உடையார்பாளையத்தில் இல டி.என்.பி.எஸ்.சி அகாடமி மற்றும் முழு நேர கிளை நூலகம் இணைந்து குரூப் 4 க்கான இலவச மாதிரி தேர்வு நடத்தியது..!
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் முழு நேர கிளை நூலகம் மற்றும் இல டி.என்.பி.எஸ்.சி அகாடமி இணைந்து குரூப் 4 க்கான இலவச மாதிரி தேர்வு உடையார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.இதில் 250 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.தேர்வினை அரியலூர் மாவட்ட நூலக அலுவலர் இரா.ஆண்டால் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.உடையார்பாளையம் முழு நேர கிளை நூலக அலுவலர் இரா. முருகானந்தம் வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் மலர் மண்ணன், உடையார்பாளையம் விஏஓ எஸ்.ராஜா, முன்னாள் ராணுவ வீரர் சி.ரமேஷ் குமார்,எம்பளாய்மெண்ட் அலுவலக ஊழியர் கெ.சந்தியா, ரமேஷ், ஆனந்தன், மற்றும் பாரூக் முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
முன்னதாக தேர்வு காலை 10.10 க்கு தொடங்கி மதியம் 1.10 க்கு முடிந்தது.உடனே தேர்வு பேப்பரை திருத்தி மதிப்பெண் அளிக்கப்பட்டது.இதில் முதல் ணமதிப்பெண் பெற்ற மாணவர் பெரியசாமிக்கு ரூபாய் 10 ஆயிரமும்,2 ஆம் இடம் பிடித்த மாணவி சிவசங்கரிக்கு ரூபாய் 7 ஆயிரமும், 3 ஆம் இடம் பிடித்த மாணவி வானதிக்கு ரூபாய் 5 ஆயிரமும், 4 இடம் பிடித்த மாணவி பவித்ராவுக்கு ரூபாய் 3 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.தேர்வு எழுதிய அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது.முடிவில் விஏஓ இளவரசன் நன்றி கூறினார்.
செய்தியாளர் பாலு

Comments
Post a Comment