Skip to main content

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடியிருப்பவர்களுக்கு கனிமொழி எம்பி மூலம் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.! ஜமாபந்தியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோாிக்கை மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி  கூட்டத்தில் மாவட்ட வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உஷாவிடம் அளித்துள்ள நான்கு கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கடந்த 2023ல் பெய்த கனமழையால் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கின் காரணமாக ஊராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு மனைகள் சேதமடைந்தன. குடியிருப்பு மனைகளுக்கு நிவாரண உதவிதொகை வழங்கும் பொருட்டு மாப்பிள்ளையூரணி கிராம நிா்வாக அலுவகம் மூலமாக மனுக்கள் பெறப்பட்டு தகுதியுடைய நபர்களின் வங்கி கணக்கில் ரூ10 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது அவ்வாறு நிவாரண தொகை பெறப்பட்டவர்களின் 257 நபர்களின் பெயர் பட்டியல் மட்டுமே வீடு வழங்கும் வகைக்காக வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து இவ்வலுவலகத்திற்கு வழங்கப்பட்டது. அப்பட்டியல் ஆய்வு  செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு வீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நிவாரண தொகையான ரூ 10 ஆயிரம் பெற்றிருப்பவர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாக இவ்வலுவலகத்திற்கு  பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஆகையால், தகுதியான நபர்களுக்கு வீடு வழங்கும் வகையில் வெள்ளத்திற்காக நிவாரண தொகை வழங்கப்பட்டு விடுபட்ட நபர்களின் பெயர் பட்டியலை இவ்வலுவலகத்திற்கு தந்து உதவுமாறும், மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சிலுவைப்பட்டிமெயின் ரோட்டில் 190/2 என்ற சர்வே எண்ணில் உள்ள காதி கிராப்ட் வாாியத்திற்கு சொந்தமான நிலத்தினை வருவாய்துறை வசம் ஓப்படைத்து அவ்விடத்தினை மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு இவ்வலுவலகத்திலிருந்து கடந்த 3 ஆண்டு காலமாக பலமுறை கோாிக்கை மனு அனுப்பப்பட்டு வருகிறது. மேற்படி பொருள் தொடர்பாக தொடர் நடவடிக்கை மேற்கொள்வதற்காக அறிக்கை சமர்ப்பிக்குமாறு வட்டாட்சியர், தூத்துக்குடி அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பபட்டுள்ளதாக இவ்வலுவலகத்திற்கு தகவல் வரப்பெற்றது. 

ஆனால் மேற்படி பொருள் தொடா்பாக தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாளது தேதி வரையிலும் எவ்விதமான தகவலும் இவ்வலுவலகத்திற்கு வரப்பெறவில்லை. மேற்படிஇடத்தினை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்ற பொதுமக்களின் அச்சத்தினை குறிப்பிட்டும் கடந்த ஓரு ஆண்டு காலமாக இவ்வலுவலக கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்க எவ்விதமான முயற்சியும் மேற்கொள்ளாமல் எங்களது அலுவலகம் மூலம் அனுப்பப்படும் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. ஆகவே மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதியான சிலுவைப்பட்டி மெயின்ரோட்டில் 190/2என்ற சர்வே எண்ணில் காதி கிராப்ட் வாாியத்திற்கு  சொந்தமான நிலத்தினை வருவாய்த்துறை வசம் எடுத்து மாப்பிள்ளையூரணி ஊராட்சி பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகத்திடம் ஓப்படைக்க நடவடிக்கை எடுக்கும் படியும்,  மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 59 குக்கிராமங்களில் சுமார் 1.5 லட்சம் மக்கள் வகிக்கின்றன. ஊராட்சியில் உள்ள கிராமங்களில் பலர் குடியிருப்பு மனைகளுக்கு பட்டா வழங்கப்படாமல் இருக்கிறது. இலவச வீட்டுமனை பட்டா, வழங்கும் பொருட்டு கடந்த மே 2023 அன்று மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சுமார் 2000க்கும் மேலான மனுக்கள் கனிமொழி எம்.பி அவர்களால் பெறப்பட்டு மனுக்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இலவச வீட்டுமனை பட்டா வழங்க மனுக்கள் பெறப்பட்டு ஓரு வருட காலத்திற்கு மேலாகியும் இன்று வரையிலும் மேற்படி ஊராட்சி பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவது குறித்து எந்த ஓரு தகவலும் வரப்பெறவில்லை. ஆகவே இவ்வலுவலகத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு அனுப்பபட்ட மனுக்களை பாீசிலனை செய்து இலவச வீட்டு மனை கிடைக்க வழி வகை செய்து நடவடிக்கை எடுக்குமாறும்,  மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பிரதானசாலை பகுதிகளில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தரும்படி பலமுறை இவ்வலுவலக கடிதங்கள் மூலம் ேகாரப்பட்டத்திற்கிணங்க கோட்டப்பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சாலை எல்லையை அளவீடு செய்து தரக்கோாி தங்கள் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பபட்டுள்ளதாக தகவல் தொிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றளவும் சாைல ஆக்கிரமிப்பினை அகற்றம் செய்ய தங்கள் அளவீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்க படவில்லை. ஊராட்சியின் முக்கிய போக்குவரத்து பகுதிகளாக உள்ள இடங்களில் சாலை ஆக்கிரமிப்பினால் இரண்டு மாணவா்கள் விபத்தில் உயிாிழந்ததை தொிவித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதா பொதுமக்கள் தொடர்ந்து புகார் தொிவித்து வருகின்றன. ஆகவே மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியின் முக்கியமான பிரதான சாலை பகுதிகளில் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம் பொதுமக்கள் நலன் கருதி பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்கால அடிப்படையில் அகற்றம் செய்ய  கோாிய கோாிக்கைகளை நிராகாிக்காமல் மேற்படி ஊராட்சி பகுதியில் உள்ள தாளமுத்துநகர் மெயின்சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்ய நடவடிக்கை எடுத்திடவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என்று இவ்மனுவில் தொிவித்துள்ளார். தூத்துக்குடி வருவாய் ஆய்வாளர் சரவணவேல்ராஜ், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 


செய்தியாளர் அ. ரவி

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...