் தேதி காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். சென்னை, மதுரை, விருதுநகர், சிவகங்கை தூத்துக்குடி தேனி நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காப்பு கட்டி கோயில் அருகே கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருந்து வருகின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: சந்தன மாரியம்மன் ஆடி திருவிழாவிற்கு கடந்த பல ஆண்டுகளாக மாலை அணிந்து நேர்த்திகடன் செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டும் ஆடி முதல் தேதி மாலையிட்டு கோயில் அருகே கூடாரம் அமைத்து விரதம் இருந்து வருகின்றோம். கோயிலின் விசேஷமாக மாலை அணிவித்து கோயில் அருகே தங்கி இருப்பதால் தங்களது நேர்த்திகடன் நிறைவேறும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மாலை அணிவிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித...

நல்லூர் சுங்கச்சாவடி அலுவலகத்தை முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் தலைமையில் பாமகவினர் முற்றுகைப் போராட்டம்

  செங்குன்றம் அருகே சுங்கச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டுமுன்னாள் பாமக எம்எல்ஏ போராட்டம். மாநாட்டிற்கு சென்று திரும்பிய வாகனங்களுக்கு நள்ளிரவில் சுங்ககட்டணம் கேட்டு அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதம். வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஞாயிறன்று பூம்புகாரில் மகளிர் மாநாடு அக்கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. மாநிலம் முழுவதிலும் இருந்து வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டிற்கு கட்சி நிர்வாகிகள் வாகனங்களில் சென்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பாமக முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் தலைமையில் அக்கட்சியினர் செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மாநாட்டிற்கு சென்று விட்டு நள்ளிரவில் திரும்பிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் கேட்டு சுங்கச்சாவடி ஊழியர்கள் அடாவடி செயலில் ஈடுபட்டதாகவும், வாகனத்திலிருந்த பெண்களை ஆபாசமாக பேசியதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து கட்சி மாநாடு...

ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் காரனோடை அருகே ஆத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் 21ம் ஆண்டு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் 15 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆலய தலைவர் வி.ஏ.செல்வம் தலைமையில் நடைபெற்ற திருவிழாவில் ஆலய இளைஞர் குழு தலைவர் வீரபத்திரன் முன்னிலை விகித்தார். முன்னதாக கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் வாடை பொங்கல், திருவிளக்கு பூஜை, பூக்கூடை ஊர்வலம், சிவன் பார்வதி திருக்கல்யாணம், முளைப்பாரி ஊர்வலம், ஸ்ரீ சிவன் பார்வதி திருவீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 10 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி அளவில் அம்மன் தீச்சட்டி கரகம் ஏந்தி மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்துடன் குளக்கரையில் இருந்து புறப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். இதில்  ஆலய விழா குழுவினர்கள் எஸ்.ரவி விஜயா, என்.ராஜமாணிக்கம் விமலா, பி.மாடசாமி விஜயலட்சுமி, பாபு தரணி, முனியேந்திரன் வசுமதி, பாண்டியன் லதா, விஜயன் ரங்கநாயகி, ம...

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு,மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் 200 க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் மாநில தலைவர் குருநாதன் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.

அரியலூர் மாவட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 411 மனுக்களை பெற்று கொண்டார். இதில் ஆண்டிமடம்,கல்லாத்ததூர், தண்டலை,ராதாபுரம், காடுவெட்டி, மீன் சுருட்டி,மேலனிகுழி, இலையூர்,வாரியங்காவல், மருதூர், பொன்பரப்பி,சிறுகலத்தூர்,கொடுக்கூர், குவாகம், உடையார்பாளையம் இறவாங்குடி, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 200 க்கும் மேற்பட்ட செங்குந்தர் கைத்தறி நெசவாளர்கள் வந்து எங்கள் சமுதாயத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டவர்களுக்குவீடுகள்இல்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவை செங்குந்தர் முதலியார் ஜன சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.என் குருநாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமியிடம் அளித்தனர்.அப்போது செங்குந்தர் முதலியார் ஜன சங்கத்தின் மாநில பொருளாளர் ஜி.கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், கடலூர் மாவட்ட அவைத் தலைவர் பி.ராசு, ஆகியோர் உடன் இருந்தனர் செய்தியாளர் AVR பாலு

கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பதவியேற்பு.

  கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் , கொளத்தூர் பெரவல்லூரில் உள்ள அவரது அலுவலகத்தில் புதியதாக பதவியேற்றார். திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்ட புகாரில் முன்னாள் கொளத்தூர் மாவட்ட காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் மாற்றப்பட்டதை தொடர்ந்து.  கொளத்தூர் காவல் துணை ஆணையராக குமார் பதவியேற்றார். அவர்  நம்மிடம் கூறும்போது ரவுடியிசம் , கட்டப்பஞ்சாயத்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் கஞ்சா விற்பனை, போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் அருகில் போதை தரும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது  பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  , பொதுமக்கள் தங்கள் குறைகளையும், இதுபோன்று குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களையும் நேரடியாகயும் சொல்ல 94981-74483 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம் என தெரிவித்துள்ளார். செய்தியாளர் யுவராணி

114 ஆவது குருபூஜை விழா

தென்காசி மாவட்டம் இலத்தூர் கீழத்தெருவில் அமைந்திருக்கும் காஞ்சி மகான் தவத்திரு ஸ்ரீ சிவானந்த சிதம்பர சுவாமிகளின் 114வது குருபூஜை விழா நிகழும் மங்களகரமான 1200 ஆம் ஆண்டு விஸ்வா வசு வருடம்  ஆடி மாதம் 30 ஆம் நாள் பரணி நட்சத்திரத்தில் (13.8. 2025) வெள்ளிக்கிழமை சுவாமிகளின் 114 குருபூஜை விழா சிறப்பாக நடைபெற உள்ளது. காலை ஆறு மணிக்கு தன ஆகர்ஷன  சங்கல்ப பூஜையும், எட்டு மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் யாக பூஜையும்,  ஒன்பது மணிக்கு நல்லாசிரியர் பழனி பார்வதி மீனாட்சிசுந்தரம்  அவர்களின் "சித்தர்களின் மகிமை" என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவும், பத்து மணிக்கு  திருவாசகம் முற்றோதல் நிகழ்வும், பண்ணிரண்டு மணிக்கு அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.  இதில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு இலவச "சித்த மருத்துவ முகாம் "மருத்துவர். எஸ் நடராஜன், மருத்துவர் இ சண்முகம், மருத்துவர்.  ஸ்ரீநிதி, மருத்துவர். கே. கிருஷ்ணவேணி, மருத்துவர். கே மாரி செல்வி மருத்துவக் குழுவின் "மருத்துவ முகாம் "நடைபெறுகிறது என்று விழா குழுவினர் தெரிவித்தனர். செய்தியாளர் சந்திரன்

தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் காமராஜர் பிறந்தாள் விழா

 தேசிய முற்போக்கு திராவிட கழகம் தென்காசி தெற்கு மாவட்டம் சார்பாக கல்வி கண் திறந்த பெருந்தலைவர் ஐயா காமராஜர் திரு உருவ சிலைக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பழனிசங்கர், மாவட்ட அவை தலைவர், தென்காசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சுரண்டை சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சந்துரு சுப்ரமணியம், மகளிர் அணி மாவட்ட செயலாளர் மயிலம்மாள்,  மாவட்ட துணை செயலாளர், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முக்கூடல் மாதவன் பிரின்ஸ், மாவட்ட சமூக வலைத்தளனி துணைச்செயலாளர் பிச்சையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கடையம் தங்கச்சாமி, பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் அண்ணன் ரவிச்சந்திரன், கடையம் வடக்கு சுப்பையா சரவணன்,  கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் உதயகுமார், ஆழ்வார்குறிச்சி சண்முகம் சேட், சாம்பவர் வடகரை அண்ணன் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கருப்பு நிலா கணேசன்,  கீழப்பாவூர் ஒன்றிய துணை செயலாளர் நாகல்குளம் கண்ணன், கீழப்பாவூர் ஒன்றிய துணைச் செயலாளர் வேல்குமார், கண்ணன், அ.நா.பட்டி கண்ணன், மகளிர் அணி மாவட்டத் துணைச் செயலாளர் இசக்கியம்மாள், ஆலங்குளம் கஸ்தூரி, சைலஜா, கடையம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவ...

வாரச்சந்தை ஏலம் விடுவதாக கூறி, வாயிற்கேட்டை பூட்டிய பேரூராட்சி நிர்வாகம்

 வாரச்சந்தை ஏலம் விடுவதாக கூறி, வாயிற்கேட்டை பூட்டிய பேரூராட்சி நிர்வாகம், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அவதி....  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பேரூராட்சி அலுவலகத்தில் வாரச்சந்தை இன்று ஏலம் நடைபெற்று வருகிறது.  இதனால் காலை முதலே வாயில் கேட்டை பூட்டி வைத்துள்ளதால், வரி செலுத்த வந்த பொதுமக்கள் வரி செலுத்த முடியாமல் திரும்பி சென்று கவிதை அவதி அடைந்தனர்,  அங்கு வந்த பெண் ஒருவர் கூறும் போது, வாரச்சந்தை ஏலம் விடுவது என்றால் விடுமுறை நாட்களில் விடலாம், அல்லது வேறு இடங்களில் ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம், அதை தவிர்த்து பேரூராட்சி அலுவலகத்தின் வாயிற்கேட்டை பூட்டி வைத்துள்ளது, எங்களைப் போன்று அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருகிறது,  அதுபோன்று ஒரு அலுவலகத்தின் வாயில் கேட்டை பூட்டுவது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தெரிவித்தார். செய்தியாளர் அண்ணாதுரை

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்.

 தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில்  காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்.  அருட் சகோதரி முனைவர் ரூபா அவர்களின் தலைமையிலும் துணை முதல்வர் எம் எஸ் டி மதுரவல்லி அவர்கள் தலைமையில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.  கல்லூரி மாணவி களின் முயற்சியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சிவந்தாகுளம் தூத்துக்குடி மாணவிகளுக்கு நோட்டு, பேனா, புத்தகம், ஜாமென்ட்ரி பாக்ஸ், கல்லூரி முதல்வர் துணை முதல்வர் அவர்களால் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.  மாணவிகளின் துணைத் தலைவி மரிய ரேச்சல் பள்ளி மாணவிகளுக்கு காமராஜரின் சிறப்புகளை எடுத்துக் கூறினால். இனிப்புகள் வழங்கி இவ்விழா இனிதே முடிவுற்றது இதனை தமிழ்த்துறை தலைவி.  முனைவர். மி.ஜோஸ்பின் ரேணுகா. முனைவர்.க. ஜெய மலர் அவர்கள் ஏற்பாடு செய்தனர். செய்தியாளர் ஜேம்ஸ் ரவி

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா: தவெகவினார் கொண்டாட்டம்

 பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா: தவெகவினார் கொண்டாட்டம்  தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் தமிழக வெற்றி கழகம் சார்பில் கர்மவீரர் காமராஜர்  123 வது பிறந்த நாள் விழா பேருந்து நிலையத்தின் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தவெக கழக தலைவர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க  பொதுச் செயலாளர்  அறிவுறுத்தலின்படி  தஞ்சை மத்திய மாவட்ட வல்லம் பேரூர் கழகம் சார்பாக வல்லம் பேருந்து நிலையத்தில் அருகில்  காமராஜர் சிலைக்கு  மாலை அணிவித்து மலர் தூவி இனிப்பு வழங்கினார்கள். இந்நகழ்சியில், அமீர் பாட்சா, பாரதி, மகேஷ், சகாயம், தாவூத்,மனோகர்,உள்ளிட்ட பலநிர்வாகிகள்  கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். செய்தியாளர் இயேசு ராஜ்

இரட்டையூரணியில் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்

 இரட்டையூரணியில் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்  எம்எல்ஏ தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மதிய உணவு தந்த கல்வியாளர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 123- வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றியம் இரட்டையூரணி ஊராட்சியில் உள்ள  கர்ம வீரர் காமராஜர் திருஉருவ சிலைக்கு ராமநாதபுரம் திமுக மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்  அதனை தொடர்ந்து அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில்  ஒன்றிய நகர் கழக செயலாளர்கள் மக்கள் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். செய்தியாளர் அசோக் குமார்

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கத்தில் உள்ள எம்.எஸ்.ஜே.எம். இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் கலைஞர் அறிவித்த கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு காமராஜர் பிறந்த நாள் விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஏ.ஆர்.வி.மலையம் சம்பத் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் வி. சுமதி வாச உடற் பயிற்சி ஆசிரியர் எட்வின் அனைவரையும் வரவேற்றார். இதில் நந்தம்பாக்கம் கே.என்.பி.பள்ளி தாளாளர் வைகுண்ட ராமன், குமணன்சாவடி ஜவஹர்லால் நேரு வித்யாலயா பள்ளி தாளாளர் ராகேஷ் கமலக்கண்ணன், வணிகர் சங்கங்களின் பேரவை தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கிச்சா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமன் ராஜா வெள்ளையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காமராஜர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குவது போல இந்த...

ஆரம்பாக்கத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா

பெருந்தலைவர் காமராசரின் 123வது பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டி அடுத்த  ஆரம்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய  தொடக்க பள்ளியில் நடைபெற்றது.  நிகழ்வில் கல்வி கண் கொடுத்த கர்மவீரர் காமராஜர் திருவுருவ படத்திற்கு கும்மிடிப்பூண்டி மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சியினர்  மலர்தூவி மரியாதை செய்து வீர வணக்கம் செலுத்தினர். இதன் பிறகு மாணவ மாணவியர்ககுக்கு, கும்மிடிப்பூண்டி மேற்கு வட்டார தலைவர் மாவீரன் எஸ்.எஸ். பெரியசாமி சார்பில் இனிப்பு,எவர்சில்வர் தட்டு, வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் போட்டோ செல்வம், மாவட்ட செயலாளர்கள் கும்ப்ளி ஆர்.மணி, டூபாண்ட் வி. ராஜேந்திரன் , வட்டார துணை தலைவர்  ஏடுர்  எஸ்.வினோத், வட்டார செயலாளர் ரோஷநகரம் சி. தினகரன், எகுமதுரை  ஆட்டோ முரளி, ஆரம்பக்கம் பி.நடராஜன்.. மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் . செய்தியாளர் பிரான்சிஸ்

தென்காசி ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மூதாட்டி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி !!

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வந்த பாலவிநாயகர் கோவில் தெரு,T.N.புதுக்குடி,புளியங்குடியை, சார்ந்த  செண்பகவல்லி என்ற முதியவர் ஒருவர் தன் இரு மகனுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார் அதில்,சுமார் 40 வருட காலமாக புறம்போக்கு இடத்தில் மண்குடிசை கட்டி வசித்து வருவதாகவும் அந்த வீட்டில் உடல் ஊனமுற்ற மகள், காசநோய் வாய்ப்பட்ட கணவர் என மிகவும் வறுமையில் வயிற்று பிழைப்பு இன்றி வாழ்ந்து வருவதாகவும்.  இந்நிலையில் என்வீட்டின் மேல்புறம் உள்ள சக்திமாரியம்மன் கோவிலை விரிவுபடுத்தி கட்டிடம் கட்டி வருகின்றனர். அதனால் தெருவில் உள்ள கழிவுநீர் ஓடை அடைத்ததாகவும் பலமுறை மனு கொடுத்ததாகவும்  தெரிவித்தார். என் வீட்டை இடிப்பதற்காக  பரமசிவன், ஆவணி, பழனிச்சாமி , பாலசுப்பிரமணியன் கண்ணன், கார்த்தி, கணேசன், திருமலைச்செல்வி கவுன்சிலர்,  பாலமுரு கன்கவுன்சிலர் சகோதரர், மேலும் சிலர்   என்வீட்டை காலி செய்யவும் சொல்லுகின்றனர் எனவும் மனுகொடுத்திருந்தேன் தற்போது வரை என் மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கத்தில  போர் குழாய...

சாக்கோட்டை பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் நூற்றுக்கு மேற்பட்டோர் காயம்

 சாக்கோட்டை பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் நூற்றுக்கு மேற்பட்டோர் காயம்.... துரிதமாக செயல்பட்ட அரசுமருத்துவ குழு.... பாராட்டும் பொதுமக்கள். சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு சொந்தமான அருள்மிகு சாக்கை வீரசேகர உமையா யாம்பிகை திருக்கோவில் காரைக்குடிக்கு அருகே உள்ள சாக்கோட்டையில் உள்ளது . இக்கோவிலின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.  இதில் 500க்கும் மேற்பட்ட காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்கள் ஏற்பட்டு நிலையில், அங்கு செயல்பட்டு வந்த  புதுவயல் அரசு ஆரம்ப நிலையத்தின் மருத்துவ குழு துரிதமான சிகிச்சையாலும், மேல் சிகிச்சைக்கு 108 வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் .  மேலும் புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் சாதனா அவர்களின் தலைமையில் செயல்பட்ட மருத்துவ குழு துரித சிகிச்சை எடுத்து காயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தும், வீட்டிற்கும் அனுப்பி வைத்தனர், இதைப் பார்த்த பொதுமக்கள் மருத்துவ குழுவை வெகுவாக பாராட்டியதுடன்...

தூத்துக்குடி ஏரலில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக மூத்த நிர்வாகி சக்திவேலை நேரில் சந்தித்து நலம் விசாரித்த கனிமொழி கருணாநிதி எம்.பி! தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் ஒன்றிய கழகத் துணைச் செயலாளர், ஏரல் பேரூர் கழக துணைச் செயலாளர் சக்திவேல் அவர்களை கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரிக்குமாறு கூறியிருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஏரலில்  உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக மூத்த நிர்வாகி சக்திவேலை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணநிதி நேரில் சந்தித்து நலம், விசாரித்து நிதியுதவி தொகையை வழங்கினார். மேலும், கனிமொழி கருணாநிதி எம்.பி தொலைபேசி வாயிலாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு, முதலமைச்சர் சிறிது நேரம் திமுக மூத்த நிர்வாகி சக்திவேலிடம் உரையாடி, உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். செய்தியாளர் ரவி

ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தில் 450 க்கும் மேற்பட்ட நெசவாளர் செங்குந்தர் குல பெண்கள் இலவச மனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் செங்குந்தர் முதலியார் ஜன சங்கத்தின் வீட்டு மனை பட்டா இல்லாத நெசவாளர் செங்குந்தர் குல மக்களுக்கு  தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 3 சென்ட் இலவச மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு செங்குந்தர் முதலியார் ஜன சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.என்.குருநாதன் தலைமை வகித்தார்.இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில பொருளாளர் ஜி.கணேசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், கடலூர் மாவட்ட அவைத் தலைவர் பி.ராசு, அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் ஏ.முருகேசன்,ஜி.செல்வகுமார்,எஸ், ஆர்.வி.வெங்கடேசன், என்.நீலமேகம்,சி.காளிதாஸ் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் இலவச மனை கேட்டு 450 க்கும் மேற்பட்ட பெண்கள் மனு கொடுத்தனர்.முடிவில் மாநில இளைஞர் அணி செயலாளர் வி.வெங்கடேசன் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை செங்குந்தர் முதலியார் ஜன சங்கத்தின் பொறுப்பாளர்கள் செய்து...

20 நிமிடம் தீப்பந்தம் சுழற்றி உலக சாதனை

கும்மிடிப்பூண்டி, ஜூலை.14:  கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் டி.கே.வரதராஜ் ஆசான் சிலம்ப கலைக்கூடத்தின் சார்பில் நூறு சிலம்ப மாணவர்கள் 20 நிமிடம் தீ பந்தம் சுழற்றும்  உலக சாதனை நிகழ்வு கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் டி.கே.வரதராஜ் ஆசான் சிலம்ப கலைக்கூடம் மற்றும் யுனிகோ ஓல்ட் ரெக்கார்ட் நிறுவனம் இணைந்து சிலம்ப வீரர்கள் தீப்பந்தத்தை சுழற்றி உலக சாதனை நிகழ்வை நடத்தினர். இந்த உலக சாதனை நிகழ்வை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி. ஜெ. கோவிந்தராஜன் துவக்கி வைத்தார். சமூக ஆர்வலர் ரவி , குங்பூ பயிற்சியாளர் டி.கண்ணன் வரவேற்றனர். நிகழ்வில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், துணைத் தலைவர் கேசவன், கும்மிடிப்பூண்டி நகர திமுக செயலாளர் அறிவழகன் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து டி.கே.வரதராஜ் ஆசான் சிலம்பாட்ட கலைக்கூடத்தை சேர்ந்த 132 மாணவர்கள் தீப்பந்தத்தை சிலம்பம் போல் 20நிமிடம் சுழற்றி உலக சாதனை படைத்தனர். இவர்களது இந்த உலக சாதனை யூனிக்கோ ஓல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கும்மி...

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

சாக்கோட்டை அருள்மிகு சாக்கை வீரசேகர உமையா அம்பிகை திருக்கோவில் தேர்த்திருவிழா

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு சொந்தமான அருள்மிகு சாக்கை வீரசேகர உமையா அம்பிகை திருக்கோவில் காரைக்குடிக்கு அருகே உள்ள சாக்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது.  இக்கோயிலின் தேர்த்திருவிழா என்பது வரலாற்று புகழ் பெற்றதாகும். ஆனி மாதத்தில் நடைபெறும் திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இதன் தொடர்ச்சியாக ஒன்பதாம் நாள் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.  இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.   நானூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார்கள் பாதுகாப்பு பணியினை மேற்கொண்ட நிலையில், தேவகோட்டை சார் ஆட்சியர்ஆயுஷ் வெங்கட் , வட்டாட்சியர் ராஜா, மற்றும் வருவாய் துறையினர், மருத்துவத்துறையினர், தீயணைப்பு துறையினர், மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் அண்ணாதுரை

பாவூர்சத்திரத்தில் மனமகிழ் மன்றங்களைத் திறக்க அனுமதிக்கக் கூடாது

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தனியார் மனமகிழ் மன்றங்களைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என தே.மு.தி.கமாநில பொதுக்குழு உறுப்பினர் கருப்பு நிலா மா.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:பாவூர்சத்திரம் அருகே திருநெல்வேலி- தென்காசி நான்குவழிச் சாலையில் கீழப் பாவூர் செல்லும் விலக்கு பகுதி, பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரிச் சந்தையிலிருந்து ஆவுடையானூர் செல்லும் சாலைப் பகுதி ஆகிய 2 இடங்களில் மனமகிழ் மன்றங்களைத் திறப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன.  தனியார் பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், மார்க்கெட் என பொதுமக்கள் அதிகம் வந்துசெல்லும் பகுதிகளாக இருப்பதால் அங்கு மனமகிழ் மன் றங்களைத் திறக்கக் கூடாது என பல்வேறு சமூக ஆர்வலர்கள், கட்சியினர், பொதுமக்கள் சார்பில் ஆட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும், பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.  தனியார் மதுக்கடைகளைத் திறப்பதன்மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தவறான வழியில் செல்வதற்கு வழிவகுத்து விடக் கூடாது. எனவே, தனியார் மனமகிழ் மன்றங்களைத் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது பொதுமக்கள் சார்பாக கோரி...

ஷைன் சமுதாயக் கல்லூரியில் செவிலியர் மாணவர்களின் உறுதி ஏற்பு விழா

கும்மிடிப்பூண்டியில் உள்ள ஷைன் சமுதாயக் கல்லூரியில் லேம்ப் லைட்டிங் எனப்படும் செவிலியர் படிப்பில் முதலாண்டு சேர்ந்த மாணவர்கள் செவிலியர் படிப்பு முடித்து உடல் நலம் குன்றியவர்களுக்கு மருத்துவ சேவை அழிப்பது குறித்த உறுதி ஏற்பு விழா  நடைபெற்றது. இந்த உறுதி ஏற்பு விழாவில் ஷைன் சமுதாயக் கல்லூரி  நிறுவன தலைவரும் ஷைன் அறக்கட்டளையின் அரங்காவலருமான ஆரோன் மற்றும் அறங்காவலர் திரு அம்மு ஆரோன் தலைமை தாங்கினார்.  தொடர்ந்து 2025 ஆம் ஆண்டில் செவிலியர் படிப்பு பயில சேர்க்கை பெற்ற மாணவர்களின் உறுதி ஏற்பு விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஏஞ்சல் ,ஆதி தமிழர் விடுதலை கட்சியின் பொருளாளர் இளஞ்செழியன், கிறிஸ்தவர்கள் ஐக்கிய நலவாழ்வு சங்கத்தின் மாநில பொது செயலாளர் தயாபேஸ் , பிர்லா கார்பன் நிறுவன மனித வளத்துறை அதிகாரி பெர்னாண்டஸ், தமிழக ஊரக வளர்ச்சி திட்டத்தின் வட்டார தலைவர் நாகராஜ் மற்றும் சிவபாலன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.  விழாவின் இறுதியில் மாணவர்கள் செவிலியர் படிப்பிற்கான உறுதி ஏற்றனர். தொடர்ந்து மாணவ மாணவியருக்கு இனிப்புகள் மற்றும் பரிச...

சுதந்திர போராட்டவீரர் மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 268 வது பிறந்தநாள்விழா

 தாய் நாட்டின் விடுதலைக்காகவும் மானத்தை காப்பதற்காகவும் நாங்கள் மரணத்தை முத்தமிடவும் தயார் என்று கர்ஜித்த இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர்  மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 268- வது குருபூஜை விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் , ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தமிழ்நாடு யாதவ மாகாசபை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ராமநாதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருவுருவ படத்திற்கு. ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான  காதர்பாட்சா முத்துராமலிங்கம் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நகர் கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் யாதவ மகாசபை நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். செய்தியாளர் அசோக் குமார்

கமுதி அருகே பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 5 வகுப்பறை கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கைதட்டி மகிழ்ச்சியடைந்தனர்.  பின்னர் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் தங்கபாண்டியன்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுலைமான், தலைமையாசிரியை  சாந்தி, உதவி தலைமையாசிரியை  பாக்கியலெட்சுமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழா முடிவில் ஆசிரியர் பொன்மாடசாமி நன்றி கூறினார். இதே போல் கமுதி -கோட்டைமேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின்  புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். செய்தியாளர் அசோக் குமார்