திருவண்ணாமலையில் மத்திய பேருந்து நிலையம் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பேருந்துகள் வந்து செல்கிறது. இப்பேருந்துகளில் பக்தர்கள், கிராம மக்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைத்து நிலைகளில் உள்ள மக்களும் வந்து செல்கின்றனர். ஆனால், இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் வரும் ஒவ்வொரு பேருந்துக்கும் தினசரி வரி வசூலிப்பு, கடைகள் மூலமாக கிடைக்கும் வாடகை, ஒலி ஒளி மூலம் செய்யப்படும் விளம்பரம், 3 மாநில (தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா) போக்குவரத்து கழங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கான வாடகை, இரு சக்கர வாகன நிறுத்துமிடம் என பல்வேறு வகைகளில் நகராட்சிக்கு பல கோடி ரூபாய் ‘வருவாய்’ கிடைக்கிறது. அப்படியிருந்தும் பக்தர்கள் மற்றும் பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கவில்லை. கடைகளில் குடிநீர் பாட்டில்கள் விற்பனையை அதிகரிக்க, திரைமறைவான செயலில் நகராட்சி ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இலவச கழிப்பறைகளை அடி...
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் (Media - News Company) Email : News.kakithapoo@gmail.com www.kakithapoo.com Cell : +91 9962944433 | 044 42146943