கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வசித்தவர் அமுதா (36). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான சங்கர் ஆகியோர் இருவரும் கள்ளகாதல் ஏற்பட்டது இவர்களது கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த அமுதாவின் கணவர் நாகராஜ்(35) என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். இந்த குற்றத்திற்காக மதுக்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரையும் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்டம் 1-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கின் விசாரணை இன்று முடிவு பெற்று கொலை குற்றவாளிகளான அமுதா (36) மற்றும் சங்கர் (32) ஆகியோர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.6000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார் இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமைக் காவலர் ஆனந்தகுமாரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் பட்டுராஜ்

Comments
Post a Comment