திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக இருப்பவர் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த என்.சம்பத் இவர் சோளிங்கர் சொந்த ஊரிலே வருவாய் ஆய்வாளராகவும், வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராகவும், தனது சொந்த மாவட்டத்திலே வருவாய் துறையில் பல்வேறு பிரிவினின் கீழ் பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றும் இடங்களில் எல்லாம் கரன்சி கலெக்ஷனில் பேர் போனவராம். கரன்சி மழையில் நனையும் என்ற பெயரும் இவருக்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் புரோக்கர்களால் வழங்கப்பட்டுள்ளதாக வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேசப்படுகிறது. வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட பட்டா மாறுதல் செய்ய, பட்டா வழங்க, வாரிசு சான்றிதழ் வழங்க, புறம்போக்கு குடியிருப்புப் பகுதிகளில் மின் இணைப்புக்கு சான்றிதழ் வழங்க என சான்றிதழுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு சான்றிதழும் புரோக்கர்கள் அல்லது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மூலம் தாசில்தார் என்.சம்பத் லஞ்சம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும்...
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் (Media - News Company) Email : News.kakithapoo@gmail.com www.kakithapoo.com Cell : +91 9962944433 | 044 42146943