புழல் ஊராட்சி ஒன்றியத்தில் தீர்த்தக்கரையம்பட்டு, புள்ளிலைன், அழிஞ்சிவாக்கம், வடகரை, கிரான்ட்லைன், விளாங்காடு பாக்கம், சென்றம்ம்பாக்கம் ஆகிய 7 ஊராட்சிகள் உள்ளது.இந்த ஊராட்சிகளில் உள்ள பல்வேறு பணிகளுக்கு ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் சென்றது.இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் புழல் பிடிஓ அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்ற சோதனையில் கேட்பாரற்று கிடந்த 1.11 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிஓ அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையானது நள்ளிரவு சுமார் 12மணி வரை என சுமார் 9மணி நேரம் நீடித்தது.சோதனையை முடித்து கொண்டு புறப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தனர்.பிடிஓ அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனையால் நேற்று புழல் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment