கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் கடந்த மகாவீர் ஜெயந்தி அன்று சிலர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற தனியார் நாளிதழ் (மக்கள் மலர்) செய்தியாளர் வேலன் என்பவர் அதனை வீடியோ எடுத்துள்ளார் இதனைப் பார்த்த சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டவர்கள் செய்தியாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்து வந்த செய்தியாளர் காவல் நிலையத்திற்கு சட்டவிரோத மது விற்பனை குறித்து தகவல் அளித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று தனியார் நாளிதழ் செய்தியாளர் வேலன் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவருடன் கழுதூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளனர் அவர்கள் அந்த வழியாக வரும் தகவலை அறிந்த சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் செய்தியாளர் வேலனை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர் இதில் காயமடைந்த வேலனை வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் இதுகுறித்து வேப்பூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர் மேலும் சட்டவிரோத மது பாட்டில் விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதே இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
செய்தியாளர் விஜய்

Comments
Post a Comment